# கஞ்சா கருப்பு ...சிவகங்கை மாவட்டத்தில்
பிறந்து சினிமா ஆசையால்
ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்....பல
போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில்
தனக்கென
தனி இடத்தை பிடித்தவர் ....இன்று அவர்
ஒரு சொந்தப்படம் எடுக்கிறார். வேல்முருகன்
போர்வெல்ஸ் என்று அந்த படத்தின்
தலைப்பு .....படத்திற்காக சொந்தமாய்
ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக
பயன்படுத்தி இருக்கிறார் ....பின் தான்
வாங்கிய அந்த போர்வெல்
லாரியை பயன்படுத்தி தென் மாவட்ட
பகுதியில் மக்களுக்காக எந்தவித பைசாவும்
வாங்காமல் இதுவரை 55 போர்வெல் குழாய்
அமைத்து தந்து இருக்கிறார்...இன்னமும்
தந்து கொண்டு இருக்கிறார்....(ஒரு போர்வெல்
போட குறைந்தது 20,000 முதல் 30,000
வரை ஆகுமாம்)அந்த பகுதியில் எந்த மக்கள்
(ஏழை ) வந்து கேட்டாலும் அவர்களுக்கு தம்
சொந்த செலவில் போர்வெல்
போட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார் ...அது போக
தன பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம்
திறந்து இலவச
கல்வி தந்து கொண்டு இருக்கிறார் அந்த
படிக்காத மேதை ...அவரின்
பள்ளியை கவனித்து வருவது அவர்
மனைவி சங்கீதா. இவர் ஒரு physiotherapist
...உண்மையில் இந்த
செய்தி கேள்விப்பட்டு நான் மிக
மகிழ்ச்சி அடைந்தேன் ....இன்று உச்சத்தில்
இருக்கும்
நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும்
செய்யாததை இந்த படிக்காத
பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்
என்றால் .....அவரின் மனிதம்
எவ்வுளவு உயர்ந்தது ..
No comments:
Post a Comment