மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன்
மருத்துவர் கா. கணசேன் அரியலூரில் தமிழ் அன்னை மருத்துவமனை நடத்தி வருகிறார் . ஆங்கில வழி மருத்துவமுறையை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1968 ல் படித்து முடித்தவர் இவர் . தற்போது இவருக்கு வயது 71 . மருத்துவராக இருந்தாலும் தமிழ் மீது அதீத பற்று கொண்ட இவர் தன்னுடைய மருத்துவ சீட்டையே தமிழில் எழுத துவங்கி உள்ளார் என்றால் பாருங்களேன் . ஏறத்தாள 17 ஆண்டுகளாக இவர் தமிழ் மொழியில் தான் மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தமிழில் பேசுமாறு அறிவுறுத்துகிறார். ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார் . இவரிடம் வரும் நோயாளிகளும் இவரிடம் தூய தமிழ் மொழியிலேயே உரையாடுகிறார்கள். மருந்து சீட்டில் தமிழர்களுக்கு தமிழ் உணர்வு ஏற்படும்படியான வாசகங்களை எழுதி உள்ளார் .
...

தமிழன் நீ என்றால் ஆங்கில கலப்பின்றி இனிய தமிழில் பேசு ' போன்ற வாசகங்களை எழுதியிள்ளார் .
தன்னுடைய மருத்துவ பட்டப் படிப்பையும் தமிழில் மொழி பெயர்த்து சுருக்கியும் எழுதி உள்ளதை பார்க்கலாம் . மேலும் தமிழர்களின் தி. பி. திருவள்ளுவர் ஆண்டையும் எழுதுகிறார் . கிபி ஆண்டையும் குறிப்பிடுகிறார் . தமிழ் ஆண்டையும் தமிழ் மாதத்தையும் குறிப்பிட்டு எழுதும் உலகில் ஒரே மருத்துவர் இவராகத் தான் இருப்பார்.
மேலும் ஆங்கில மருத்துகளை தமிழில் எழுதும் போது ஒலி அளவில் வேறுபாடு வரும் . இதனால் மருந்து வழங்குவோருக்கு குழப்பம் ஏற்படும் . அக் குழப்பத்தை நீக்கும் வகையில் மருந்து சீட்டில் இடது புறத்தில் ஆங்கில ஓசைக்கு நிகரான தமிழ் வரி வடிவத்தையும் குறிப்பிட்டு காட்டியுள்ளார். இப்படியான தமிழ் பற்று உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று நாம் கேட்கையில் , அவர் 'எனக்கே தெரியவில்லை தமிழ் பற்று எனக்கு இப்போது முற்றிவிட்டது' எனக் கூறினார். அருகில் உள்ள ஸ்டார் மொபைல் என்ற அலைபேசி கடைக்கு விண்மீன் கைபேசியகம் என்று தமிழ் பெயராக மாற்றுமாறு அறிவுரை செய்துள்ளார் .
யாரை பார்த்தாலும் தூய தமிழில் உரையாட வலியுறுத்துகிறார். 'தமிழா நீ தமிழில் பேசு' என்ற நூலையும் இப்போது வெளியிட உள்ளார் இவரை போன்ற சிறந்த மொழிப் பற்றாளர்கள் இருக்கும் வரை தமிழுக்கு என்றுமே அழிவில்லை என்பது மட்டும் உறுதி. மருத்துவத்துறையில் ஆங்கிலம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது என நினைபவர்கள் இவரை பார்த்து திருந்த வேண்டும் . தமிழ் மொழியை மருத்துவத்துறையில் வளர்க்க வேண்டும் . இவருக்கு சிறந்த தமிழ் பற்றாளர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவிக்க தமிழர் பண்பாட்டு நடுவம் முடிவு செய்துள்ளது. விரைவில் மருத்துவர் கணேசன் அவர்களின் படத்தை வெளியிடுகிறோம் . வாழ்க தமிழ் !

No comments:
Post a Comment