யார் இந்த கலெக்டர் ???
பெரம்பலூர் மாவட்ட மக்களின் புதிய ஹீரோ தாரேஸ் அஹம்மது
...
இவர் தான் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், அதிரடியான மாவட்ட ஆட்சி தலைவர்,
ஒரு நாள் பேரூந்தில் மக்களோடு மக்களாக பயணித்து கொண்டே அவர்களுடைய பிரச்சினைகளை விசாரிப்பார்
இன்னொரு நாள் மாறு வேடத்தில் திரை அரங்குகளுக்கு சென்று டிக்கெட்டுகளுக்கு சரியான தொகை தான் வசூலிக்கிறார்களா என்று விசாரிப்பார்,
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்திற்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் விசிட் அடிப்பார்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹம்மது வின் மொபைல்
எண்கள் இருக்கும்
குடி நீர் பிரச்சினையில் தொடங்கி, சாதிச் சண்டைகள் வரை எங்கே எது நடந்தாலும் ஒரே ஓர் அழைப்பில் பிரச்சினையை முடித்து கொள்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்
பதவி ஏற்று ஐந்து மாதங்களில் மக்களை தேடி 45 ஆயிரம் மனுக்களை பெற்றுள்ளார், அதில் 75 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது
இவரது பணியை பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது
(குறிப்பு)
இவரை போலவே அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களும் இருக்கவேண்டும்
இறைவன் அவருக்கு தகுந்த பாதுகாப்பையும், அருளையும் பொழிய வேண்டும்
No comments:
Post a Comment