Wednesday, February 20, 2013

இயன்றவரை உதவலாமே!‍

ஐயா, திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா கோவிலூற்று எனது சொந்த ஊர். ஊரில் சொற்ப வருமானத்தில் தச்சு தொழில் செய்து எனது குடும்பததை காப்பாற்றி வருகிறேன். எனக்கு திருமணம் ஆகாத இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர். எனது மூத்த மகள் பழனிசெல்வியை மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே வங்கியில் கடன் வாங்கி பொறியியல் படிக்க வைத்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை நந்தம்பாக்கத்தில் ஒரு பிரவுஸிங் சென்டரில் 5000 ரூபாய் சம்பளத்துக்கு அவள் வேலைக்கு சேர்ந்தாள். கடந்த பிப்ரவரி 9‍ம் தேதி சனிக்கிழமை அன்று அவள் நந்தம்பாக்கம் ‍ போரூர் நெடுஞ்சாலையை கடந்து வேலைக்கு செல்லும்போது ஒரு கார் அவள் மீது மோதிவிட்டது. இதில் அவளது இதயம் மிகவும் பாதிக்கப்பட்டு, தற்போது கோமா ஸ்டேஜில் மியாட் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள். விபத்து நேரத்தில் அருகில் இருந்து மருத்துவமனை மியாட் மட்டுமே. அதனால், பொது மக்களே அவளை தூக்கிச் சென்று அங்கு சேர்த்திருக்கிறார்கள். அவள் மீண்டு வருவதற்கு சுமார் 8 லட்சம் ரூபாய் ஆகும் என்கிறார்கள் மருத்துவர்கள். என்னால் 1 லட்சம் மட்டுமே திரட்ட முடிந்தது. எனது மகளை காப்பாற்ற உதவுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது முகவரி: பழனிசெல்வி, த/பெ. ஆர்.முருகன், 7/57 காந்தி தெரு, கோவிலூற்று, ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி ‍ 627 415. போன் எண்: 73051 80978.
‍ நண்பர்களே இந்த கடிதத்தை தினந்தந்தி போட்டோகிராபர் கென்னடி அண்ணன் என்னிடம் கொடுத்து உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார். நண்பர்கள் நாம் அனைவரும் நம்மால் இயன்றவரை உதவலாமே!‍ அன்புடன் டி.எல்.சஞ்சீவிகுமார்.

No comments:

Post a Comment