Sunday, November 4, 2012

உழவன் உணவகம் மதுரை



உழவன் உணவகம் மதுரை
வெளித்தோற்றத்தை வைத்து பெரிய ஓட்டல்களுக்குள் நுழைந்து மொக்க சாப்பாட்டை சாப்பிட்டு தண்டம் அழுதுவிட்டு வந்திருப்போம். ஆனால் சமயங்களில் பெரிய ஓட்டல்களில் கிடைக்காத ருசி இது போன்ற கடைகளில் கிடைக்கும்.

இந்த உணவகத்தில்... தினை, கம்பு, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களில் செய்யப்படும் பாரம்பரிய உணவுகள் மற்றும் மூலிகை உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்திப்பழ அல்வா, முள்முருங்கை தோசை,
செம்பருத்தி இட்லி, குதிரைவாலி பொங்கல், தினை சேவு, பனியாரம்... என நீளும் உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்து வருகிறார்கள்.
...

இங்கு சாப்பிட்ட பிறகுதான் நாம் எவ்வளவு ஆரோகியமான உணவுகளை காலபோக்கில் விட்டு இருக்கிறோம் என்று தோன்றியது.

இந்த உணவகம் புதிய நத்தம் ரோட்டில் அமைந்துள்ளது. பெரிய பில்டிங் என்று நினைக்காதீர்கள், ஆனால் நன்றாக உள்ளது.

No comments:

Post a Comment