Monday, November 19, 2012

டெங்கு காய்ச்சலைத் தடுக்கவல்ல நிலவேம்பு மூலிகைக் குடிநீர்..!



டெங்கு காய்ச்சலைத் தடுக்கவல்ல நிலவேம்பு மூலிகைக் குடிநீர்..!

நிலவேம்பு (Andrographis paniculata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடியாகும். கைப்புச் சுவையுடைய...
தான இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும். இச்செடி இரண்டு முதல் மூன்று அடி வரை நிமிர்ந்து வளர்கிறது. இதன் கக்கத்திலிருந்து உருவாகும் பூக்கம் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும்.

சித்த மருத்துவத்துத்தின் அடிப்படையில் மூலிகை குடிநீரை டெங்கு வந்தவர்கள் மட்டும் இன்றி, வராமல் தடுப்பதற்கும் பயன்படுத்தலாம். தொடர்ந்து 7 நாட்களுக்கு மூலிகை குடிநீரை குடித்தால், டெங்கு மட்டுமின்றி, பன்றிகாய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களும் வருவதை முற்றிலும் தடுக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. ஒவ்வொரு சீதோஷ்ண நிலை மாறும் சீசனிலும் நிலவேம்பு குடிநீரை குடிப்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.

No comments:

Post a Comment