Wednesday, March 20, 2013

இளமையில் கல்

'இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள். ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களுக்கு மட்டும் வேலை செய்துவிட்டு, மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கே திரும்பிவிடுவார்கள்.

பிழைப்புக்காக ஊர்விட்டு ஊர் வரும் இவர்கள் தங்களின் குழந்தைகளின் கல்விகுறித்துக் கவலைப்படுவதே இல்லை. அப்படி வந்திருப்பவர்களின் குழந்தைகளின் கல்வி பாதியிலேயே நின்றுவிடக் கூடாது என்பதற்காக சேம்பர் சேம்பராகச் சென்று, அவர்களின் குழந்தைகளை இங்கேயே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவ ராவ்.

மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள சேம்பர்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து, பாதியில் நிறுத்திய வகுப்பில் இருந்தே மீண்டும் இங்கே படிப்பைத் தொடர்வதற்கு வழிசெய்திருக்கிறார். அவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், மதிய உணவு என அனைத்தையும் வழங்க ஏற்பாடுசெய்திருக்கிறார். இவருடைய முயற்சியால் இதுவரை 3,776 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர்.

நம் வாழ்த்துக்களை இந்த கலெக்டருக்கு பகிர்வோம்...!

No comments:

Post a Comment