Wednesday, October 31, 2012

`சாட்டை’ படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று.





சில வருடங்களுக்கு முன் வந்த `பசங்க’ படத்தை நாமெல்லாம் கொண்டாடினோம். ஆனால் அதை விடப் பலமடங்கு கொண்டாடப்பட வேண்டிய படம் சாட்டை. காரணம் பசங்க படத்தில் பேசாமல் விடப்பட்ட கல்வி அரசியலை இந்தப் படம் பேசியிருக்கிறது.

அரசாங்கம் சாராய வியாபாரம் பார்க்க ஆரம்பித்துக் கல்வியைத் தனியார் முதலாளிகளிடம் கொடுத்து கல்வியை வியாபாரமாக்கிவிட்ட சூழலில் இந்தப்...

படம் ஒரு முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

அரசுப் பள்ளிகளில் இன்று நடக்கும் அவலத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது சாட்டை. ஒரு அரசுப் பள்ளிக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் கதைக் களம். அரசுப் பள்ளிக்குள்ளே கேமரா சுற்றிவருது குறித்த எந்த நெருடலும் இல்லாமல் படம் விறுவிறுப்பாகப் போகிறது.

நல்லாசிரியருக்கான அத்தனை தகுதியும் கொண்ட ஆசிரியராகச் சமுத்திரக்கனி நன்றாக நடித்திருக்கிறார் (சார் ஈசன் போலீஸ் கேரக்டரிலிருந்து வெளிவரவில்லை போல.. எந்நேரமும் முகத்தை வெறப்பாவே வச்சுருக்குறதை குறைச்சுருக்கலாம்..).

தம்பி ராமையா.. சான்ஸே இல்ல.. முடியை ஒதுக்கி விட்டு வழுக்கை தலையில் வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே ரணகளம் பண்ணியிருக்கிறார். சொல்லப்போனால் படம் விறுவிறுப்பாகப் போவது தம்பி ராமையாவின் சேட்டைகளால் தான்.

அரசுப் பள்ளியில் மாப்பிள்ளை பெஞ்சு மாணவன் நான். என்னுள் இருந்த ஏக்கங்கள் கோபங்கள் அனைத்தையும் இந்தப் படத்தில் காண முடிந்தது. ஒவ்வொரு காட்சியும் அதில் வரும் வசனங்களும் பிரமாதம்.. ஆனால் கல்வி தனியார்களிடம் தாரை வார்க்கப்பட்ட அரசியலை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம்.(ஆனாலும் வீரியம் குறைந்து விடவில்லை..)

மாணவர்களாக வரும் பாண்டி உள்ளிட்ட மாணவர்களும் ஜூனியர் பாலையாவும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

இயக்குனர் அகத்தியனின் பட்டறையிலிருந்து வந்து தனது முதல் படத்திலே ஒரு மிக முக்கியமான அரசியலை பேசும் படத்தைச் சமரசங்களின்றி இயக்கியிருக்கும் இயக்குனர் அன்பழகனை மனதாரப் பாராட்டுகிறேன். வாழ்த்துகள் பாஸ்.

உங்களைப்போன்றவர்களின் வரவு தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பெரும் நம்பிக்கை. இந்தப் படத்தைத் தயாரித்து ஒரு நல்ல படம் வெளிவர உதவியாக இருந்த இயக்குனர் பிரபு சாலம்னுக்கும் வாழ்த்துகள்..

கண்டிப்பாக இந்தப் படத்தை அனைத்து ஆசிரியர்களும் ஆட்சியாளர்களும் பார்த்தாக வேண்டும் .

சிறு சிறு குறைகள் இருந்தாலும் `சாட்டை’ தமிழ் சினிமாவின் வைரங்களில் ஒன்று.. :

Tuesday, October 30, 2012

இந்த மின்வெட்டு இன்னும் என்னமாதிரியெல்லாம் பிரச்னைகளை உண்டாக்குமோ?



ஐயோ மின்வெட்டு!

மின் தடை காரணமாக... இப்படியெல்லாம்கூட பிரச்னை ஏற்படுமா..? என்று அதிர வைக்கிறது விருதுநகரில் நடந்திருக்கும் ஒரு சம்பவம்! கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் பங்க்... இரவு 7 மணி... மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரம்...
அப்போது, மனைவியருடன் தத்தம் பைக்கில் வந்த இருவர், ஒரேமாதிரியான ஹெல்மெட் அணிந்திருந்தனர். பெட்ரோல் நிரப்புவதற்காக மனைவியரை இறக்கிவிட்டுள்ளனர். பின், ஒரு ஜோடி முத...
லில் சீறிக் கொண்டு புறப்பட்டுச் சென்றது. சாத்தூர் ரோட்டில் நீண்ட தூரம் சென்ற பின், ''என்ன மாமா! நாம தாதம்பட்டி போகணும்; நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்க?'' என்று பின்னால் அமர்ந்திருந்த பெண் கேட்க.... வாகனத்தை ஓட்டிய நபருக்கு தூக்கி வாரிப்போட்டிருக்கிறது. வண்டியை நிறுத்திப் பார்த்தவருக்கு.. அதிர்ச்சி! பின்னால் இருந்தது வேறு ஒரு பெண்.
பரஸ்பரம் மன்னிப்புக் கோரிக் கொண்டவர்கள்... மீண்டும் பெட்ரோல் 'பங்க்' வந்து சேர... கணவரைக் காணாமல் தவித்து நின்ற மனைவியும்; மனைவியைக் காணாமல் தவித்த நின்ற கணவரும் பெருமூச்சவிட்டுள்ளனர்.

ம்... இந்த மின்வெட்டு இன்னும் என்னமாதிரியெல்லாம் பிரச்னைகளை உண்டாக்குமோ?



வாழைப்பழத்த சாப்பிட சொன்னா பயபுள்ள என்ன பண்ணி வச்சிருக்கு பாருங்க...

இதயெல்லாம் பாராட்டாம இருக்க முடியுமா சொல்லுங்க...

Monday, October 29, 2012

தஞ்சாவூர் : ராஜராஜசோழன் சதய விழாவில்

தஞ்சாவூர் : தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்று வரும் ராஜராஜசோழன் சதய விழாவில் ஏராளமானோர் பங்கேற்று அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்தில் பிறந்ததார். இதனை ஆண்டுதோறும் இரண்டுநாட்கள் விழா எடுத்து கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டிற்கான 1027-வது சதய விழா பெரியகோவில் வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் விழாவைத் தொடங்கிவைத்தார்.
விழாவின் முதன்நாளன்று கருத்தரங்கம், மங்கள இசை, திருமுறை இசைத்தல், இன்னிசைப்பாடல்கள், திருமுறை இன்னிசை அரங்கம், நாத இசை சங்கமம், கவியரங்கம், பக்தி இன்னிசை பாட்டு மன்றம், நாட்டியம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெருஉடையாருக்கு பேரபிஷேகம்
வியாழக்கிழமையன்று காலை மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, திருமுறை ஓதுவார் திருமுறை பண்ணுடன் திருமுறை திருவீதிஉலா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெருவுடையார் பெரியநாயகி திருமேனிகளுக்கு பேரபிஷேகம் நடைபெற்றது.
47 வகையான பொருட்களைக்கொண்டு மூன்றுமணிநேரம் நடைபெற்ற இந்த அபிஷேகத்தை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர். அப்போது பேசிய பக்தர்கள், தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னர் ராஜராஜனின் சிலையை பெரிய கோவிலில் நிறுவவேண்டும் என்றும் தமிழ்ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீர் மேலாண்மை, குடவோலைமுறை தேர்வு, நிலமேலாண்மை என பல்வேறு நிர்வாகத்திறன்களில் சிறந்து விளங்கி ராஜகேசரி என்ற உரிய பட்டத்தை பெற்றார். மேலும் எதிர்கால சந்ததியினருக்கு தனது நிர்வாகத்திறனையும், கோவில் கட்டுமான பணிகளின் விவரங்களையும் கல்வெட்டாக எழுதி வைத்து சென்றிருக்கும் மாமன்னது சிறப்புகளை இளைய சமூகத்தினருக்கு எடுத்து கூறும் முகமாக இந்த சதய விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 25, 2012

இரண்டு கைகளும் இல்லாத நிலையில் கால்களால் டயர் மாற்றும் திறமைசாலி

எத்தனை பேருக்கு கைகளால் வாகனத்தின் டயரை மாற்றமுடியும்? விபத்தின் போது கைகளை இழந்த அமெரிக்கர் வெறும் ஒன்பது நிமிடங்களில் வாகனத்தின் சில்லை மாற்றிவிடுகிறார்.

சில்லுகளையும் உபகரணங்களையும் பற்றிப் பிடிக்க இவரது கால் விரல்கள் மிகவும் இயல்பாக்கமடைந்துள்ளன.

அசாத்திய திறமை மிக்க இவரின் செயல்கள் வீடியோவாகவும் தரப்பட்டுள்ளன.
 

பவர்கட் பிரச்னையா...இன்றே சோலாருக்கு மாறுங்க !





'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று
ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த மக்கள்,
'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள்.ஆனால்..., அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில்,
அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.
மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம்
பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு
மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள்.'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...’ என்று அதை
உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம்மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய
விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக்கும் நிலையில், அதுகுறித்த விவரங்களைப் பெற, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை
அலுவலகத்துக்குப் படையெடுத்தோம். அங்கே நம்மை எதிர்கொண்ட துணைப் பொதுமேலாளர் (சூரிய சக்தி அறிக்கை பிரிவு) சையத் அகமத்,
நமக்கு விளக்கங்களைத் தந்தார்.
''மின்பற்றாக்குறை பற்றிய புலம்பல்கள், புகார்களைவிட... மாற்று ஏற்பாடுகளுக்கு மக்கள் தயாராக வேண்டிய சூழல் இது! பூகோள அமைப்பின்
சாதகத்தால்,தமிழ்நாட்டில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக்கொண்டு மின்சாரம் பெறுவது நல்ல யோசனை. மக்களிடம்
அந்த முயற்சியை முன்எடுப்பதற்கான தயக்கம் இருப்பதற்குக் காரணம்...அதற்கு தேவைப் படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடுதான்.
அதனால்தான் மத்திய அரசாங்கம் அதற்கு அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.
ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை
சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும்
பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.நல்ல திட்டம் நோக்கி நாடே நகரட்டும்!சோலார் தரும் லாபம்!
மின் சாதனங்களின் ஒரு மணிநேர தேவைக்கான மின்சாரம்... டியூப் லைட்: 40-60 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 60-80 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 80-100 வாட்ஸ்,
டி.வி: 150-250 வாட்ஸ்,எல்.சி.டி. டி.வி: 150-250 வாட்ஸ், டி.வி.டி: 40-60 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 150-200 வாட்ஸ், மானிட்டர்: 100-150 வாட்ஸ்,
செல்போன் சார்ஜர்: 5 வாட்ஸ்.
----------------------------------------------------------------------
மேற்கூறிய மின்சாதனங்களின் அதிகபட்ச மின்தேவையை வைத்து ஒரு மணி நேரத்துக்குக் கணக்கிட்டால் மொத்தம் 1,155 வாட்ஸ் ஆகிறது.
இதற்காக நாம் செலுத்தும் மின்கட்டணம்1 ரூபாய் 15 பைசா (யூனிட்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் 1 ரூபாய்). இதையே 12 மணி நேரத்துக்குக்
கணக்கிட்டால்... சுமார் 14 யூனிட்கள் வரும். இரண்டு மாதங்களுக்கு (60 நாட்கள் கணக்கிட்டால்...) 840 யூனிட்கள் வரும்.
இதற்கான கட்டணம்... 3,745 ரூபாய் 25 பைசா (1 முதல் 200 வரையிலான யூனிட்களுக்கு 3 ரூபாய்; 201 முதல் 500 வரையிலான யூனிட்களுக்கு
4 ரூபாய்: 501 முதல் 5 ரூபாய் 75 பைசா என கணக்கிடப்படுகிறது).இருபது ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது...
4 லட்சத்து 49 ஆயிரத்து, 430 ரூபாய். ஆனால், முதல் கட்டமாக 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சோலாருக்கு மாறிவிட்டால்...
'அடேங்கப்பா... நான் கரன்ட் பில்லே கட்டுறது கிடையாது' என்று தெம்பாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்...
மின்வெட்டு என்கிற பிரச்னையும் இருக்காது.
--------------------------------------------------------------------
சூரிய மின்சாரம்... அசத்தும் குஜராத்!
ஆசியாவிலேயே மிக அதிகமான மின்சாரத்தை சூரிய ஒளி சக்தியின் மூலம் தயாரிக்க சோலார் பார்க் ஒன்றை 3,000 ஏக்கர் பரப்பளவில்
உருவாக்கியுள்ளது குஜராத் அரசாங்கம். ஸ்வாத் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் பார்க்கிலிருந்து 214 மெகா வாட்
மின்சாரம் பெற முடியும். சீனாவில் உள்ள சோலார் பார்க்கில் 200 மெகா வாட் அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது,
குறிப்பிடப்பட வேண்டிய ஒப்பீட்டுத் தகவல்.


*அன்பு மகள் அனுப்பும் மடல் ....*



''ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் அவர்கள் தந்தைக்கும் சமர்ப்பணம்'' !!!!!!!! 
*******----------------------------------------------------------------------------------------********

உறவில் தந்தையாய்
உணர்வில் அன்னையாய்
உயிரில் கலந்தாய் அப்பா _ நான்
இரவில் தனியாக
தெருவில் வரும் போது
மழையில் நனைந்தாய் அப்பா..

குடையில் இடமிருந்தும்
நடுவில் எனை நிறுத்தி
மழையில் நனைந்தாய் அப்பா - தினம்
மனதில் எனை நிறுத்தி
உடலில் தளர்ந்தாலும்
உழைத்து களைத்தாய் அப்பா..

தஞ்சை பெருங்கோயில்
தலைய சிற்பி போல்
என்னை வளர்த்தாய் அப்பா _ தினம்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை செதுக்க நீ
உன்னை வருத்தாய் அப்பா..

பணியில் இருந்து நீ
திரும்பி வரும் வரையில்
பசியில் இருப்பேன் அப்பா _ உன்
மடியில் அமர்த்தி என்
இதழில் உட்டியதை
நினைத்து அழுதேன் அப்பா..

கல்வி கற்க நான்
பள்ளி சென்ற தினம்
இன்றும் நினைப்பேன் அப்பா - உன்
கையை இழந்து நான்
உள்ளே போகும் போது
கண்கள் நனைத்தேன் அப்பா..

என்னை கரை சேர்க்க
உன்னை அலையாக்கி
அலைந்து உழைத்தாய் அப்பா
விண்ணை அழகாக்கும்
வெள்ளி மலர் போல
என்னை வளர்த்தாய் அப்பா..

கருவில் வந்த முதல்
கன்னி ஆகும் வரை
கனவில் சுமந்தாய் அப்பா
நல் கணவன் கை பிடித்து
கனிந்த வாழ்வடைய
தினமும் உழைத்தாய் அப்பா..

உடலில் நலமின்றி
உறைந்த பனி போல
படுத்து சாய்ந்தேன் அப்பா _ என்
தலையில் வருடி நீ
உணவு ஏதுமின்றி
இரவை கழித்தாய் அப்பா..

கழுத்தில் மணி வைரம்
காலில் புது வெள்ளி
போட்டு ரசித்தாய் அப்பா _ கோயில்
குளத்தில் மீன் உண்ணும்
அழகை பொறி போட்டு
படியில் ரசிப்போம் அப்பா..

நிலத்தில் விளைந்த அந்த
நெடிய கரும்பை
கடித்து ருசித்தோம் அப்பா
படிக்க உன்னை பிரிந்து
வசிக்க நேர்ந்தும் நம்
அகத்தில் வசித்தோம் அப்பா..

கொடுத்த வாழ்விற்கு
கோடி நன்றிகள்
கொடுத்த இறைவா அப்பா _ நீ
இருக்கும் இடத்தில் தான்
இறைவன் இருக்கிறான்
கோயில் வேண்டாம் அப்பா..

அடுத்த பிறவியில்
அன்னையாக நான்
இருக்க நேர்ந்தால் அப்பா - இனி
எடுக்கும் பிறவியெல்லாம்
உன்னை குழந்தையாய்
சுமக்க வேண்டும் அப்பா ..

- வை . நடராஜன்

சூரிய எரிசக்தி திட்டம் 2012



தமிழக அரசு இறுதியாக மாற்று
எரிசக்திக்கு அசாரமிட்டுள்ளது.
சூரிய எரிசக்தி திட்டத்தை 
அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு வீட்டின் மீதும்
சூரிய எரிசக்தி கருவியை அமைத்து
கொள்ளலாம். அவ்வாறு அமைக்கப்படும்
கருவிக்கு முப்பது சதவிகிதம் மானியம்
அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள
கருவி வாங்கினால் முப்பது ஆயிரம்
ரூபாயை அரசு வழங்கி விடும். இது
தவிர...அவ்வாறு கருவி பொருத்தி
அதன் மூலம் உற்பத்தி செய்து நமக்கு
பயன்படுத்தி கொள்ளும் மின்சாரத்திற்கு
அரசு, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு
ஒரு யுனிட்டுக்கு இரண்டு ரூபாயும்,
மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளுக்கு
ஒரு யுனிட்டுக்கு ஒரு ரூபாயும்,
ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டுகளுக்கு ஒரு
யுனிட்டுக்கு ஐம்பது பைசாவும் வழங்குகிறது.
(இந்த ஊக்கத்தொகை 2014 மார்ச்
31 ம் தேதிக்கு முன் கருவி பொருத்தும்
நபருக்கு மட்டுமே கிடைக்கும்)
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை
அளக்க "நெட் மீட்டர்" பொருத்திக்கொள்ளலாம்.
இந்த திட்டம் முழுமையாக செயல்பட்டால்
இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டில்
மூன்றாயிரம் மெகா வாட் மின்சாரம்
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும்.
இதே போல தொழிற்சாலைகளிலும் பொறுத்த
அறிவுறுத்த பட்டுள்ளது.
தமிழகத்தின் தற்போதய மின் பற்றாக்குறை
சுமார் நான்கு ஆயிரம் மெகா வாட்.
தமிழகத்தில் ஆண்டுக்கு முன்னூறு
நாட்கள் சூரிய ஒளி தங்கு தடை
இன்றி கிடைக்கும் என்பதால் இந்த
திட்டம் வெற்றியடைய வாய்ப்பு
உள்ளது. அதே சமயம்...
நடுத்தர, மற்றும் அதைவிட
வருவாய் குறைவாக உள்ள
குடும்பத்தினருக்கு ஒரு
லட்சம், ஒன்றரை லட்சம்
ரூபாய் முதலீடு என்பது
கற்பனை கூட செய்ய முடியாதது.
அவர்களுக்கு இந்த திட்டம் பயன்
படுத்தக்கூடியதாக செய்ய வேண்டியது
அரசின் கடமை!
சூரிய எரிசக்தி திட்டம் 2012

Tuesday, October 23, 2012

திண்டுக்கல் பூட்டு


தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு தயாரிப்புக்குப் பெயர் பெற்ற ஊராகும். இம்மாவட்டத்தில் திண்டுக்கல், நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, புதூர், அனுமந்த நகர் என்று பல பகுதிகளிலும் பூட்டுத் தயாரிப்பது நடைபெறுகிறது.நவீன எந்திரங்களின் உதவியோடு தொழிற்சாலைகளில் பூட்டு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் இருப்பினும் பூட்டு தயாரிக்கும் தொழிலைக் குடிசைத் தொழிலைப் போல பல இடங்களில் செய்து வருகின்றனர்.

பூட்டுகள் அதிலிருக்கும் நெம்புகோல்கள் வழியாக வகைப்படுத்தப்படுகின்றன. பூட்டுத் தயாரிப்பில் அதிக அளவாக ஆறிலிருந்து எட்டு நெம்புகோல்களுடையதாய் தயாரிக்கப்படுகின்றன. இதில் மாங்காய் பூட்டுகள் வகை மிகவும் புதிது. இதில் பூட்டின் பக்கவாட்டில் ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் தான் திறக்க முடியும். மாங்காய்ப் பூட்டு, கதவுக்கான சதுரப் பூட்டு, அலமாரிப் பூட்டு, இழுப்பான் பூட்டு என்று பல வகையான பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் மணிப்பூட்டுகள் என்பதும் சிறப்பான ஒன்றாகும். எட்டு அங்குலமுடைய இந்தப் பூட்டு ஒவ்வொரு முறை சாவியைச் சுழற்றும் போதும் மணிச்சத்தம் வரும். இதில் ஐந்திலிருந்து பத்துமுறை மணியடிக்கும் வகையான பூட்டுகளும் உண்டு.பித்தளைப் பூட்டுகளும், குரோமியப் பூச்சுப் பூசின பூட்டுகளும் அதிகம் தயாரிக்கப்படுகின்றன.

திண்டுக்கல் பூட்டின் வரலாறு:

பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு.

இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாள்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார். வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆள்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத்திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.

நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.

பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது.

இதனை ஒழுங்குபடுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.

ஓர் இரும்பு தகட்டின்மேல் ஒர் அடையாளம் செய்து முதலில் துளைசெய்கின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்கின்றனர். புது பூட்டு ரெடி. கையால் மட்டுமே செய்யப்படுகின்றன பூட்டுகள்.

டிலோ பூட்டு:
திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவிதான். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் சிறந்த வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ள சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது.

பெல் லாக்:
இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும்போதும், திறக்கும்போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.

லண்டன் லாக்:
ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து வந்த பழுது பார்ப்பதற்கு வந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.

இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப்பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.

பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை எவ்வளவு தெரியுமா?
22 கிலோ!

ஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி?

இயற்கையும் சரி, வரலாறும் சரி என்றுமே நமக்கு புரியாத புதிராகவே இருக்கும். சில வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடியவை. யாருமே இதுதான் நடந்தது என உறுதிபடக்கூற முடியாது. ஆனால் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் பதில்கள் என்றுமே சுவாரஸ்யத்துடன் ஆவலையும் கொடுப்பவை. அதில் ஒன்றுதான் ஜப்பான் மொழியின் மூலம் எந்த மொழி? தமிழா?

ஜப்பான் மொழியின் எழுத்துமுறை சீன மொழியை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறு சீன எழுத்துமுறை கலப்பதற்கு முன்பாகவே (கி.மு.500 - கி.பி 300களில்) 7000 கிலோமீட்டர் பயணம் செய்து ஜப்பானில் அரிசி விளைவிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்க சென்ற தமிழர்கள் மொழியையும் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஜப்பானிய மொழி தமிழிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஓனோ அவர்களின் வாதம். அரிசியை உலகிற்கு (கிழக்கு நாடுகளுக்கு) விளைவிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். இதில் எவ்வித ஐயமும் கிடையாது.

ஜப்பானிய மொழியானது கி.மு.200க்கு முந்திய காலத்தில் ஆசியாவிலிருந்தோ அல்லது அருகிலுள்ள பசிபிக் தீவுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தோதான் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. (ஆதாரம் - விக்கிபீடியா)

தமிழுக்கே உண்டான சிறப்பு

தமிழின் நேர் வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன் அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டான சிறப்பு. உதாரணம் (ராமன் ராவணனைக் கொன்றான்) இந்த வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அர்த்தம் மாறுவதில்லை. RAMA KILLS RAVANA இதில் சொல்லை மாற்றினால் அர்த்தமே மாறிவிடும். இந்த சிறப்பு வேறு எந்த மொழிகளிலும் கிடையாது.

Monday, October 22, 2012

திருக்குறள் தவிர 15 மேற்பட்ட நூல்களை வள்ளுவர் எழுதியுள்ளார்



திருவள்ளுவர்:

திருக்குறள் தவிர 15 மேற்பட்ட நூல்களை வள்ளுவர் எழுதியுள்ளார். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் - 1500
...
2. திருக்குறள் - 1330
3. ரத்தினச்சிந்தமணி - 800
4. பஞ்சரத்தினம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல் - 100
8. வைத்திய சூஸ்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூஸ்திரம் - 30
11. வாத சூஸ்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51

இன்னமும் இருக்கும் ஆனால் நமக்கு தெரியவில்லை.

வரும்ன்னா வரும்தான்: ரமணன் அங்கிள்





'குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய கூடும்' என்று சொல்லும் ரமணன் அங்கிளை எல்லாருமே டிவியில் பார்த்து இருப்போம். 'இப்படி மழை வரும்னு முன்னாடியே எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க? இதைத் தெரிஞ்சுக்க சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு, சென்னை சூளைமேட்டில் இருக்கும் டி.டி.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் ஒரு விசிட் அடித்தோம்.

'வாங்க பசங்களா... இந்த வானிலை ஆய்வு மையத்தில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வந்து இருக்கிற உங்க எல்லோருக்கும் வணக்கம்' என்று வரவேற்று, கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன்.
...

'இந்த மானிட்டரில் என்ன தெரியுதுன்னு பார்த்துச் சொல்லுங்க'' என்றார். எல்லோரும் அவரைச் சூழ்ந்தனர். ''அதுவா அங்கிள்... வானத்துல மேகங்கள் மூவ் பண்றது தெரியுது'' என்று சுட்டிகள் கோரஸாகச் சொல்ல, ''வெரிகுட்!'' என்று மானிட்டரில் இருக்கும் உலக வரைபடத்தைக் காட்டினார்.

''இது கையால் வரைந்த படம் கிடையாது. சாட்டிலைட் மூலமாக எடுத்த படம்'' என்றார். ''அங்கிள், சாட்டிலைட்பத்தி விவரமாச் சொல்லுங்க' என்று பிரபாகரன் கேட்டான்.

'சாட்டிலைட்னா செயற்கைக்கோள். வானத்தில் இருந்து நமக்குத் தேவையானவற்றை எல்லாம் புகைப்படங்களாக எடுத்துத் தருவதற்காக இங்கே நாங்க செயற்கைக்கோளைப் பயன்படுத்துகிறோம்'' என்று விளக்கம் தந்தார் ரமணன்.

பிறகு, பூமியின் மேற்பரப்பில் எத்தனை டிகிரி வெப்பத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று உலக வரைபடத்தைக் காட்டி விளக்கினார்.

'மழை வரப்போகுதுன்னு எப்படி நீங்க முன்னாடியே சொல்றீங்க?' என்று முக்கியக் கேள்வியைக் கேட்டான் ஜெயராமன்.

'இதோ இந்த வரைபடத்தைப் பாருங்க... குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை இப்போ ஜப்பான் அருகில் இருக்கு. இதனால் ஜப்பான், வடகொரியா மற்றும் தென் கொரியாவில் மழை பெய்யும். இது ஒரே இடத்தில் இருக்காது. காற்று மற்றும் வெப்பச் சலனத்துக்கு ஏற்ப மாறிட்டே இருக்கும். இது வேறு திசைகளுக்கு நகர்வதால் மழை வாய்ப்பும் வேறு இடங்களுக்கு மாறும். இப்படிதான் மழை வருமா? வராதான்னு சொல்வோம்'' என்று விளக்கம் தந்தார்.

''வரும்... ஆனா வராதா அங்கிள்?'' என்று கலாய்த்த பிரபாகரிடம்...

''இப்ப எல்லாம் நாம் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். அதனால், வரும்ன்னா வரும்தான்'' என்று அழுத்தமாகச் சொன்னார் ரமணன்.

(சுட்டி விகடன் - 30.9.2012)

சிபில் கார்த்திகேசு:




சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி. இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர். மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது. ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

நன்றி: விக்கிபீடியா

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!




மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

Sunday, October 21, 2012

மின்வெட்டைத் தீர்க்க அரசாலும், ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் முதல் கட்டத் தீர்வுகளில் உள்ள உண்மை




“தமிழகத்தின் மின்வெட்டிற்கான காரணமும் தீர்வும்” கட்டுரையை 9-10-2012 இல் கீற்று இணைய தளம் மற்றும் முகநூலில் வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி 15-10-2012 அன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மின்வெட்ட...
ைக் குறைப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக்கொண்ட 10 பேர் குழுவினை 17-10-2012 அன்று தமிழக அரசு அமைத்தது.
600 மெகாவாட் திறன்கொண்ட புதிய மேட்டுர் அனல் மின் அலகும், பழுதாகி பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின் நிலையங்களும் தம் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை இரண்டு மணி நேரமாகக் கூட்டி, உபரி மின்சாரத்தை மாநிலத்தின் பிற பாகங்களுக்கு 18-10-2012 தேதியில் இருந்து பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
இந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் நமக்கு மேட்டூர் புதிய மின் அலகில் இருந்து 600 மெகாவாட்டும், வழுதூர் 1 மற்றும் 2 அலகுகளில் இருந்து 187 மெகாவாட்டும், சென்னையில் இருந்து பிரித்தளிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 250 மெகாவாட்டும், ஆக மொத்தம் சுமார் 1037 மெகாவாட் கிடைக்க வேண்டும். அதாவது மாநிலத்தின் பற்றாக்குயான 4000 மெகாவாட்டில் கால் பகுதி இதன் மூலம் சரியாகியிருக்க வேண்டும்.
ஆனால் உண்மை நிலை இதுதானா?
இல்லை என்பதையே நமது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேட்டூர் புதிய அலகானது 608 மெகாவாட் உற்பத்தியை 12-10-2012 அன்று எட்டியது. ஆனால் அதன் பின் அதனால் அந்த அளவு உற்பத்தியை செய்ய இயலவில்லை. அடுத்து வந்த நாட்களில் 300 - 350 மெகாவாட் மின்சாரத்தை சில நாட்களில் உற்பத்தி செய்வதாகவும், பிற நாட்களில் உற்பத்தி அடியோடு நிறுத்தப்படுவதாகவும் நிலையற்ற நிலையிலேயே அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை எப்பொழுது சரியாகும் என்பதை உறுதிப் படுத்தமுடியவில்லை.
வழுதூர் எரிவாயு மின் அலகுகளின் பிரச்சினை வேறாக உள்ளது.
2012 ஜூன் மாதம் மோசமாகப் பழுதடைந்த 95 மெகாவாட் திறன் கொண்ட வழுதூர் 1 ஆம் அலகினை சரி செய்வதற்குத் தேவைப்பட்ட புதிய உபரி பாகங்களை தமிழக அரசு வாங்கவில்லை. மாறாக, பிப்ரவரி 2012 இல் இருந்து பழுதடைந்து நிறுத்தபட்டிருந்த 101 மெகாவாட் திறனுடைய குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தின் ரோட்டர் மற்றும் கியர் பாக்ஸ் ஆகியவற்றை அது பிரித்தெடுத்தது. இவற்றைக் கொண்டு வழுதூர் 1 இன் பிரச்சினைகளை அது சரி செய்தது.
101 மெகாவாட் திறனுடய குத்தாலம் எரி வாயு மின் நிலையத்தினை சரிசெய்வதை விட்டுவிட்டு வழுதூர் 1 ஆம் அலகின் பழுதினை நீக்குவதற்குத் தேவையான உபரி பாகங்களைக் கொடுக்கும் ஒரு இடமாக அதனை தமிழக அரசு மாற்றியது எதற்காக?
இவ்வாறு குத்தாலம் மின் நிலையத்தின் உபரி பாகங்களைக் கொண்டு பழுது நீக்கப்பட்ட வழுதூர் 1 ஆம் அலகு இன்று உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து 95 மெகாவாட் கிடைக்கக் கூடும்.
வழுதூர் 2 ஆம் அலகின் கதை என்ன?
தமிழக அரசின் எரிவாயு நிலையங்களிலேயே மிக அன்மையில் நிறுவப்பட்ட மின் உற்பத்தி அலகுதான் இது. 17-2-2009 ஆம் தேதியன்று உற்பத்தியைத் தொடங்கிய இந்த 92 மெகாவாட் திறன்கொண்ட மின் அலகானது 9-1-2010 ஆம் தேதியன்று மிக மோசமாகப் பழுதடைந்தது. அதாவது அதன் கியாரண்டி காலமான ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பழுதடைந்து போனது. அதனைப் பழுது நீக்க 16 மாத காலம் தேவைப்பட்டது. மீண்டும் 7-5-2011 ஆம் தேதியன்றுதான் அது தன் உற்பத்தியைத் தொடங்கியது. என்றாலும் கூட, அதன் பழுது முற்றாக நீக்கப்படவில்லை. பழுது நீக்கப்பட்ட பிறகும் அதன் ரோட்டர் கருவியானது மிக மோசமான அதிர்வினை வெளிப்படுத்துவதால் 92 மெகாவாட்டுக்கு பதிலாக 68 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்த மின் அலகால் உற்பத்தி செய்யும் சூழ்நிலை உருவானது. இவ்வாறு குறைந்த திறனில் இயக்கப்பட்டு வந்த இந்த அலகானது அடுத்து வந்த ஓராண்டில் சுமார் 15 முறை பிற பழுதுகளால் (ட்ரிப்பிங்) பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. கடைசியில், ஒரு குறிப்பிட்ட உபரி பாகம் இல்லாத காரணத்தால் ஜூன் 2012 இல் இருந்து 45 நாட்களுக்கு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்றும் அது 92 மெகாவாட்டுக்குப் பதிலாக 68 மெகாவாட்டைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஏன் இந்த அவலம்?
மின் வாரியத்தின் நான்கு எரிவாயு நிலையங்களில் மூன்று நிலையங்கள் – குத்தாலம், கோவில்களப்பால் மற்றும் வழுதூர் 1 – பாரத மிகு மின் நிலையத்தின் (BHEL) எந்திரங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனமே இந்த நிலையங்களை நிறுவும் ஒப்பந்ததாரராகவும் இருந்தது.
ஆனால் வழுதூர் 2 ஆம் நிலையத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர் (B.G.Raghupathy) என்ற தனியார் நிறுவனத்திற்கு 2006 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கியது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த நிறுவனத்திற்கு இதற்கு முன் மின் நிலையங்களைக் கட்டிய அனுபவம் ஏதும் இல்லை என்பதுதான். இதுவே அந்த நிறுவனம் மேற்கொண்ட முதல் மின் நிலைய ஒப்பந்தமாகும்.
இந்த மின் நிலையத்தை நிறுவுவதற்காக அது இத்தாலி நாட்டின் ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களைத் தருவித்தது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மற்ற மின் நிலையங்களின் ஒப்பந்தகார நிறுவனமான பாரத மிகுமின் நிலையம் போல பி.ஜி.ஆர் நிறுவனமானது எந்திர வடிவமைப்பிலோ, எந்திர உற்பத்தியிலோ ஈடுபட்டதில்லை. வழுதூர் 2 ஆம் மின் அலகினை அமைப்பதன் மூலம் அது மின்நிலையம் ஒன்றை எவ்வாறு நிறுவுவது என்பதற்கான பயிற்சியையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டது என்றுதான் சொல்ல முடியும். ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களை அதனால் சரியாக நிறுவத் தெரியவில்லை. இதன் காரணமாகமே ஒப்பந்த காலமான 21 மாத காலத்திற்குள் இந்த நிலையத்தினை அதனால் நிறுவ இயலவில்லை. இதற்காக அது கூடுதலாக 10 மாதங்களை எடுத்துக் கொண்டது. இதற்குப் பிறகும் கூட மின் நிலையத்தின் பணிகளை அது அரைகுறையாகவே முடித்துக் கொடுத்தது.
ஒப்பந்த காலமாகிய ஓராண்டு காலம் வரை நிலையத்தில் ஏற்படும் பழுதுகளுக்கு ஒப்பந்தகார நிறுவனமே – அதாவது பி.ஜி.ஆர் நிறுவனமே - பொறுப்பாகும். ஆனால் 9-1-2010 இல் ஏற்பட்ட பழுதிற்கும், அதன்பிறகு 16 மாத காலம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பிற்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்தைத் தமிழக அரசோ, தமிழ்நாடு மின் வாரியமோ பொறுப்பாக்கியதாகத் தெரியவில்லை. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 43 கோடி ரூபாயாகும்.
மேலும், மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தியையே இந்த நிலையம் இன்றும் தந்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் யாரைப் பொறுப்பாளியாக்குவது?
இதனை விட மிகப்பெரிய சோகம் ஒன்றும் இருக்கிறது. வழுதூர் 2 ஆம் மின் நிலையத்தைச் சரியாக அமைத்துக் கொடுக்கத் தெரியாத இதே பி.ஜி.ஆர் நிறுவனத்திற்குத்தான் இன்று நாம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மேட்டூர் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்தத்தை தமிழக அரசு கொடுத்த்து என்பதுதான் அந்தச் சோகம்.
மின்வாரியத்தின் அனைத்து மின் நிலையங்களும் பாரத மிகுமின் நிலையத்தின் எத்திரங்களையே உபயோகின்றன. அதன் புதிய மின் நிலையங்களும் இந்த மரபைத்தான் பின்பற்றி வருகின்றன.
ஆனால், பி.ஜி.ஆர் நிறுவனத்தால் கட்டப்பட்டுவரும் மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்தில் சீன நாட்டின் Dong Fang Electricals நிறுவனத்தின் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையம் 25-9-2011 இல் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அதனால் நிலையான உற்பத்தியைத் தொடங்க இயலவில்லை.
அனல் மின் நிலையங்களுக்கான சீன நாட்டின் எந்திரங்கள் தரம் குறைவானவை என்பதால் அவற்றைக் கொள்முதல் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நடுவண் மின் துறை அமைச்சகம் கடந்த காலத்தில் அறிவுறுத்தியிருந்ததை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்திலும் வழுதூர் 2 ஆம் நிலையத்தைப் போலவே கட்டுப்படுத்த இயலாத அளவு அதிர்வுகள் இருப்பதாகத் தெரிகிறது. வழுதூர் 2 ஆம் நிலையம் போலவே மேட்டூர் புதிய மின் நிலையம் எதிர்காலத்தில் நோயுற்ற யானையாக இருந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வழுதூர் 2 ஆம் நிலையத்தின் பழுதுகளுக்குப் பொறுப்பேற்க வைக்கப்படாத பி.ஜி.ஆர். நிறுவனம் எதிர்காலத்தில் மேட்டூர் புதிய மின் நிலையத்தில் ஏற்படும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்க வைக்கப்படுமா என்ற அச்சம் எழுகிறது. உற்பத்தியைத் துவங்குவதற்கு ஏற்பட்டுள்ள கால தாமதத்திற்கு இந்நிறுவனம் தோராயமாக 1000 கோடி ரூபாய் அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றையும் விட மின் உற்பத்தி இழப்பானது இன்று கடுமையான மின் வெட்டிற்கு மாநிலத்தைத் தள்ளியுள்ளது. இது வழுதூர் 2 ஐப் போன்று 6 மடங்கு உற்பத்தியைக் கொண்ட மின் நிலையமாதலால், இதில் ஏற்படும் பழுதுகள் மாநிலத்தின் மின்சார வினியோகத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.
ஆக, அரசும், செய்தி ஊடகங்களும் சொல்வதைப் போல இன்று நடைமுறையில் உள்ள மின் தட்டுப்பாட்டில் பெரிய மாற்றங்களேதும் உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை.
அவ்வாறு ஏற்பட வேண்டுமென்றால்:
• பி.ஜி.ஆர் நிறுவனத்திடம் கொண்டிருக்கும் மென்மையான அணுகு முறையினை அரசு கைவிட வேண்டும். மக்களின் நலன் கருதி ஒப்பந்தகாரப் பொறுப்புகள் அனைத்தையும் அந்த நிறுவனம் உடனடியாக செயல்படுத்தித் தர நிர்ப்பந்திக்க வேண்டும்.
• குத்தாலம் மற்றும் வழுதூர் மின் நிலையங்களில் நிகழும் பழுதுகள் யாவும் நீண்டகாலம் நீக்கப்படாமல் இருப்பது இந்நிலையங்களைச் சுற்றி உள்ள 8 தனியார் எரிவாயு மின் நிலையங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்காகத்தானோ என்ற சந்தேகம் உள்ளது . அரசு மின் நிலையங்கள் பழுதடைந்து கிடப்பதால் அவற்றிற்குக் கிடைக்க வேண்டிய அரிதான இயற்கை எரிவாயுவினை இந்தத் தனியார் மின் நிலையங்கள் தங்குதடையின்றி பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அருகில் தனியார் மின் நிலையங்கள் ஏதும் இல்லாத கோவில்களப்பால் அரசு எரிவாயு மின் நிலையம் இதுபோன்ற பழுதுகளை 2004 ஆம் ஆண்டிலிருந்தே சந்திக்கவில்லை என்பது இந்த சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.
• ஆந்திர மாநிலத்தின் சிம்மத்திரி அனல் மின் நிலைத்தில் இருந்து இன்றுவரை நமக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தைக் கேட்காமல் இருக்கும் நிலைப்பாட்டினை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். உடனடியாக நமக்குக் கிடைக்க வேண்டிய இந்தப் பங்கினை நாம் கேட்டுப் பெற வேண்டும்.
• குத்தாலம் எரிவாயு மின் நிலையத்திலிருந்து வழுதூர் 1 அலகிற்குப் பிரித்து எடுத்துச் செல்லப்பட்ட எந்திரங்களுக்குப் பதிலாக பாரத மிகுமின் நிலையத்திலிருந்து உடனடியாகப் புதிய எந்திரங்களை வாங்கிப் பொறுத்தி இயக்க வேண்டும்.

அன்புடன்
கோவை. சா.காந்தி,
19 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த நிதி உதவி தேவை......



நிதி உதவி தேவை......


சுயநலம் பாரது பொதுநலத்திற்காக தமது வாழ்நாள் முழுவதையுமே தியாகம் செய்த நமது " பசுமைப் பேராளியான " இயற்கை வேளாண் ஞானி " நம்மாழ்வார் " அவர்களால் உருவாக்கப்பட்ட " நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான வானகம் பண்ணை " இயற்கை வழி வேளாண்மை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சி பணிகளை பல வருடங்களாக சிறப்பாக செய்தும் , அதை நம் மக்...
களுக்காக எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் கற்பித்துக் கொடுத்துக் கொண்டும் வருகிறது.

இந்த சீரிய பணியின் பலனாய் தற்போது தமிழகம் மட்டுமில்லாது உலகமெங்கும் இயற்கை வழி வேளாண்மை சிறப்பாக நடைபெற்று உணவு சங்கிலி மீட்கப்பட்டு வருகிறது.

இதை நம்முடைய எதிர்கால தலைமுறையினருக்கும் கொண்டு சென்று, அவர்களும் பலனடைய வேண்டும் என்கிற நோக்கில் கடந்த 6-10-2012 அன்று வானகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நம்மாழ்வார் ஐயா தலைமையில் நடைபெற்றது. அதில் ஆராய்ச்சிப் பணிகளை மேலும் விரிவுபடுத்தத் தேவையான " மனிதவளம் பற்றியும், நிதி தேவைப்பற்றியும் பற்றிம், நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது. முடிவில் நம்மாழ்வார் ஐயா அவர்களும் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் " ஏங்கல்ஸ் ராஜா " அவர்களும் பொதுநலன் விரும்பிகளுக்கும், நம்மாழ்வார் ஐயாவால் பலன் அடைந்தவர்களுக்கும், பசுமை காவலர்களுக்கும், இளைஞர்களுக்கும் கேட்டுக் கொண்டதுயாதெனில்

1. தொடர் மின்வெட்டினால் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் வானகமே வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலை நீடித்தால் பண்ணை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

இதற்குத் தீர்வாக புதுபிக்கக் கூடிய இயற்கை எரிசக்தியான " சூரிய ஒளி மின்சார தகடுகள் 5HP அளவுகளில் குறைந்த விலையில் பொருத்தித்தர ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கு செலவாகும் உத்தேச மதிப்பு ரூபாய். 5 இலட்சம்.

இதற்கு தேவையான நிதியை (உதரணத்திற்கு, 1000 பொதுநலன் விரும்பிகள் ரூ.500/- வீதம் நன்கொடையாக கொடுத்தால் இத்திட்டத்தை நிறைவு செய்துவிட முடியும்). இதன் மூலம் இன்னும் அதிகப் படியான நீர் நமக்கு கிடைக்கப் பெற்று வனத்தையே உருவாக்க முடியும்.

" மழைக்காலம் முடியும் ( இரு மாதத்தற்குள் ) முன்னர் செய்துமுடிக்க வேண்டும். இல்லையெனில் கோடை வரும் முன்னரே பெரும் தோய்வு நிலை ஏற்பட்டு விடும்."

2. வானகத்தில் பயிற்சி நடக்கும் இடம் ஒரு கீற்றுக்கொட்டகை என்பது அனைவருக்கும் தெரியும், தற்போது மழைக்காலம் என்பதால், அதிக மழைவந்தால் தாங்கக்கூடியதாக இக்கொட்டகை இல்லை. இதை மாற்றியமைக்கவும் , இங்கு நீண்டகால பயிற்சிக்கு வருபவர்களுக்கு முறையான இடவசதி தேவை.

3. மேலும் " நம்மாழ்வார் ஐயாவின் " அறிவுக் கூர்மைக்குக் காரணமான புத்தகங்கள் நமது வானகத்தில் உள்ளது. அதை அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளுவும், அதை பாதுகாக்கவும் நூலக வசதி தேவை?

4. வானகத்தில் இயற்கையின் மீது பற்றுள்ள பயிற்றுனர்களும் தேவைப்படுகின்றனர்.

எனவே 1000 துடிப்பான சமூக சிந்தனையுள்ள தன்னார்வமிக்க இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் வாழ்வியல் நெறிகளையும் கற்பித்து அவர்களையே பயிற்றுனர்களாக உருவாக்கும் பணியும் விரைவில் செய்தும் முடிக்க வேண்டும். ( 1000 தன்னார்வ இளைஞர்கள் தேவை. )

எனவே தங்களால் இயன்ற நிதியை மற்றும் பங்களிப்பை உடனடியாக அளித்து , வானகத்தின் வளர்ச்சியில் பங்கேற்று, இவ் ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த தொடந்து பணியாற்ற உதவுவோம்.

செய்தியை நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நன்றி!!

வானகம் வங்கி கணக்கு விவரங்கள்:

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
( Vanagam IOB Account no )
G. Nammalvar A/C no :137101000011534
Bank Name : Indian Overseas Bank , Kadavoor
IFSC Code : IOBA0001371
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Contact : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in

மேலும் விவரங்களுக்கு
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் - 621 311
தொலைபேசி எண்கள் : 94435 75431, 98444 45714, 94880 55546

Vanagam, Surumanpatti, Kadavur,
Tharagampatti Via,
Karur Dt.
Pin code 621311.
Cell : 94435 75431, 98444 45714, 94880 55546

http://vanagamvattam.blogspot.in/
http://www.vanagam.com/
http://www.facebook.com/pages/Nammalvar-Ecological-Foundation/
http://www.facebook.com/pages/Dr-G-Nammalvar-Organic-Agriculturist/

வாருங்கள் . நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இயற்கையை சிதைக்காமல் மீட்போம்.

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.
மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.

உழவு பழக ஆசையா உதவுகிறார் வேளாண் ஞானி திரு நம்மாழ்வார் அவர்கள்



பசுமை தோழர்களே வணக்கம் கரூர் மாவட்டம் கடவூர் அருகில் சுருமான்பட்டியில் 55 ஏக்கர் பரப்பளவில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த எழில்கொஞ்சும் இடம் தான் ஐயா நம்மாழ்வார் அவர்களின் உயிர் சூழல் நடுவம் அறகட்டளைக்கு சொந்தமான "வானகம் "
நவம்பர் 3 மற்றும் 4 (சனி,ஞாயிறு ) தேதிகளில் வேளாண் சார்ந்த கலைகளான உழவு ஒட்டுதல் ,கலப்பை பூட்டுதல் மற்றும் இயற...
்க்கை வாழ்வியல் ,இயற்க்கை வழி வேளாண்மை போன்ற துறைகளில் உங்களுக்கு உள்ள அச்சங்களையும் சந்தேகங்களையும் ஐயா நம்மாழ்வார் அவர்கள் நேரடியாக பதில் சொல்கிறார் ,வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் நிலத்தில் இறங்கி வேலை செய்யும் கள பயிற்சியும் உண்டு .

மரபு வழி வேளாண்மையை மீட்டு எடுக்கும் மண்வெட்டி ஐயா நம்மாழ்வார் அவர்களோடு இணைந்து பணியாற்று ஓர் இனிய வாய்ப்பு .
.

குறிப்பு :
1)அங்கு aitel மற்றும் aircel tower கிடைக்காது
2)காலை 9 .30 குள் வானகம் வந்து சேர முயற்சி செய்யுங்கள்
3)சிறுதானியங்கள் மற்றும் விதைகள் அங்கு கிடைக்கும்
4)ஐ யா நம்மாழ்வார் அவர்களின் புத்தகங்கள் மற்றும் cd கள் கிடைக்கும்
5)அக்டோபர் 25 குள் முன்பதிவு செய்யுங்கள்

வானகம் :
திண்டுக்கலில் இருந்து காலை 6 .15 மற்றும் 8 .15 இக்கு பாலவிடுதி செல்லும் பேருந்து கிளம்பும் ,அதில் ஏறி கடவூரில் இறங்கி கொள்ளவும் ,கடவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 1km தொலைவில் வானகம் அமைந்துள்ளது(கடவூரில் இருந்து நடந்து வந்து விடலாம் )

கட்டணம் :
கட்டணம் எதுவும் அவர்கள் குறிப்பிடவில்லை இருப்பினும் இரண்டு நாட்கள் நமக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்து தருவதால் நம்மால் இயன்ற சிறு தொகையை நமக்குள் திரட்டி கொடுப்போம்

மேலும் விவரங்களுக்கும் முன்பதிவிற்க்கும்
ராஜ்மோகன் 9894462698

எளிய தமிழ் இருக்க பண்ணு தமிழ் எதற்கு?



எளிய தமிழ் இருக்க பண்ணு தமிழ் எதற்கு?

Thursday, October 18, 2012

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதைகள்

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதைகள்
 
 
கடவுள் அனுப்பி வைத்தாரா?

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.

‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’

‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.

‘‘ஏன் சிரிக்கிறாய்?’’
‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?’’

மக்கள் யோசித்தார்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’

‘‘எது பொய் என்கிறாய்?’’

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’

நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?
ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’
.


இசை'வாக இருவர்!

நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை!
கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.
இசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.
''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா?'' என்று கேட்டார்.
''ஆமாம்...'' என்றான் தயங்கியபடி.
உடனே அவர், ''அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இப்பத்தான் உள்ளே போனார். வாங்க அவரைப் பார்க்கலாம்'' என்று கூற, ஆடிப்போய் விட்டான் நம்ம ஆள்!
'இனி, பின்வாங்க முடியாது... என்ன நடக்கப் போகிறதோ? தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ? இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே' - தயக்கமும் குழப்பமுமாக அவரைப் பின்தொடர்ந்தான்.
அவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா! ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.
'என்ன?' என்பது போல் பார்த்தார் அவர்!
''இவரை உங்களுக்குத் தெரியுமா?''
உடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க?'' என்றார் அழைத்து வந்தவரிடம்!
''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் ஓவியரான்னு தெரிஞ்சுக்கணும்?''
''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது?'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்!
அவ்வளவுதான்... நம்ம ஆளை சந்தேகப்பட்டவர், இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு விட்டு, ''உங்க ஆசிரியர் பக்கத்துலேயே நீங்களும் உட்கார்ந்துக்கோங்க'' என்று இவனிடம் கூறிவிட்டு வாசலுக்கு நகர்ந்தார்.
நம்ம ஆளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
மெள்ள ஆசிரியரின் பக்கம் திரும்பி, ''ஐயா... என் மானத்தைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி!'' என்றான் நெகிழ்ச்சியுடன்.
உடனே அவர், ''இதுக்கு எதுக்கு தம்பி நன்றி? ஒருத்தருக் கொருத்தர் செய்ற உதவிதானே இது!'' என்றார்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்: ''என்ன புரியலையா? நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான்!'' என்றார் சிரித்தபடி.
நண்பர்களே! இன்றைய ஆன்மிக உலகமும் இப்படித்தான் உள்ளது. சீடர்களாக வேடம் தரித்தவர்கள், குருவாக வேடம் தரித்தவர்களிடம் சென்று ஆசி வாங்குகிறார்கள். வேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்.
அப்போதுதான் உண்மையை அடையாளம் காண முடியும்.

நண்பர்கள்

ஓர் ஊரில் பத்து நண்பர்கள் இருந்தார்கள்.

அவர்கள் எங்கே போனாலும் சேர்ந்தேதான் போவார்கள்; வருவார்கள். அப்படியரு பாசப் பிணைப்பு.

பக்கத்து நகரத்துக்கு அவர்கள் ஒரு தடவை சினிமா பார்க்கப் போனார்கள்.

இரண்டாவது ஆட்டம்...படம் முடிந்து வெளியே வந்தார்கள்.

பக்கத்தில் இருந்த மதுக்கடைக்குள் நுழைந் தார்கள்.

மயக்கத்தோடு வெளியே வந்தார்கள்.ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

வழியில் ஒரு பெருங்காடு.அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

நள்ளிரவு நேரம்.
நடுக்காட்டில் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென்று மழை... நேரம் ஆக ஆக மழை வலுத்தது.

‘‘இனி... நாம இங்கேயே தங்கிக்கறதுதான் நல்லது. விடிஞ்சதும் ஊருக்குப் போகலாம். இப்ப நாம இந்த ஆல மரத்துக்குக் கீழே படுத்துக்கலாம்!’’ என்று அந்தப் பத்துப் பேரில் ஒருவன் சொன்னான்.

எல்லோரும் படுத்துக் கொண்டார்கள்.குளிர் ஒரு பக்கம்; பயம் ஒரு பக்கம்.எப்படியோ தூங்கிப் போனார்கள்.பொழுது விடிந்தது.விழித்துப் பார்த்தால் அவர்களுக்குள் ஒரு புதிய சிக்கல்.

ஆமாம்... அவர்களின் கைகளும் கால்களும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டிருந்தன.

பிரிக்க முடியவில்லை. காரணம் அவரவர்களின் கை எது? கால் எது என்பது அவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை.

அழ ஆரம்பித்தார்கள். இந்த அழுகைச் சத்தம் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வழிப்போக்கனின் காதில் விழுந்தது.

நெருங்கி வந்தான்.

‘‘என்ன ஆச்சு உங்களுக்கு?’’

‘‘பயத்துலே நடுங்கிக்கிட்டே படுத்தோம்... காலை யிலே பாத்தா கை & கால் எல்லாம் பின்னிக்கிட்டு கிடக்குது!’’

‘‘அதாங்க பிரச்னை... எது எங்களுடையதுனு அடையாளம் தெரியலே.. இப்ப என்ன பண்றது..?’’

‘‘கவலைப்படாதீங்க... நான் உங்க சிக்கலைத் தீர்த்து வைக்கிறேன்!’’

வழிப்போக்கன் பக்கத்திலிருந்த கருவேல மரத்தி லிருந்து ஒரு நீண்ட முள்ளை ஒடித்துக் கொண்டு வந்தான். ஒரு காலில் குத்தினான்.
‘‘ஆ...!’’ என்றான் ஒருத்தன்.

‘‘இந்தக் கால் உன்னுடையது. எடுத்துக்கோ...!’’ என்று சொல்லிவிட்டு ஒரு கையில் குத்தினான்.

‘‘ஐயோ!’’ என்று அலறினான் ஒருத்தன்.

‘‘இந்தக் கை உன்னுடையது. இழுத்துக்கோ’’ என்றான்.

வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்.

இப்படியாக அந்த நண்பர்களின் கை&கால்களை அவர் அடையாளம் காட்டினார். அவர்கள் விடு பட்டார்கள்.

பந்தபாசம் இப்படித்தான். பல சமயம் மனிதர்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. சிக்கிக் கொள்கிறார்கள்.

ஆன்மிக வெளிச்சம் என்கிற முள் வந்துதான் அவர்களை விடுவிக்க வேண்டி இருக்கிறது!

இது ஒரு புதுமையான பாத்திரம்

ஒரு மனிதன். நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?’ அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

ஒரு நாள் கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு பொருளைப் பார்த்தான். இதுவரையில் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள் அது. ஆகவே, தனக்குத் தெரியாதது எல்லாமே தன் மனைவிக்கும் தெரியாது என்கிற ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

‘‘அது என்னங்க?’’ என்று விசாரித்தான்.

‘‘அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’ என்றார் கடைக்காரர்.

‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு உபயோகம்?’’

‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா சூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’

‘‘அப்படியா சொல்றீங்க...?’’‘‘ஆமாங்க!’’ ‘‘அப்படின்னா அதுலே ஒண்ணு கொடுங்க!’’
வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

அவனுக்குள் உற்சாகம் உற்பத்தியாயிற்று.
மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத் திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

‘‘சீக்கிரம் இங்கே வா!’’ என்று மனைவியை அழைத்தான்.அவள் வந்தாள். கவனித்தாள்.

‘‘என்னங்க இது?’’ ‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’

‘‘எதுக்கு இது?’’ என்று தெரியாதது போல கேட்டாள்.

‘‘இது சூடான பொருளைச் சூடாகவும், குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும் அப்படியே வெச்சிருக்கும்! உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன்!’’

கணவன் தலை நிமிர்ந்து நின்றான்.

மனைவி கேட்டாள்:

‘‘உள்ளே என்ன இருக்கு?’’

அவன் சொன்னான்:

‘‘அதுவும் உனக்காகத்தான் வாங்கி வந்தேன்!’
‘‘அப்படியா? என்ன அது... சொல்லுங்களேன்.’’

‘‘ஒரு கப் காபியும் ஒரு கப் ஐஸ்கிரீமும்!’’

மனைவி மயங்கி விழுந்தாள்.

நண்பர்களே!

ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு; அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!

‘‘விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் என்ன வேறுபாடு?’’ என்று பெர்னாட்ஷாவிடம் கேட்டார்கள். அவர் சொன்னார்: ‘‘விஞ்ஞானம் இருக்கிறதே.... புதிதாகப் பத்துப் பிரச்னைகளை உருவாக்காமல் எந்த ஒரு பிரச்னைக்கும் அது தீர்வு கண்டதில்லை!’’

அறிவால் ஏற்படுகிற வெளிச்சம் & விஞ்ஞானம்; ஆன்மாவால் ஏற்படுகிற வெளிச்சம் & மெய்ஞ்ஞானம்!



நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா


ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகி றார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!


சார், இதன் தீர்வு என்ன?


ஒரு பள்ளிக்கூடம்.

ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார்.

மாணவர்கள் எழுந்து நிற்கிறார் கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.

3 & 6 & 12

&இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார்.

‘‘மாணவர்களே... இதன் தீர்வு...’’

அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான்.

‘‘ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!’’

‘‘இல்லை!’’ என்கிறார் ஆசிரியர்.

அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள்.

‘‘ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!’’

‘‘இல்லை... இல்லை!’’
மாணவர்கள் விழிக்கிறார்கள்.

இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.

‘‘மாணவர்களே... நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.’’

தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.

‘‘இப்போது மறுபடியும் முயல்வோம்...’’ என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்:

22 58 33 55.

உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.

‘‘சார், இதன் தீர்வு என்ன?’’

ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘‘இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!’’

மாணவர்கள் அமைதியானார்கள்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.
‘‘மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை:

கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

இரண்டாவது அறிவுரை:

ரிலாக்ஸாக இருங்கள்.

நண்பர்களே! இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும்தான்.

இன்றைய மனிதன் கற்பனையான பிரச்னை களிலேயே அதிகம் கலங்கிப் போகிறான். அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.

விளைவு?

ஆலயங்களை நாடிச் சென்று ஆண்டவனிடம் முறையிடுகிறான்.

பக்தர்களே!

உங்களுக்கு பகவான் சொல்ல விரும்புகிற அறிவுரையும் இதுதான்:

1. கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

2. ரிலாக்ஸாக இருங்கள்.


அறிவு என்றால் என்ன?
ஒரு நண்பர் வந்தார்.

''உன்னிடம் ஒரு கேள்வி!'' என்றார்.

''கேள்!'' என்றேன்.

''அறிவு என்றால் என்ன?'' என்றார்.

''எனக்குச் சம்பந்தமில்லாத ஒரு விஷயம்!''

''அது எனக்குத் தெரியும்.... அதற்குச் சம்பந்தம் உள்ளவர்கள் அதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையாவது சொல்லலாமே...?''

''அதை வேண்டுமானால் சொல்கிறேன்... கன்ஃபூஷியஸைப் பார்த்து ஒருவர் இதே கேள்வியைக் கேட்டாராம்... அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?''

''சொல்!''

''தனக்குத் தெரிந்ததைத் தெரியும் என்றும் தெரியாததைத் தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு''

''இன்றைய மனிதர்கள் தெரியாததைப் பற்றியெல்லாம் தெரிந்தது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்களே...?''

''என்ன சொல்கிறாய்?''

''சந்திக்காத கடவுளைப் பற்றி சகல புள்ளி விவரமும் தந்து கொண்டிருக்கிறார்களே...!''

''உண்மைதான்... ஒப்புக் கொள்கிறேன்!''

''அப்படியானால் நான் ஒரு கதை சொல்கிறேன்.... கேட்கிறாயா...?''

''சொல்... கேட்கிறேன்!''

நண்பர் கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு பலூன் வானில் பறந்து கொண்டிருந்தது. அதில் ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்தான்.

அவன் வழிதவறிப் போய் ஒரு வயல்வெளியில் இறங்கிவிட்டான். அது எந்த இடம் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

அப்போது வயல் வரப்பு வழியாக ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

நல்லவேளை! வழிகாட்டுவதற்கு ஒருவர் வந்துவிட்டார் என்ற நம்பிக்கையில், ''ஐயா! இப்போது நான் இருக்கும் இடம் எது என்று எனக்குத் தெரியவில்லை.. உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...'' என்றான்.
அவர் சொன்னார்.

''கோதுமை வயல்களுக்கு நடுவில், ஒரு பெரிய சிவப்பு பலூனில் பாதுகாப்பாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.''

பலூனில் இருந்தவர் சொன்னார்.

''ஐயா! நீங்கள் ஒரு அக்கவுண்டண்ட் என்று நினைக்கிறேன்!''

''எப்படிக் கண்டுபிடித்தாய்?'' ''நீங்கள் சொன்ன பதில் சரியான புள்ளி விவரங்களுடன் இருந்தது. ஆனால், எதற்கும் உபயோகப்படாமல் இருந்ததே... அதை வைத்துத்தான் Ôஅக்கவுண்டண்ட்Õ என்று கண்டுபிடித்தேன்!''


நண்பர்களே! நம் வாழ்க்கைக்குப் பயன்படாத எந்த ஓர் ஆன்மிக உபதேசமும் நம்மை மேம்படுத்த முடியாது!

 
எதை விட்டுக் கொடுப்பது?
ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு நிறைய சீடர்கள். இவர்கள் அனைவரும் பெரியவர் மீது அன்பைப் பொழிந்தனர். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர். பெரியவரது உலக வாழ்க்கை நிறைவு பெறும் நேரம் வந்தது. அவரைத் தேடி வந்த கடவுளின் தூதர், "ஐயா! உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்! என்றார். சீடர்கள் துடித்துப் போனார்கள்.


இன்னும் சிறிது காலம் அவரை இந்த உலகத்திலேயே இருக்க விடுங்களேன்! என்று கடவுளின் தூதரிடம் மன்றாடினர். இந்த உலகத்தில் அவர் வாழ வேண்டிய காலம் முடிந்து விட்டதே! என்றார் கடவுளின் தூதர். "வேறு வழி இல்லையா? என்று குரலில் சோகம் ததும்பக் கேட்டனர் சீடர்கள். ஒரே ஒரு வழிதான் உள்ளது! என்றார் தூதர். என்ன வழி? தயவு செய்து சொல்லுங்கள்! ஆர்வத்துடன் கேட்டனர் சீடர்கள்.

அவருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய நீங்கள் முன்வர வேண்டும்! என்றார் தூதர். உடனே பெரியவருக்காக எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்! என்றனர் சீடர்கள். இதைக் கேட்ட தூதர், உயிர் வேண்டாம்,. உங்கள் வாழ்நாளில் ஆளுக்குக் கொஞ்சம் இவருக்குக் கொடுத்தால்... அதை இவரது ஆயுள் கணக்கில் வரவு வைத்து விடலாம்! என்றார்.

முதலில் ஒருவன் வந்தான். என் ஆயுளில் இரண்டு வருடத்தைத் தருகிறேன்! என்றான். இன்னொருவன், ஒரு வருடம் தருகிறேன்! என்றான். மூன்றாவதாக ஒருவன், ஒரு மாதம்! என்றான். எதையுமே செலவு செய்து பழக்கமில்லாத ஒருவன் எனது ஆயுளில் ஒரு நிமிட நேரத்தை இவருக்காகத் தருகிறேன்! என்றான்.

கடைசியாக வந்த ஒருவன் சொன்னான். இருபது வருடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! இதைக் கேட்ட கடவுளின் தூதருக்கு ஆச்சர்யம். இது ரொம்ப அதிகம் இல்லையா? என்று கேட்டார். உடனே அந்த ஆசாமி சொன்னான். ""நான் சொன்ன இருபது வருடங்கள் என் மனைவியின் வயதிலிருந்து!''

நண்பர்களே! உலகில் எதுவுமே உங்களுடையது இல்லை என்பதை உணருங்கள். அப்படி உணரும் போதுதான் நீங்கள் ஆன்மிகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். "இது என்னுடையது' என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை. "எதுவும் என்னுடையது அல்ல!' என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை!.



எது சரி

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.


கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.



மதவாதிகளே!
ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவ மனைக்குப் போனார்.

டாக்டரிடம் சொன்னார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.

அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.

மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.

‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.

அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.

படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...

ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.

அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு& இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.

இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.

இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!

மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.

சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.

ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!

ஆமாம்!

இப்போது டாக்டருக்கும் தலைவலி!

மதவாதிகளே!

தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!


கடவுளை விடவும் மேலானது கடவுள் நம்பிக்கை!

‘‘என்ன... இப்படி சோர்ந்து போய் நடந்து வந்துக்கிட்டு இருக்கே?’’

‘‘நடக்கவே முடியலை... அவ்வளவு சோர்வு. உடம்பில் ஏதோ கோளாறு... டாக்டர்கிட்டே போகணும்!’’

‘‘அதுக்கும் முன்னாடி கடற்கரைப் பக்கம் போகலாம் வா!’’

‘‘அங்கே எதுக்கு?’’

‘‘அங்கே ஒருத்தன் ‘சுறுசுறுப்பு டானிக்’ விற்கிறான். தினமும் காலையிலேயே ஒரு ‘ஸ்பூன்’ சாப்பிட்டா போதும். நாள்பூரா உற்சாகமா இருக்கும். சுறுசுறுப்பு தானா வந்துடும்.!’’

‘‘அப்படியா சொல்றே?’’

‘‘ஆமாம்... நான் கூட வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். நல்ல பலன் இருக்கு... நிறைய பேர் தினம் வந்து வாங்கிட்டுப் போறாங்க!’’

‘‘அப்படின்னா சரி... வா போகலாம்!’’

இருவரும் கடற்கரை நோக்கி நடந்தார்கள்.

அங்கே அவன் அந்த மருந்தை (டானிக்!) விற்றுக் கொண்டிருந்தான்.

அது அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது.

இவனும் போய் ஒரு பாட்டில் மருந்து வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

என்ன ஆச்சரியம்!

சோர்வாக இருந்த உடம்புக்குள் சுறுசுறுப்பு தெரிய ஆரம்பித்தது.

உற்சாகமாக நடக்க ஆரம்பித்தான். நண்பனைத் தேடிப் போய் நன்றி சொன்னான், ஒரு நல்ல மருந்தை அறிமுகம் செய்து வைத்ததற்காக!

கொஞ்ச காலம் கழிந்தது.

கைவசம் இருந்த மருந்து தீர்ந்து போனது.

மறுபடியும் வாங்க வேண்டும்.

கடற்கரைக்குப் போனான்.

அங்கே அவனைக் காணவில்லை. மருந்து விற்பவன் என்ன ஆனான்? வேறு ஊருக்கு போயிருப்பானோ?

பல ஊர்களிலும் தேடிப் பார்த்தார்கள். பலன் இல்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள்& இவர்கள் கடற்கரைக்குப் போனபோது அங்கே அவன் இருந்தான்.

இப்போது அவன் மருந்து விற்பனை செய்யவில்லை. பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.

‘‘என்ன ஆச்சு உனக்கு... எங்கேயெல்லாம் உன்னைத் தேடுறது? அந்த ‘சுறுசுறுப்பு டானிக்’ இன்னும் கொஞ்சம் வேணுமே? அதுசரி... இவ்வளவு நாள் எங்கே இருந்தே?’’

‘‘ஜெயில்லே இருந்தேன்...!’’

‘‘ஜெயிலா? என்ன ஆச்சு?’’

‘‘போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் சிறைத் தண்டனை!’’

‘‘போலி மருந்தா... என்ன சொல்றே?’’

‘‘ஆமாம்... நான் உங்ககிட்டே விற்பனை பண்ணினது உண்மையிலேயே சுறுசுறுப்பு டானிக் இல்லை!’’

‘‘அப்படிச் சொல்லாதே! அதைச் சாப்பிட்டதும் எங்க உடம்பு சுறுசுறுப்பு ஏற்பட்டது உண்மை!’’

‘‘இருக்கலாம். அதுக்குக் காரணம் மருந்து இல்லை... நம்பிக்கை!’’

‘‘என்னப்பா சொல்றே?’’

‘‘நான் உங்ககிட்டே வித்தது வெறும் தண்ணிதான். உப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இதையெல்லாம் பொடி செய்து அதுலே கலந்திருந்தேன்... அவ்வளவுதான். இதைச் சாப்பிட்டதும் சுறுசுறுப்பு வந்துட்டதா நீங்க நினைச்சிட்டீங்க. உங்க நினைப்புதான் உங்களின் உந்து சக்தி!’’

இப்படி சொல்லிவிட்டு அந்த மனிதன் பலூன் விற்கப் போய்விட்டான்.

இவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு சிக்கலான கேள்விக்கு விடை கிடைத்தது.

கேள்வி: நமக்கு முக்கியம் கடவுளா? கடவுள் நம்பிக்கையா?

பதில்: கடவுளை விடவும் மேலானது கடவுள் நம்பிக்கை!


கோபத்தை விரட்ட என்ன செய்வது?


ஒருத்தர் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

‘‘என்னங்க இது?’’ என்றார் எதிரே வந்த நண்பர்.

‘‘எல்லாம் கோபத்தினால் வந்த விளைவு!’’ என்றார் அவர்.

‘‘கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்?’’

‘‘குடும்பத்துல சண்டை. ஆத்திரப்பட்டு என்னமோ சொல்லிப்புட்டேன்... அதுக்காக ஏதோ ஒரு பாத்திரத்தை எடுத்து என் முகத்துக்கு நேரா வீசிப்புட்டா என் வீட்டுக்காரி... அவ்வளவுதான்!’’

‘‘குடும்பம்னு இருந்தா இதெல்லாம் சகஜம்தானே...!’’

‘‘உங்க வீட்டுலேயும் இப்படி நடக்கறது உண்டா?’’

‘‘தாராளமா உண்டு!’’

‘‘ஆனா, உங்க தலையில கட்டு எதையும் காணோமே..?’’

‘‘நாம கொஞ்சம் அனுசரிச்சு நடந்துகிட்டா எதுவும் பிரச்னை வராது!’’

‘‘எப்படி அனுசரிச்சுப் போறது...? அதைக் கொஞ்சம் எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்?’’

‘‘சொல்லிக் கொடுக்கறேன். அதுக்கு முன்னாடி ஓர் உண்மையைப் புரிஞ்சிக்கணும்!’’

‘‘என்ன அது?’’

‘‘கோபம்கறது ஒரு தற்காலிகப் பைத்தியம் தான்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். தற்காலிகமா ஒருத்தருக்குப் பிடிக்கிற பைத்தியம்தான் கோபம். அந்த நேரத்துலே அவரு மறைச்சு வெச்சிருக்கிற பைத்தியக்காரத்தனம் வெடிச்சிக்கிட்டு வெளியிலே வருது... அவ்வளவு தான்!’’

‘‘சரி.. இப்ப என்ன செய்யலாம்கறீங்க?’’

‘‘கோபம் வர்ற நேரத்துல நாம் ஒரு காரியம் செய்யலாம்.. அதாவது அஞ்சு தடவை நம்ம மூச்சை ஆழமா உள்ளே இழுத்து மெதுவா மெள்ள வெளியே விடணும்.’’

‘‘அப்படி செஞ்சா...?’’

‘‘மனசுலே கோபத்துக்குப் பதிலா சுவாசம் பத்தின சிந்தனை ஏறும். இதுக்கப்புறம் கோபம் வந்தா கூட அது தீவிரமா இருக்காது. இதைத் தொடர்ந்து செஞ்சா அது ஒரு பழக்கமாகவே ஆயிடும். ஆத்திரத்தை விரட்ட, ஆன்மிகம் சொல்லிக் கொடுக்கிற ஒரு சுலபமான வழி இது!’’

‘‘நீங்க இந்த வழியைத்தான் கடைப்பிடிக்கிறீங்களா?’’

‘‘இல்லை.. அது வேறே வழி!’’

‘‘எப்படி அது?’’

‘‘என் மனைவிக்குத் திடீர் திடீர்னு பயங்கரமா கோபம் வந்துடும். கோபம் வந்துட்டா கையிலே கிடைக்கிற பாத்திரத்தையெல்லாம் எடுத்து என் முகத்துக்கு நேரா வீசறது உண்டு!’’

‘‘அதை எப்படி சமாளிக்கிறீங்க?’’

‘‘அது ரொம்ப சுலபம்.. ஒரு தலையணையை எடுத்து என் முகத்துக்கு நேரா பிடிச்சுக்குவேன்..!’’

சொர்க்கத்துக்கு அனுமதிச் சீட்டு!



ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.

ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.

அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.


மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.

‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.



‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்தி ருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்--& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானா லும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக் கான அனுமதிச் சீட்டு!’’


‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித் தான்.

பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட் டார்!’’

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’


‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:


காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!




பல் இல்லாத பக்தர்கள்...!

ஒரு பெரிய மனிதர். பக்தி மான். அவருக்குப் பல் வலி. வேலைக்காரனைக் கூப்பிட்டார்.
‘‘நீ உடனே போய் பல் வைத்தியர் ஒருவரை அழைத்து வா!’’ என்றார்.
பல் வைத்தியர் வந்து சேர்ந்தார். இவர் பல்லைக் காட்டினார். சோதித்துப் பார்த்து விட்டு அவர் சொன்னார்: ‘‘இந்தப் பல்லை எடுத்துடறதுதான் நல்லது!’’
‘‘சரி... எடுத்துடுங்க!’’ என்றார் இவர்.
இந்த நேரத்தில் வாசல் பக்கம் யாரோ வருவது தெரிந்தது. பார்த்தார். அவர் அடுத்த ஊரைச் சேர்ந்த இன்னொரு பெரிய மனிதர். வேறொரு கடவுளின் பக்தர் அவர். உடனே இவர், ஒரு ‘ஐடியா’ பண்ணினார்.
‘‘வைத்தியரே... நீங்க கொஞ்ச நேரம் அடுத்த அறையில் போய் இருந்துக்கோங்க. நான் கூப்பிடும் போது வரலாம். எடுக்க வேண்டிய பல் இதுதான்... பார்த்துக்கோங்க!’’
அவரும் ‘‘சரி’’ என்று சொல்லிவிட்டு, அடுத்த அறைக்குள் சென்று விட்டார்.
அடுத்த ஊர் பெரிய மனிதர் உள்ளே வந்தார். இருவரும் பேச ஆரம்பித்தார்கள்.
‘‘உங்கள் கடவுளிடம், நீங்க வெச்சிருக்கிற பக்தியை விட, எங்கள் கடவுள் மேலே நான் வெச்சிருக்கிற பக்தி அதிகம்!’’ என்றார் இவர்.
‘‘எப்படி சொல்றீங்க...?’’ என்றார் அவர்.
‘‘நீங்க, உங்க கடவுளுக்கு என்ன காணிக்கை செலுத்தறீங்க?’’
‘‘முடி காணிக்கை செலுத்துவோம்!’’
‘‘நான் எங்க கடவுளுக்கு என் பல்லையே காணிக்கையா இப்ப செலுத்தப் போறேன்.’’
‘‘என்ன சொல்றீங்க?’’
‘‘கொஞ்சம் பொறுங்க!’’ என்று சொல்லிவிட்டு வேலைக்காரனைக் கூப்பிட்டு, ‘‘அவரை அழைத்துக் கொண்டு வா!’’ என்றார்.
பல் வைத்தியர் வந்தார்.
‘‘இதோ பாருங்க... என் கடவுளுக்கு என் பல்லையே காணிக்கையா செலுத்த விரும்பறேன். அதனால ஒரு பல்லைப் பிடுங்கி எடுத்துடுங்க!’’
பல் வைத்தியர் புரிந்து கொண்டார். அந்தச் சொத்தைப் பல்லைச் சரியாகப் பிடுங்கி எடுத்து விட்டார்.
இதைப் பார்த்த அடுத்த ஊர்ப் பிரமுகருக்கு ஆவேசம் வந்து விட்டது.
‘‘நானும் பக்தியில் உங்களைவிட குறைந்தவன் இல்லை!’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஐயா வைத்தியரே... அவரு ஒரு பல்லைத்தானே தியாகம் பண்ணினார். நான் என் கடவுளுக்காக இரண்டு பற்களைத் தியாகம் பண்றேன். வாங்க... என்கிட்டே இருந்து இரண்டு பற்களைப் பிடுங்கி எடுத்துடுங்க!’’ என்றார்.
வைத்தியர் பார்த்தார். அவருக்கா வலிக்கப் போகிறது? நல்ல பல்லாகப் பார்த்து இரண்டைப் பிடுங்கிப் போட்டு விட்டார். இப்போது பல் இல்லாத அந்த இரண்டு பக்தர்களும் ஓருவரைப் பார்த்து ஒருவர் பெருமையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றி நான் என்ன சொல்வது? கடவுளே இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்!

தெனாலிராமன் வரலாறு:


சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.
சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.

காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான்.

அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.

காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்
அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.

அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன.

சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர்.

இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார்.

அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன்.
இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார்.

இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள்.

பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி.

தென்கச்சி கோ.சுவாமிநாதன்


ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட...
்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.




ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!




நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Wednesday, October 17, 2012

இப்படியும் ஒரு வரலாறு.





நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித...
்தது.
ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார்.

“சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்/ பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .

சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார்
.
அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர்.
வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.

பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது செய்துகொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார்.

கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததைவிட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார். பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.

’தலைவர்கள்‘ எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.