Thursday, November 29, 2012

நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்???






இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்.நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட்ரின்.

அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமானியாக நியமிக்கப்பட்டார்.
...

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி. இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம்.

கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால் எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட்.

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்.

உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!



தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

...
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....

Tuesday, November 27, 2012

ரஜினியின் தத்து தந்தை


 
 
 
இவரை பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, இவர்தான் ரஜினியின் தத்து தந்தை -- அதிர்ச்சி அடையாமல் முழுவதும் படியிங்கள், ஆச்சிரியபடுவிர்கள்.

இவர் பெயர் கல்யாணசுந்தரம், இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், 30 வருடங்கள் நூலகராக பணியாற்றியவர், அவர் சம்பாரித்த அனைத்து பணத்தையும் ஏழைகளுக்காக கொடுத்தவர். தன் தேவைகளுக்காக ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர். உலகிலேயே சம்பாதித்த அணைத்து பணத்தையும் சமூக சேவைக்கு வழங்கிய முதல் நபர் இவர் தான்.

மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர்.

நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்

அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர்.

இவரை பாராட்டி ஐ நா சபை "one of the Outstanding People of the 20th Century " என்ற பட்டமளித்து கவரவித்துள்ளது. அமெரிக்கா இவருக்கு "Man of the Millennium " என்று பட்டமும் 30 கோடி பரிசு பணமும் வழங்கியது அந்த 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து விட்டார்.

இவருடைய பொது சேவைகள்

1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்

2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

இவரை பற்றி கேள்வி பட்ட நம் தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி சிறிய அறையில் தங்கியிருக்கிறார்.

தான் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் வெளிய சொல்லாத நம் தலைவர், இதையும் வெளிய சொல்ல வில்லை, பின்னர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களே ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை பாருங்கள்.

நிருபர் : “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்?”

ஐயா : ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள்? பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும்? அது இயல்புதானே? எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்!”

நிருபர் : “உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்”

ஐயா : “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்?”

நிருபர் : “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்”

ஐயா : “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது”

நிருபர் : “என்னது..! ஏழரை ரூபாய்க்கு செருப்பா?!”

ஐயா : “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே. நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்!"

நிருபர் : வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்

ஐயா : "தப்பு! சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்."

நிருபர் : “என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா?”

ஐயா : “உண்மையா! துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா? கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு!”

இவர்தான் திரு. பாலம் கல்யாண சுந்தரம்.

பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்) :

தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.

மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தால் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.

இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.

இவரை மாதிரி இருக்கிற நல்ல மனுஷங்க நாலு பேருக்கு தெரியணும். நம் தலைவரின் மனதும் அவரது நற்பண்புகளும் நமக்கு தெரிந்ததே அனால் இவரை போன்ற சூப்பர் ஸ்டார்கள் தெரியாமலே சென்று விடுகிறார்கள், அவரை நாம் இங்கு நம் தலைவர் சார்பாக, அவரின் தத்து தந்தையை கவுரவிப்போம்

Sunday, November 25, 2012

கல்விமுறை



கோடி கோடியா கொட்டி கிரிக்கட் டீம் ஏலம் எடுப்போம்....
அரசாங்கமே சாரயக் கடையை தெருவுக்கு ஒன்னா திறக்க சொல்லுவோம்....கல்வி நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்துட்டு பணம் கட்டியே அழிஞ்சு போவோம்....

இதற்கு காரணம்
நான் என்ன கஷ்டபட்டாலும் என் புள்ள இங்கிலீஸ்கான்வண்ட்ல படிக்கனும்.... என்ற எண்ணமே...

அப்போ இல்லதவன் புள்ளயெல்லாம் இப்படி தெருவுலதான் படிப்பாங்க...

இதுக்கு தீர்வு:-
எல்லா கல்வி நிறுவனங்களையும் அரசு ஏற்கனும்.....
கல்வியை விற்பனை பொருளாக மாற்றுபவனுக்கும் தண்டனை கொடுக்கனும்...
படிப்பில்(படிப்பிலாவது) ஏழைக்கு பணக்காரனுக்கு என்ற பாகுபாடு இருக்ககூடாது.
இந்தியா முழுவதும் சமமான கல்விமுறை... படிப்பதற்கு புத்திகூர்மையும் திறமையும் மட்டும் போதும் பணம் பொருட்டல்ல என்ற நிலைக்கு மாற வேண்டும்.... மாற்ற வேண்டும்..
இந்த ஒரு மாற்றம் போதும் உலகமே திரும்பி பார்க்கும் இந்தியாவை!!!!...

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!



பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இ...
ருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

Thursday, November 22, 2012

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)



கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்...
தில்கொள்ள வேண்டும்.

எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?

அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

Wednesday, November 21, 2012

ரசிகர்களுக்கு கவுண்டர் சொல்லும் ஒரே அறிவுரை



தலைவனாவது ரசிகனாவது....

''நான் காசுக்காக நடிச்சேன்; நீங்க சந்தோஷத்துக்காகப் பார்த்தீங்க. நமக்கு உள்ள உறவு அவ்வளவுதான்; தியேட்டரோடு முடிஞ்சுபோச்சு. சும்மா தலைவன் - ரசிகன்னு எல்லாம் சொல்லி ஏமாத்திக்காதீங்க. குடும்பத்தைக் கவனிங்க. அதுதான் முக்கியம்!'' - தன்னைப் பார்க்க வெறியோடு வரும் ரசிகர்களுக்கு கவுண்டர் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான்!

டெங்கு வராமல் தடுக்க




தற்போதைய சூழ்நிலையில் இன்று மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனை " டெங்கு காய்ச்சல் " என நவீன மருத்துவத்தால் சொல்லப் படும...
் ஒற்றைச்சொல்

இதற்கு காரணமான உயிரனம் " கொசுவாம் "

எனவே தமிழக அரசு மட்டுமல்ல, நவீன மருத்துவத்தாலும் அறிவுறுத்தப் படுவது :

1. சுற்றுப் புறங்களில் நீர் சேர விட வேண்டாமாம்
2. கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாகமூடி வைக்க வேண்டுமாம்
3. வைரஸ் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும்.அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்கவேண்டும்.
4.முகக் கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டுமாம்
5 கொசுக்களை அழித்து விட இரசாயன புகை வேண்டுமாம்
மேலும் பற்பல கதைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு அதிகாரிகளையும் கூற வைத்துக் கொண்டிருக்கிறது.


அவர்களுக்கும், பொது மக்களுக்கும் எழுப்பப் படும் முக்கிய கேள்வி?

1. நரிக் குறவர்கள், மலை வாழ்மக்கள் ஆகியோர் கொசுவோடு வாழ்கிறார்களே அவர்களுக்கு என்றாவது இது போன்று வந்ததுண்டா?

2. கொசுக்களை அழிக்க இரசாயன புகை அடித்து அதை கொல்ல முடியுமா? ( அது இரவு உயிரனம் ). அந்த புகையால் கொசுவை உண்ணும் தட்டானும், சுவாசக் கோளாரால் மனிதனும் தான் பாதிக்கப் பட்டான் என்பது தெரியுமா?

3. கொசு என்பது உணவு சங்கிலியிலுள்ள தட்டான், தவளை, சிட்டுக்குருவி, மீன் மற்றும் பல உயிரனங்களின் உணவு . இதை மட்டும் அழித்து விட்டால் உணவு சங்கிலியில் ஒரு கன்னி விலகி விடாதா?

4. நாம் சுவாசிக்கும் காற்றில் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்கிறதே அதை சுவாசிக்கும் போது உடலில் வைரஸ் கிருமி பரவி பாதிப்பை ஏற்படுத்தாதா? முகக் காவசத்தால் நாம் பாதுகாக்கப் படுகிறோமாம்?

5. குருதியை தானமாகப் பெற்று அதை நோயாளிக்கு
செலுத்தினால் சரியாகி விடுமா?


டெங்கு மட்டுமல்ல, எந்த ஒரு நோயானலும் அதற்கு முக்கியமான காரணம் " நோய் எதிர்ப்பு சக்தி " நம்மிடம் இல்லை என்று தான் பொருள்.

அதை சரி செய்வது மட்டுமே சிறந்த வழி.

அதற்கு நில வேம்பு கஷாயம் தினமும் -காலை மாலை 100 மிலி வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் டெங்கு முதலான வைரசினால் பரவக்கூடிய காய்ச்சலை தடுத்து விட முடியும் ..

டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய இடத்தில் உள்ளவர்கள் ,,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

இந்த நில வேம்பு கஷாயம் -குடிநீர் எளிதாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் -சித்த மருத்துவ பிரிவில் -இலவசமாக கிடைக்கும்

நில வேம்பு கஷாயம் கசப்பு சுவை உடையது ..கசப்பை தாங்காதவர்கள் பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம் ..அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம் .

மேலும் மாதுளை, ஆரஞ்சு, நெல்லி போன்றவைகளை உண்ணும் போதும் " நோய் எதிர்ப்பு சக்தி " அதிகரித்து சிக்கலில் இருந்து விடுபட முடியும்.

மேலும் விபரங்களுக்கு : 93674 21787 ( மாறன் ஜி, சிவகாசி ) 98430 77693 ( கிரிதரன்)

ராஜபாளையத்தில் ஒரு உத்தம ராசா....



ராஜபாளையம்
மண் எப்படியோ அதே போல மக்களின் மனதும் அப்படியே

காட்டை திருத்தி நாடாக்கியவர்கள் நிறைந்த மண், தென்மாவட்டங்களிலேயே தொழில்வளம் நிறைந்த வளமையான பூமி
காவல் காப்பதற்கு ஏற்ற நாய்கள் வாங்கவேண்டுமானால் அனைவரது நினைவிற்கும் வருவது ராஜபாளையமே

தியாகிகளும், நாட்டிற்கு உழைத்த நல்லவர்களும், கொடைத்தன்மை மிக்கவர்களும் நிறைந்த புண்ணிய பூமியும் கூட
மதுரையில் இருந்து குற்றாலம் போகிறவர்களுக்கு சீசனுக்கான தூரலைத் தந்து ரம்மியமாக வரவேற்பது ராஜபாளையமே.

இப்படிப்பட்ட ராஜபாளையத்தில் குடிநீர் பிரச்னை இருப்பது நிறைய பேருக்கு தெரியாது, ராஜபாளையத்தில் இருந்து ஐயனார் கோயில் போனால் அங்குள்ள சிறிய நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரை நம்பித்தான் ராஜபாளையம் உள்ளது. இந்த அணைக்கட்டோ ஐயனார் கோயிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில் பெய்யும் மழையை நம்பியே உள்ளது.
ஆனால் மாறிவிட்ட இயற்கை சூழ்நிலையில் மழையை தற்போது முழுமையாக நம்ப முடியவில்லை.

இதன் காரணமாக வறண்டுவிட்ட அணைக்கட்டில் இருந்து தண்ணீர் பெறமுடியாத சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டுவிடும். அப்போது மக்கள் குடிநீரின்றி ரொம்பவே சிரமப்படுவார்கள்.
தண்ணீருக்காக இவர்கள் விடும் கண்ணீரை துடைப்பதற்காக, அணைக்கட்டை ஒட்டியுள்ள பகுதியில் பண்ணை வைத்துள்ளவர்கள், தாங்களே முன்வந்து தங்களது கிணற்று நீரை வழங்க முன்வந்தனர். அவர்களில் முதன்மையானவர்தான் ராமசுப்பிரமணிய ராஜா.

ராஜபாளையத்தில் இரண்டாவது தலைமுறையாக மின்சாதன பொருள் விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் ராமசுப்பிரமணிய ராஜா, தனது தந்தை அழகர்ராஜாவின் சந்தோஷத்திற்காக, ஐயனார் கோயில் போகும் வழியில் பெரிய தோப்பு ஒன்றை வாங்கிப்போட்டார்.
அந்த தோப்பில் மோசமான நிலையில் இருந்த கிணற்றை பெரும் செலவு செய்து சீரமைத்தார், கிணற்றுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம், சீரமைப்பு என்று பலரும் கேட்டபோது கிடைக்காத பதில் சீரமைத்து முடிந்த பிறகு கிடைத்தது. ஆம் சுற்றுபக்கம் எதிலும் இல்லாத அளவிற்கு தண்ணீர் நன்றாக ஊற்றெடுத்தது.

கிணற்றில் நீர் நிரம்பி இருந்ததால் தோப்பில் வாழை, தென்னை, மா என நிறைய மரங்களை வைத்து மகசூல் பார்த்தார். இந்த நேரத்தில்தான் ராஜபாளையத்தை குடிநீர் பிரச்னை வாட்டி எடுத்தது.
கொஞ்சமும் யோசிக்காமல் தனது கிணற்று நீரை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று இலவசமாக வழங்கினார். ஒரு லாரியில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் ஒரு நாளைக்கு முப்பது லாரி தண்ணீர் வரை எடுத்துச் செல்கிறார்கள். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல அறுபது நாள் வரை எடுத்துச் சென்றார்கள். இதனால் ராஜபாளையத்தில் குடிநீர் பிரச்னை ஒரளவு குறைந்தது.

இது நடந்து பத்து வருடம் இருக்கும், அதன் பிறகு கடந்த பத்து வருடங்களாக எப்போதெல்லாம் ராஜபாளையத்திற்கு குடிநீர் பிரச்னை என்றாலும் உடனே இவரது கிணற்று நீருக்கு லாரிகள் படையெடுத்துவிடும்.
ஒரு வருடம் மோசமான குடிநீர் பிரச்னை, கொஞ்சம் கூடுதலாகவே தண்ணீர் எடுத்துச் சென்றார்கள், இப்படியே தண்ணீர் எடுத்தால் தோட்டத்தில் உள்ள பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடிவிடும் ஆகவே எடுத்த வரை போதும் என்று சொல்லுங்கள் என்று பண்ணையாட்கள் ராமசுப்பிரமணிய ராஜாவிடம் கூறியபோது, குடிநீர் இல்லாமல் மனித உயிர்களே வாடும் போது பயிர்களா முக்கியம் என்று சொல்லி தடையின்றி தண்ணீர் கொடுத்தவர்.

இத்தனை வருடங்களாக இவர் தண்ணீர் கொடுத்து வந்தாலும், இவர்தான் தண்ணீர் கொடுக்கிறார் என்று பல அங்குள்ள பலருக்கே தெரியாது, காரணம் கொடுக்கும் இவரும் சொல்லிக் கொண்டது இல்லை, வாங்கும் நகராட்சியும் வெளியே சொன்னது இல்லை.
தண்ணீர் கொடுப்பதோடு நின்றுவிடாமல் தண்ணீரை எடுத்துச் சென்று சுத்திகரிப்பு செய்யும் நிலையத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு, அங்கு இருக்கும் பணியாளர்களை உற்சாகப்படுத்துவார்.

நான் செய்யுறது சாதாரண காரியமுங்க எனக்கு எந்த நன்றியும் வேண்டியதில்லீங்க... நன்றியெல்லாம் இறைவனுக்கும், இயற்கைக்கும் செலுத்துனா போதுமுங்க என்று சொல்லும் ராமசுப்பிரமணிய ராஜாவை வாழ்த்த நினைப்பவர்களுக்கு அவரது எண்: 09842163864.

Tuesday, November 20, 2012

திருச்சி ஏர் போர்ட்ல நடக்கும் அக்கிரமம்..,



திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்த...
ால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்! இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!



சம்பவம் ஒன்று.
விமானத்தை விட்டு இறங்கி ஒரு பேருந்தில் கொண்டு போய் குடிநுழைவு வாசலில் ( Immigration Check point ) இறக்கிவிட்டனர். என்னதான் அடிக்கடி வந்துபோனாலும் விமானத்தில் ஏறியதுமுதல் சொந்த பந்தங்களை காணும் ஆவல்தான் வீடு போய் அவர்களை பார்க்கும்வரை இருக்கும்! ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான்! அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம்! ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் கொடுமை!

நாங்கள் வரிசையில் நிற்கும்போதே ஒருவர் உள்ளே இருந்து வந்து ஒரு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டே வந்தார், உடனே அவர் பெயர் சொல்லி அழைத்த நபர் தன் மனைவியோடு வரிசையின் கடைசியில் இருந்து வந்து எந்தவித கூச்சமும் இல்லாமல் வாயெல்லாம் பல்லாக வரிசையில் நிற்பவர்களை கடந்து அந்த ஊழியரை பின்தொடந்து சென்றார்! அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர்! அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார்! எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது! அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று! அப்படியே உறவு இல்லையென்றாலும் இதேபோல் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்!

அதாவது, நம்மை வரவேற்க வந்தவர்கள் இதற்கென சிலரை பிடித்து தள்ளுவதை தள்ளி நாம் பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும், அவர்களும் கடமை தவறாமல் நம்மை வரிசையில் நிற்கவிடாமல் உறவு என்று சொல்லி அழைத்துவிடுவார்கள்! இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், சிங்கபூர் நான் பிழைக்க வந்த நாடுதான், ஆனால் நிரந்தரவாசியாக இருந்தால்கூட போதும் எந்த நாட்டிற்கு போனாலும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் குடிநுழைவுக்கு எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம், எனது இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து ஆட்டோ ஸ்கேனிங்கில் வந்து விடலாம். ஆனால் சொந்த நாட்டில் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துகொண்டு இந்த அவலங்களை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

சம்பவம் இரண்டு.

ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து வந்தால் அடுத்து லக்கேஜ் கலெக்சன். இந்த முறை எனக்கு ஒரே ஒரு செக் இன் லக்கேஜ் மட்டுமே, இங்கு ஐ.டி. ஷோவில் வாங்கிய ஒரு LED T.V . இங்கு அதை செக் இன் செய்து கன்வேயரில் அனுப்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், இதுபோல எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களுக்கு தனி கன்வேயர்! ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங்?! அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! சரி.. அதைப்பற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு! பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த காரணங்களால் டிவி போன்ற ஹேண்டில் கேர் ஐட்டங்களை கன்வேயரில் அனுப்பாமல் தனியாக சைடில் உள்ள வாசல் வழியாக எடுத்து வைப்பார்கள், எனது டிவி யையும் எடுத்து வைப்பார்கள் என்று காத்துகொன்டிருந்தேன், ஆனால் எடுத்துவைத்தபாட்டைக் காணும்! ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து " உங்களது என்ன பொருள் சார்?" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன்! ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார்! வேகமாக வெளியில் வந்து " இருக்கு சார், கொஞ்சம் கவனிங்க எடுத்துட்டு வர்றேன்" என்றார்!

எனக்கு முதலில் புரியவில்லை, பின்னர்தான் கவனித்தேன் அருகில் இருப்பவர்கள் நூறு ரூபாயை அவர் கைகளில் திணித்துவிட்டு தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டனர்! நான் அவரிடம் கேட்டேன் " ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா? எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை? என்றேன், அவரும் " சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே வச்சு சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ் ஆயிருச்சுன்னு சொல்வாங்க" என்றார்! அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன்! இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் " தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா? என்றார்! இத்தனையும் கன்வேயர் ரூமுக்குள் இருந்த ஒரு கஸ்டம் ஆபிசர் நன்றாக கண்காணித்துக் கொண்டிருந்தார்! யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று! கூட்டுக்கொள்ளை!

சம்பவம் மூன்று.

டிவியை எடுத்துகொண்டு அடுத்து சுங்கச் சோதனை! கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள்! எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப் பில் கொடுத்துவிடுவார்கள்! ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது! சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால் வந்து மெதுவாக " தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர்! அவர் இப்ப போயிருவார், அவர் போனதும் 2000 மட்டும் கொடுத்திட்டு உங்க டிவிய எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்!

மேலும் " நேரம் காலம் தெரியாம இங்க வந்து உக்காந்துகிட்டு எங்க பொழப்புல மண்ண போடறான்" என்று அந்த சீனியர் ஆபிசரையும் திட்டிக்கொண்டே சென்றார்! இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே " உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு! சரி நீ ஆணியே புடுங்க வேண்டாம்னு முழு தொகையும் கட்டிட்டு டிவியை எடுத்துக்கிட்டு வெளில வந்துட்டேன்!

சம்பவம் நான்கு.

எல்லாத் தொல்லைகளும் முடிந்து அப்பாடான்னு வெளில வந்து லக்கேஜ் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு திரும்பினா, நான் கொண்டுவந்த ட்ராலிய வாங்குறதுக்காக ஒரு ஊழியர் தயாராக நின்றார்! பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி! ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், " என்னப்பா என்ன வேணும்?" என்றேன், "பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்" என்றார்! நானும் விடாமல் " போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க?" என்றேன்,

" என்ன சார் நீங்க? ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப் போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க?" என்றார் சாதரணமாக! எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன் " அண்ணே. இன்னும் சிங்கபூர்ல தினக்கூலிக்கு வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஒரு நாள் சம்பளமே 18 வெள்ளிதான்! இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும் ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்" என்றேன்! அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார்! கண்டிப்பாக கெட்ட வார்த்தையில் திட்டியபடியே சென்றிருப்பார்!

சம்பவம் ஐந்து.

எல்லாவற்றையும் கடந்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வத்தோடு விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், கொஞ்ச தூரத்தில் போலிஸ் செக் போஸ்ட்! அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை! டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் " என்ன புதுசா? கவனிச்சிகிட்டு போய்க்கிட்டே இருங்க, ஐயா உள்ளதான் இருக்காரு" என்றார்!

உடனே என் மாமாவும் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டவும் " ஓக்கே ரைட்..போய்க்கிட்டே இருங்க" என்று கை காட்டி அனுப்பி வைத்தார்! நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பார்த்துக் கொண்டிருந்தார்! மாமாவிடம் கேட்டேன் " நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க?" என்று, "என்ன பண்ணுவாங்க? சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கார்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க" என்றார்! அரசாங்க அதிகாரிகளைப் பற்றிய மக்களின் இந்தப் பயம்தான் அவர்களை மேலும் லஞ்சமயமாக வாழவைத்து கொண்டிருக்கிறது!

சம்பவம் ஆறு.

விடுமுறையை சந்தோசமாக கழித்துவிட்டு திரும்ப சிங்கை வர அதே திருச்சி விமான நிலையம்! சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை! ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது! இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை! இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே! நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம்! ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து உள்ளே போகும் முன் ஒரு கஸ்டம் ஆபிசரும் அவருக்கு துணையாக ஒரு போலிசும் இருந்து பாஸ்போர்ட்டை செக் செய்து அனுப்புவார்கள்.

என் பாஸ்போர்ட்டை வாங்கி புரட்டிப் பார்த்த அந்த போலிஸ் " என்ன தம்பி.அடிக்கடி வந்து போவீங்க போல? உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்! அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில் ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை என் பின்னாடியே வந்துவிட்டார்! " தம்பி..கவனிச்சிட்டு போங்க" என்று! திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன்! உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரும்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார்! என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள்? பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள்! இவர்களுக்கு ஏன் இந்தப் பிழைப்பு?


இந்த நீண்ட கட்டுரையை படித்து முடிக்கும் உங்களுக்கே இவ்வளவு ஆயாசமாக இருக்கும்போது, இதை ஒவ்வொரு பயணத்திலும் அனுபவிக்கும் பயணிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்! பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள்! இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம்! லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் சேர்க்கிறோம்! லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார்! லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது! சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர்! ஆக மொத்தம் இந்தியாவிற்கு தேசிய வியாதி என்று ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு சரியான தேர்வு இந்த லஞ்சம்!

கழுகிற்காக வைகை

Monday, November 19, 2012

டெங்கு காய்ச்சலைத் தடுக்கவல்ல நிலவேம்பு மூலிகைக் குடிநீர்..!



டெங்கு காய்ச்சலைத் தடுக்கவல்ல நிலவேம்பு மூலிகைக் குடிநீர்..!

நிலவேம்பு (Andrographis paniculata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடியாகும். கைப்புச் சுவையுடைய...
தான இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும். இச்செடி இரண்டு முதல் மூன்று அடி வரை நிமிர்ந்து வளர்கிறது. இதன் கக்கத்திலிருந்து உருவாகும் பூக்கம் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும்.

சித்த மருத்துவத்துத்தின் அடிப்படையில் மூலிகை குடிநீரை டெங்கு வந்தவர்கள் மட்டும் இன்றி, வராமல் தடுப்பதற்கும் பயன்படுத்தலாம். தொடர்ந்து 7 நாட்களுக்கு மூலிகை குடிநீரை குடித்தால், டெங்கு மட்டுமின்றி, பன்றிகாய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களும் வருவதை முற்றிலும் தடுக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. ஒவ்வொரு சீதோஷ்ண நிலை மாறும் சீசனிலும் நிலவேம்பு குடிநீரை குடிப்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.

கால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?




ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.

அப...
்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான, ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையை பற்றி நீண்ட
விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை, பிரிட்டிஷாரை சார்ந்திருக்கவும், அவர்களுக்கு சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்திய கால்நடைகள், குற
ிப்பாக, பசுக்கள் தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும். இப்பசுக்களை அழித்துவிட்டால், விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காகவும் ஆங்கிலேயர்களை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக் கொல்லியாகவும் காலம், காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது.பசுக்கள் அழிந்தால், இந்தியர்கள், உரத்திற்கும், பூச்சிக் கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரை சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு, 54 குவிண்டால் அளவுக்கு சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760ல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்ல, பசுவதை கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். முதல் பசுவதைக் கூடம் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு, 30 ஆயிரம் பசுக்கள் வீதம், ஒரு ஆண்டில் ஒரு கோடி பசுக்களை கொன்றார். அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன், இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவு என்ற போர்வையில் கொல்லப்பட்டன.அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள் தொகையை விட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன்மூலம் ஆரோக்கியமான உணவு உற்பத்தி நடந்தது. 1910ம் ஆண்டு நம்நாட்டில், 350 பசுவதைக் கூடம் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததும், நாம் ரசாயன உரத்திற்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.

நம்நாடு சுதந்திரம் அடைந்த பின், பசுமை புரட்சி என்ற பெயரில், பெருமளவு ரசாயன உரங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்கினோம். அதன் பக்க விளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.ஒருமுறை காந்தியிடம், ஒரு பத்திரிகை நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் கூறிய பதில், "இந்தியா சுதந்திரம் அடையும் அந்த நாளில், இந்தியாவில் உள்ள அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்' என்றார். 1929ம் ஆண்டு, நேரு ஒரு பொதுக் கூட்டத்தில், "நான் இந்தியாவின் பிரதமரானால், இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்' என்றார்.இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், 1947க்குப் பின், 350 பசுவதைக் கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் என்ற நிலைக்கு, "முன்னேறி' விட்டோம். இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக் கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றன. டில்லியில் மட்டும், 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குகின்றன. இங்கு மட்டும் நாளொன்றுக்கு, இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.நமது நாட்டு பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள், நல்ல உடல் சக்தியுடன், நோய் எதிர்ப்பு திறன், வெயிலை தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக் கணக்கான பசுக்களை சந்தைகளில் வாங்கி, வதைக் கூடங்களுக்கு அனுப்பி வருகிறது. இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாக செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடம் இருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.

விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தக கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன. கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்து கொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்ற திட்டத்தில், இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.விளைநிலம் குறைந்தால் என்ன, குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலாளர்கள் உள்ளனர். உணவுப் பொருட்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என, அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது, வருங்கால சந்ததிகள் தான்.

அறிவியலாளர்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளி விவரப்படி, நம் நாட்டில் உள்ள, 73 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவிற்கு உடல் உழைப்பை நமக்கு கொடையாக அளிக்கின்றன. இந்த உழைப்பின் மூலம், இதேஅளவு சக்தியை உற்பத்தி செய்ய ஆகும் நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருட்களை சேமிக்கின்றன.இக்கால்நடைகளால் ஒரு ஆண்டுக்கு, 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்கு கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். இச்சாணம் கிடைப்பதால், 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால், மரங்கள் அதிக அளவிற்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கை சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த, 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால், நமக்கு, 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். அவற்றை இயக்குவதற்கு, 2 கோடியே, 37 லட்சத்து, 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவிவெப்பமயமாதல் அதிகரிக்கும்.இயற்கை நமக்கு தந்த செல்வங்களான, கால்நடைகளை கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை, சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்று, ரசாயன உரம் இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம்.

அதுமட்டுமின்றி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் இறக்குமதி செய்கிறோம்.ஒரு நவீன மாடு வதை கூடத்திற்கு, அதை சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு, இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தண்ணீர் தட்டுப்பாடும், எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம்நாட்டில் இயற்கையின் கொடையாக கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!


"நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு
...
மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்
கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...
அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில்
இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...

படித்ததில் பிடித்தது...
நன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது.

Sunday, November 18, 2012

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி.


ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர்.

வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது.

ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.அதன் பொருட்டு
வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்).

நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளுக்காக ரூ. 2,00,000 கொடுத்தார்.

ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது.

அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர்.

ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.
ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார்.

தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள்.

வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "

எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது.

மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ். எஸ். லாவோ" என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.


இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர்.

வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது.

பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர்.

உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார்.


ஆங்கில அரசு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது.

சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.

(பின்னர் வ.உ.சி. சிறையிலிருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம் மூழ்கிப் போனது. அவரில்லாமல் மற்றவர்களால் நிறுவனத்தை நடத்த இயலவில்லை.

அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் "எஸ்.எஸ்.காலியோ" என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டார்கள்.

அது வ.உ.சி.யை மிகவும் பாதித்தது.

அந்தக் கப்பலை வாங்க வ.உ.சி.என்ன பாடுபட்டார்?)

மகாகவி பாரதியின் ‘ஞாயிறு’ !





ஞாயிறே,இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா?கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா?


...
இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா? அது நின் காதலியா? இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா? நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா?

நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா? முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா? உங்களுக்கு மரண மில்லையா? நீங்கள் அமுதமா? உங்களைப் புகழ்கின்றேன்,

ஞாயிறே,உன்னைப் புகழ்கின்றேன்.

Thursday, November 15, 2012

பணம் இல்லை. மனிதப் பற்று இருந்தது. அறியாத சேதி……

 

பெருந்தலைவர் காமராஜரின் முதல்வர் அலுவலகத்திற்கே தேடி வந்தார் அவர். மிகச் சாதாரனமானவர். ஏழ்மையைச் சொல்லும் வேட்டிச் சட்டை. கையில் ஒரு மஞ்சள் பை. அழைத்து அருகில் அமரவைத்துக்குகொண்ட காமராஜர் என்ன ரெட்டியாரே என்று நலன் விசாரித்தார். பிறகு ஏதாவது முக்கிய சேதியா,...

ல்ல சும்மா பார்க்க வந்தீரா…என்று கேட்கிறார். வந்தவருக்கு தயக்கம்.

பரவாயில்ல சொல்லுங்க ரெட்டியார் என்று மீண்டும் கேட்டார் பெருந்தலைவர்.

ஒன்னுமில்ல. என் மகனுக்கு கல்லாணம். அதான்…..

இதுக்கு ஏன் ரெட்டியாரே தயங்கனும். நல்லவிசேசம்தான என்று தட்டிக்கொடுத்து பாராட்டி…நான் என்னபன்னணும் என்றார் பெருந்தலைவர்.

இல்ல..கல்லாணத்துக்கு நீங்க வரனும்…நீங்கதான் தலைமைதாங்கனும்..ஊரெல்லாம் சொல்லிட்டன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன் என்று தயங்கியவர் நீங்க வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க…என்று ரெட்டியார் இழுக்க…

காமராஜருக்கு பட்டென்று கோபம். முகம் இறுகிப்போனது. எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி மத்தவங்ககிட்ட சொன்னீங்கன்னேன் என்று கடுமைகூட்டினார்.

அந்த ரெட்டியாருக்கு கண்கள் கலங்கியது..தப்பா நினச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்துலதான் என் ஊர். அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா கட்டயாம் வருவீங்கன்னு நினைச்சுட்டன் என்றார்.

பெருந்தலைவருக்கு கோபம். உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம். அதுவா வேலை. வேற வேலை இல்லையா? போங்க, வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க என்று பட்டென்று கூறி அனுப்பிவைத்துவிட்டார். முகத்தில் அடித்ததைபோல் ஆனது ரெட்டியாருக்கு.

நடந்ததை வெளியில் சொல்லிக்கொள்ள்ளவில்லை. முதல்வர் வரமாட்டார் என்று எப்படி சொல்வது.? பேசாமல் கல்யாணத்தை அவரதுவீட்டில் நடத்துகிறார் எளிமையாக.. அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்தமுடியும். கடைசியில் காமராஜர் வரமாட்டார் என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது. வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள். என்னமோ நானும் காமராஜரும் ஒன்னா சிறையில் இருந்தோம். கூட்டாளிங்க. என்வீட்டுக் கல்யாணத்துக்கு வருவார்னு பெரிசா தம்பட்டம் அடிக்சுகிட்டாரு…பார்த்தீங்களா அலம்பல….என்ற ஏலனப் பேச்சு கூடியது....

மனம் உடைந்துபோன ரெட்டியாருக்கு உடல்கூனிப்போனது. அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். எப்படி வெளியில் தலைகாட்டமுடியும். காமராஜரும் நானும் பலவருஷம் ஒன்னா சிறையில் இருந்த நண்பர்கள் என்று ஊரில் நட்புக்கதையை சொன்னவராயிற்றே. திருமணத்திற்கு முதல்வர் கட்டாயம் வருவார் என்று நம்பியவாயிற்றே….அழுதபடி படுத்துக்கிடந்தார். அந்த கல்லாணவீடே வெறிச்சோடிப்போனது…..

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு கார் வந்தது. வந்தவர் முதல்வர் காமராஜர் வரபோகிறார் என்ற செய்தியைச் சொன்னார். செய்டியாருக்கு நம்பிக்கையில்லை. எந்த நம்பிக்கையில் திரும்ப ஊருக்குள் சொல்வது…? நம்பிக்கையற்று உட்கார்ந்திருந்தார்...

சில நிமிடங்களுக்களில் அடுத்த கார.முதல்வர்…பெருந்தலைவரே வந்து இறங்கினார். இரண்டு மூன்று பெரிய சாப்பாட்டு கேரீயரில் சாப்பாட்டோடு... ரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டம் சேர்ந்துவிட்டது….

ரெட்டியார் முதல்வரை கட்டித்தழுவிக்கொண்டார். குலுங்கி அழுதார். தட்டிக்கொடுத்து சமாதானம் சொன்ன காமராஜர்… உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே. சுதந்தரம் போராட்டம் ஜெயில்னு எல்லாத்தையும் இழந்துட்டு….எனக்குத் தெரியும். அதான் பையனுக்கு கல்யாணம்னு சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம அப்படிச் சொன்னன். நான் வர்றதா சொல்லியிருந்தா நீர் இருக்கிற கஸ்டத்துல கடன் வாங்குவீர்.. முதல்வர் வர்றார்னு ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர்..அதான் அப்படிச் சொன்னன். மன்னிச்சுடுப்பா… உன்வீட்டுக் கல்யாணத்துக்கு வர்றாம எங்கபோவன் என்று ஆரத்தழுவினார்..கண்ணீர் ஆனந்தக்கண்ணீரான நேரம் அது...

பிறகு வாசலிலேயே பாய்விரித்து எடுத்துவந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி அந்த குடும்பத்தாரோடு தானும் உட்கார்ந்து சாப்பிட்டார். இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு கொடுத்துவிடக்கூடாது என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால்..ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை…

நட்பை போற்றியவர் காமராஜர். நிலை மாறினால் குணம் மாறலாம் என்று மாறிப்போன மனிதர்களுக்கு மத்தியில்தான் அந்த மாமனிதன்......

Thursday, November 8, 2012

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!



தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர...
் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

Wednesday, November 7, 2012

வாழ்த்த வயதில்லை தங்கள் பாதம்தொட்டு வணங்குகிறேன் தாயே





வாழ்த்த வயதில்லை தங்கள் பாதம்தொட்டு வணங்குகிறேன் தாயே# இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூல் வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான் அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது இவர் சரியாக ஒரு நாளைக்கு பத்து கிலோ மீட்டர் தன் சை...
க்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் ,மேலும் கம்மங்கூல் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று விறகு அடுப்பில் பாணை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார் இந்த
பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் நண்பர்களே இனி சாக்கடைகளை பற்றி எழுதுவதை விட இந்த மாதிரி உள்ளவர்களை தேடி பதிவிடுகிறேன் # ஒரு அன்பு வேண்டுகோள் இதை அனைத்து நண்பர்களும் பகிரவும்
என் விளம்பரத்திற்காக அல்ல இந்த பாட்டியின் நேர்மை உலகிற்கு தெரியட்டும்

யார் இந்த ஐரோம் ஷர்மிளா...?





1972-ல் பிறந்த இந்த ஐரோம் சாரு ஷர்மிளா மணிப்பூரின் இரும்புப் பெண் என அனைவராலும் அழைக்கப் படுபவர். நவம்பர் 4, 2000 முதல் இன்று வரை இவர் உண்ணா விரதம் இருந்து வருகிறார். இவர் அப்படி இருக்கக் காரணம் என்ன? ஜனநாயக் நாடு என சொல்லப் படும் இந்தியாவில் உள்ள மணிப்பூரில் என்ன நடக்கிறது?

செப்டம்பர் 11, 1958 முதல் அருணாச்சலப்ரதேஷ், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா மற்...
றும் மணிப்பூர் மாநிலங்களில் Armed Forces (Special Powers) Act (AFSPA) நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தின் முலம் இராணுவத்திற்கு வழங்கப் பட்டிருக்கும் உரிமைகள் பொது மக்களைக் கொன்று குவிக்கலாம் எனும் அளவில் இருக்கிறது.

*** இந்த சட்டத்தின் படி பொது வெளியில் 5 பேர் சேர்ந்து நின்றால் அவர்களை சுட்டு வீழ்த்தலாம்.
*** மேலும் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எவ்வித பிடி வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். அவர்களை சுட்டு வீழ்த்தவும் அதிகாரம் உண்டு.
*** இதற்காக அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எவ்வித உத்தரவுமின்றி தேடுதல் வேட்டை நிகழ்த்தலாம்.
*** இராணுவ அதிகாரிகள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய இயலாது.


இதனை பயன்படுத்தி இராணுவம் அப்பவிப் பொதுமக்களையும் கொன்று குவித்திருக்கிறது. நவம்பர் 1, 2000 ம் ஆண்டு மணிப்பூரில் உள்ல "மலோம்" எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த போதும் "AFSPA" அதற்கு இடமளிக்கவில்லை. அப்போது 28 வயதே ஆன ஐரோம் ஷர்மிளா இந்த சட்டத்திற்கு எதிரக போர்க் கொடி தூக்கினார். தனது உண்ணாவிரதத்தை நவம்பர் 4, 2000 அன்று துவக்கினார். இந்த சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் இருந்து நீக்கப் பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நவம்பர் 6, 2000 அன்று அவர் IPC 309 பிரிவின் கீழ் "தற்கொலை முயற்சி" செய்வதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப் பட்டார். தண்ணீர் தவிர வேறு ஆகாரங்களை உட்கொள்வதில்லை என்பதில் ஷர்மிளா உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் கைது செய்யப் பட்ட ஒருவர் உயிரைக் காப்பது காவல் துறையின் வேலை என்பதால் வலுக்கட்டாயமாக அவருக்கு "Nasogastric intubation" (அதாவது மூக்கின் வழியே ஒரு ப்ளாஸ்டிக் ட்யூப் உபயோகித்து நீர் வகை உணவுகளை அளித்தல்) செய்தது.

இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சி எனும் பிரிவில் கைது செய்யப் பட்டு இன்றுவரை சிறையிலிருக்கிறார். ஜீன் 6, 2005ம் ஆண்டு ஜீவன் ரெட்டி கமிசன் இந்த சட்டம் குறித்தான தனது கருத்துக்களைத் தெரிவித்தது. ஆனால் மன்மோகன் சிங் அரசு அதை ஒன்றரை ஆண்டுகள் வரை கிடப்பில் போட்டது. அதன் பின் ப்ரணாப் முகர்ஜி ரெட்டி கமிசன் அளித்த சட்டத் திருத்தக் கருத்துக்களை நிராகரித்தார்.

அத்துடன் அவர் இது போன்ற மாநிலங்களில் இராணுவம் இத்தகைய அதிகாரங்கள் இன்றி செயல் பட முடியாது என கருத்தும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2, 2006 ல் ஷர்மிளா விடுவிக்கப் பட்டது 4 மாத காலங்கள் டெல்லிக்குத் தப்பிச் சென்று அங்குள்ள மாணவர்கள், சமூக அமைப்புகளுடன் கை கோர்த்து ஒரு போராட்ட ஊர்வலம் நடத்தினார்.

அவரது உண்ணாவிரதம் டெல்லியிலும் தொடர்ந்ததால் டெல்லி போலீசாரால் மீண்டும் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் கைது செய்யப் பட்டார்.அவர் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பினார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இன்று வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வரும் இரும்புப் பெண் ஐரோம் ஷர்மிளாவை நம்மில் பலருக்குத் தெரியாது. காரணம் நமது மீடியாக்களின் கையாலாகாத் தனம் மட்டுமல்ல. நமக்கு அவர் ஒரு சினிமா நாயகியாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும். ஆனால் அவர் சமூக நாயகியாக அல்லவா இருக்கிறார். எப்படி அவரைத் தெரிந்து கொள்ள முடியும்
See More

அஜித்தின் மனிதநேயம் !




ஓர் உண்மை சம்பவம்:

விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக
உதவி கேட்டு போயுள்ளார் ஒரு உதவி இயக்குனர்.
அவர் விஜயகாந்த் நடித்த கண்ணுபடப்போகுதய்யா படத்தில்
பணியாற்றியவர்.உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை இரண்டாயிரம் பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயா என்று சொல்லவும்,அந்த உதவி இயக்குனர் மருத்துவசெலவுக்கு தேவையான
இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம்இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே..முழுதும் கொடுக்க முடியாவிட்டால் உங்களால்
முடிந்ததை கொடுங்கள்என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த் கோபத்தில் திட்டி விட்டாராம்.

மனம் தளராத அந்த உதவி இயக்குனர்,மருந்து வாங்க 500/ ரூபாய்
கேட்டாராம் அதைக்கூட தராமல்
துரத்தி விட்டாராம் விஜயகாந்த்.
நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர் அஜித்திடம் அழைத்து போனாராம்.

படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும் உணவு வழங்கிவிட்டு நடிக்கப் போய் விட்டாராம்.

பேசாமல் அவர் போனதும் மனம் வெந்து போய்விட்டார்களாம்.

ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித் சரி ஆரம்பிங்க என்றவுடன் இருவருக்கும் புரியவில்லை .
அஜித் இவர்கள் கதை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து இவர்களுக்கு நேரம் ஒதுக்குவதற்காக வேக,வேகமாக நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..

மணவாளன் குழந்தையின் ஆபரேசனுக்கு பணம் கேட்டு வந்தோம் என்று சொல்ல கோபத்தில்துடித்த அஜித் இதை முதலிலேயே சொல்ல கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள் என்றல்லவா நினைத்தேன் எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.

விஜயகாந்திடம் திட்டு வாங்கிய பயத்தில் உதவி இயக்குனர் ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள் என்றாராம்.

கோபமான அஜித் மொத்தம் தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள்
என்று அதட்டவும்,எழுபத்து ஐந்து ஆயிரம் தேவை என்று சொல்லவும் ,மொத்தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிப்புடன் உடனே செக் போட்டு கொடுத்து விட்டாராம்.

அஜித்தின் இந்த மனிதநேயம் எனக்கு நெகிழ்ச்சியில் கண்ணீர் வரவைத்து விட்டது.

நாட்டை ஆள்வதற்கு துடிக்கும்
விஜயகாந்தின்
மனதிற்கும் ,செய்வதை பிறர்க்கு தெரியாமல்
செய்ய நினைக்கும்
அஜித்தின் மனதிற்கும்
உள்ள
வித்தியாசத்தை நினைத்து.........

வீட்டுக்குள் அழகிய வெண்மேகம்!!!





டச்சு நாட்டை சார்ந்து Berndnaut Smilde எனும் கலைஞர் வீட்டுக்குள் அழகிய வெண்மேகத்தை உருவாக்குவதை கண்டுபிடித்துள்ளார். அறையின் சீதேஷநிலை ஒளி அமைப்பு ஈரப்பதம் மாற்றி அமைத்து fog machine ஐ கொண்டு மேகத்ததை ஏற்படுத்துகிறார் அதன் அழகே அழகே

அதிசயம் மிக்க டிசம்பர் 2012



எதிர்வரும் மாதம் அதாவது இம்முறை வரும் டிசம்பர் 2012 ஆனது ஒரு அதிசயம் மிக்க டிசம்பர் மாதமாகக் கருதப்படுகிறது. அதற்க்குக் காரணம் இந்த டிசம்பர் மாதத்தில் கிரகங்கள் நேர்கோட்டிலும் மற்றும் 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வருவதே. இவ்வாறான டிசம்பர் மாதமானது 26,000 வருடங்களுக்கு ஒருமுறையே வருவதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான டிசம்பர் மாதத்தை சீனர்கள் பணப்பொதி அதாவது "மணி பேக்" என அழைக்கின்றனர்

Tuesday, November 6, 2012

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு



180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்ட ப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறு கள் மட்டுமே பரிசீலிக்கலாம். கரு வறையின் உட்சுவருக்கும், வெளி ச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப் பாதை உள்ள து. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மே
லே எழும்புகிறது. சுவர்களை இணைத் ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட் டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண் பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன் றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகா ரத்திலிருந்து விமா னத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதி களாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலி ருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடி யிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக் கும் அதன் உயரத்து க்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமை க்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

விதை 2 விருட்சகம்

ஜெர்மன் உலக சாதனை - சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி





சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜெர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது.

இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த துங்கியுள்ளது.

இந்தாண்டு ஜெர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது.

இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்‌கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்)

இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ஜெர்மன் சாதனை படைத்துள்ளது.

Monday, November 5, 2012

தமிழோடு சீன எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு




சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
(தமிழோடு சீன எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு)


சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.


தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.


சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய் கான்)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.


சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.


இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.



சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

சோலார் சக்தியினை பற்றிய யோசனைக்கு இதுவே ஒரு உச்ச நேரம்


நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும்,திவ்யாவும். இந்த மாணவிகளை கட்டுரைக்காக சந்தித்தபோது "பல ஐரோப்பிய நாடுகள் வெளிச்சம் இல்லாமல் பனியிலேயே மூழ்கிக் கிடக்கின்றன.மற்ற நாடுகளில் இல்லாத சூரியஒளி என்ற அற்புதம் நம்ம நாட்டுல அதிகமாவே இருக்கு.மின்சாரப் பற்றாக்குறை என்று குறைகூறும் நம் ஆட்சியாளர்கள் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தால் என்ன என்று முற்போக்குத்தனமான தங்கள் கருத்தை கூறினர் இந்த மாணவிகள். நம்ம தமிழகத்துல இந்தியாவுக்கே மின்சாரம் தர நெய்வேலி, கல்பாக்கம் இருக்கு. ஆனா 12 மணிநேர பவர்கட். பல மாநிலங்களில் அணுவுலையும் இல்லை, நிலக்கரி சுரங்கமும் இல்லை. ஆனா அங்கெல்லாம் மின்சாரத் தடையே கிடையாது. அவர்களால் மட்டும் எப்படி சாத்தியப்படுத்த முடிகிறது? கூடங்குளம் அமைத்தால் மின்சாரத் தடையே இருக்காது என்பதெல்லாம் ஊரை ஏமாத்துற வேலை .. இதுக்கு அப்துல் கலாமும் உடந்தை..." என்றனர்.
-----------------------------------------------------------
நீங்கள் சோலார் மின்சாரம் பற்றிய எதிர் பிரச்சாரங்களையும், அணுவுலையை ஆதரிப்பவர்களின் பின்னால் இருக்கிற கமிஷன் காசு அடிக்கிற பொய் பிரச்சாரங்களையும் நம்புபவராக இருந்தால் .... சோலார் பேனல்கள் மற்றும் சோலார் மின்சாரம் தயாரிப்பாளர்களின் கம்பெனிகளின் ஆண்டு இறுதி அறிக்கையை பார்ப்பீர்களானால் உண்மையில் வியந்துப் போவீர்கள். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டின் மத்தியிலேயே அவை பெரும் வளர்ச்சியையும், லாபத்தையும் அடைந்துள்ளன. 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவை சோலார் பேனல் மின்சார சக்தி திட்டங்கள் தான் ஆக்ரமித்து இருக்கும் அந்த துரையின் வளர்ச்சி தான் சீராக , நன்றாக வளர்ந்து வருகிறது என குறிப்பாக அமெரிக்காவில். அதிகமான சூரிய எரிசக்தி தொழில் கூட்டமைப்பு மற்றும் GTM ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது, இதுவரை 742 மெகாவாட் பெறுகிற அளவுக்கு சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு 2012 இரண்டாம் காலாண்டில்.. இரு மடங்கு.. இருமடங்கு சூரிய தகடுகளின் தேவை அதிகரித்து இருக்கிறது.

இந்த ஆண்டு 3.2 GW இரண்டு பயன்பாட்டு அளவு சோலார் பேனல்கள் திட்டங்கள் வீடுகள், பள்ளிகள் , மருத்துவ மனைகள் , தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக கூரைகளுக்கு நிறுவப்பட்ட இருக்கின்றன. 447 மெகாவாட் மற்றும் இன்னும் 20 திட்டங்கள் மூலம், மிகப்பெரிய சோலார் தகடுகளின்தேவைகள் அதிகரித்து இருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா, அரிசோனா, மற்றும் நியூ ஜெர்சி போன்ற சில முக்கிய மாநிலங்களில் சோலார் வளர்ச்சி திட்டங்களுக்காக தனிப்பட்ட அரசு கொள்கைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. உள்ளன.
கலிபோர்னியாவில் சூரிய திறன் ஒரு கணிசமான அளவு ஏற்கனவே உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அணு உலை, ஒரு நிலக்கரி பயன்படுத்தபடும் அனல்மின் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றாக சோலார் மின்சாரம் வளர்ந்து வருவதையும், வளர்ந்தாகவேண்டிய கட்டாயத்தையும் பற்றிய ஒரு கட்டுரையை இந்த வாரம் வெளியிட்டு இருக்கிறது. சோலார் சக்தியினை பற்றிய யோசனைக்கு இதுவே ஒரு உச்ச நேரம் என்று அது வருணித்து உள்ளது.

Sunday, November 4, 2012