Tuesday, March 12, 2013

குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?

போர் அடிக்க கூடாது
 குழந்தைகள் சாப்பிடும் போது, அவர்களுக்கு போர் அடிக்காத வகையில், அவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிட வைக்க வேண்டும். இதனால் அவர்கள் அதனை கவனித்துக் கொண்டே சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

சரியான நேரம் 
குழந்தைகளுக்கு எப்போதும் சரியான நேரத்தில் உணவைக் கொடுக்க வேண்டும். அதிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 6-7 முறையாவது சரியான இடைவெளியில் சாப்பிடுவதற்கு கொடுக்க வேண்டும். 

ஒரே உணவு 
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, அதிகமான வெரைட்டியாக உணவுகளை கொடுக்க வேண்டாம். உண்ணும் நேரம் ஒரு உணவை மட்டும் கொடுத்து பழக்க வேண்டும். மேலும் அவ்வாறு கொடுக்கும் போது, நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க வேண்டும். 

ஜங்க் உணவுகள் 
உணவுகளை கொடுக்கும் போது, உப்பு அதிகம் உள்ள உணவையோ, எண்ணெயில் பொரித்த உணவுகளையோ அல்லது ஜங்க் உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 

பானங்கள் 
குடிப்பதற்கு ஏதேனும் ஜூஸ் கேட்டால், அப்போது கார்போனேட்டட் பானங்களை கொடுப்பதற்கு பதிலாக, பழங்களால் செய்யப்பட்ட ஜூஸ் கொடுப்பது நல்லது. 

ஆரோக்கியமான உணவுகள் 
குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுகளை கொடுக்கும் போதும், அவர்களுக்கு அந்த உணவின் நன்மைகளையும் தீமைகளையும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் அதனை உணர்ந்து சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவர். உதாரணமாக, பழங்கள் மற்றும் சிப்ஸ் வைக்கும் போது, இரண்டைப் பற்றியும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் சிப்ஸை தவிர்த்து, பழங்களை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடுவர்.

குழந்தைகளுடன் சாப்பிட வேண்டும் 
பெற்றோர்கள் பழக்கம் தான் குழந்தைகளுக்கு வரும். எனவே குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டால், அவர்களும் மறுக்காமல் சாப்பிடுவர்.

உணவுகள் கொடுப்பதை பொறுத்தது 
எப்போது உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போதும், அவர்களுக்கு ஆரோக்கியமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளது மனம் மற்றதை நாடாமல், இருப்பதை விரும்பி சாப்பிடச் செய்யும்.

No comments:

Post a Comment