Thursday, December 25, 2014

வை பை கண்காணிப்பு மென்பொருள்...



வை பை கண்காணிப்பு மென்பொருள்...
(உங்கள் internet WIFI connectionனை யாராவது உங்களுக்கு தெரியாம பயன்படுத்துகிறார்களா....???)
இன்றைய சூழலில் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும் கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்வதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர்.
அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல அருகில் உள்ளவர்கள் நுழைந்து உங்கள் கணக்கில் பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள்.
இதனை சமாளிக்க உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address), எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர் என்றும் தெரிந்து கொள்ள முடியும்
டவுண்லோடு செய்ய..
http://www.nirsoft.net/utils/wnetwatcher.zip

2011 - ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன்.





2011 - ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன்.
சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை
நான் நிச்சியமாக எழுதவில்லை.
உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். "எந்திரன்" னிலும் உங்கள் நடிப்பு அருமை.
உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. அரசியலுக்கு நீங்கள் வருவதும், வராமல் போவதும், வருவதாக கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு.
நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான் உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.
ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள்.
ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.
திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். "சூப்பர் ஸ்டார்" என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை.
என்னுடைய கேள்வி இதுதான்....நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன?
நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில் வாசல்முன்பு கூட்டம்போட்டு, 'பகுத்தறிவாளர்கள்' என்ற பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க கூடாதா?
ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல, நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே ...சாட்சாத் நீங்கள்தான்.
"அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா" என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான்.
நீங்களே கதை,வசனம் எழுதிய "பாபா" படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள்சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை
சொன்னது நீங்கள்தான்.
கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார்.
நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை" தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை எற்றுவருகிறார். அரசியல் நோக்கமாக இருந்தாலும் நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார்.
ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன?
"நான் ஆன்மிகவாதி", "தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்", "இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்" என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த 'இமயமலை' அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா.
"இமயமலை"யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும் தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்?
இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும். அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம்.
ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும் சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன?
நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன்.
நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை...கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய்.
1991 - இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் "ஆசிரமம்" என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன்.
அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று.
சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள்.இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்...உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று.
TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன்.
"அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்" என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி.
சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை "ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்" என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா?
தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் "பிம்பங்கள்" எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார்.
முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்துகொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன?
சமிபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது.
அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன்.
நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா?
சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே..
அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை?
"என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா". - படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா?
சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்?
எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும், லாபமும்தான் பிரதானமா?
"பாட்ஷா" படத்தில் சொன்னதுபோல, உங்கள் இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள்.
உங்கள் பதில் "ஆம்" என்றால்,
அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள்.
ஆனால், எனது இரண்டு கோரிக்கைகளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன்.
எதோ "எந்திரன்" விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது. கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் "ராணா" படத்தில், டைட்டில் பாடலில் தமிழ் மக்களுக்கு நீங்கள் என்னவேண்டுமானாலும் தருவீர்கள் போன்ற வரிகள் இருக்கும்.
இனி,இதுபோன்ற ,வழக்கமாக உங்கள் படங்களின் "டைட்டில்" பாடல்களில் வரும் 'வாழ வச்சது தமிழ்ப்பால்', 'அண்ணன் வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா' போன்ற அர்த்தமற்ற, அனாவசிய வார்த்தைகளை தவிருங்கள். வசனங்களிலும் அவ்வாறே.
மேடைகளில், வார்த்தைக்கு வார்த்தை "என்னை வாழ வைத்த தமிழ் மக்களே" என்று முழங்குவதை நிறுத்துங்கள். வேண்டுமானால்,
"என்னை வாழ வைத்த ரசிக பெருமக்களே" என்று சொல்லிக்கொள்ளுங்கள்.
தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த 'பிசினஸ்''க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார்.
வழக்கம்போல,"எந்திரன்" சாதனைகளை "ராணா"வில் முறியடிக்க காத்திருக்கிறோம்.
இப்படிக்கு,
தமிழ்நாட்டு பொதுமக்கள் சார்பாக,
உங்கள் ரசிகர்களில் ஒருவன்.

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?


உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
...
Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச் 
சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,
...
நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,
...
உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,
...
1.)Google Account
2.)Wipe data(format,factory reset)
...
<<<<<<<>>>>>>

(பலர் இதற்கு internet connection தேவை என்று
நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)

* |STEP 1| *

உங்கள் pattern,password,pinஐ மூன்று முறை தவறாக போடுங்கள்...

* |STEP 2| *

கீழே "Forgot Pattern?" என்று வரும்,,அதை Select செய்யுங்கள் ,,
பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து
Sign in கொடுங்கள் ...

* |STEP 3| *

இப்போது உங்கள் புது pattern,password,pinஐ Set செய்து
கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !!
...
<<<<<<<<>>>>>>

1.)உங்கள் போனை switch off செய்யுங்கள

2.)off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் ...
((இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்))

3.)recovery modeல் touch screen வேலை செய்யாது,,volume button move செய்வதற்கு ,home button அல்லது power button select செய்வதற்கு ...

4.)recovery modeல் "wipe data" optionஐ select செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்...

5.)இப்போது "reboot system now" optionஐ select செய்யுங்கள்....
******************
அவ்வளவுதான் !!!! எளிமையாக இருந்ததா?
....
இதுபோல் தகவலுக்கு இணைந்திருங்கள் ....
...
இதை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

அதிர்ச்சி தகவல்...!!!! கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

அதிர்ச்சி தகவல்...!!!!
வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் ஒரு கொசுவர்த்தி சுருளில் (Mosquito coils) இருந்து வெளியாகும் புகையை மூடிய அறைக்குள் இருந்து சுவாசிப்பது, 100 சிகரெட்டுகளைப் பிடிப்பதற்கு சமம்.
கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையானது நுரையீரல்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. புகையில்லாத கொசுவர்த்தி சுருள்களிலும் அதிக அளவில் கார்பன் மோனாக்ஸ்டு கலக்கப்படுகிறது.
கொசுவர்த்தி சுருளை பயன்படுத்தும் போது அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பது அபாயத்தை அதிகரிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.



Monday, December 22, 2014

MicroSD card பற்றி தெரிந்து கொள்வோம்

MicroSD card பற்றி தெரிந்து கொள்வோம்
=====================================

மைக்ரோ எஸ்டி ,மெமரிகார்டு வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்!

“மெமரி கார்ட்” இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயனர்களே இருக்க முடியாது. வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,பாடல்களை சேமிக்க, படங்களை சேமிக்க, பேசியதை சேமித்து வைக்க… இப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது மெமரிகார்ட்.

முதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட மெமரிகார்ட், இப்பொழுது அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் பயனபடுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக டேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன், ipad, ipod, Digital Camera போன்ற கையடக்கச் சாதனங்களைச் சொல்லாம்.

காலத்திற்கு ஏற்ப, பயன்படுத்துவதற்கு ஏற்ப மெமரிகார்ட்களிலும் பல்வேறு வகையான கொள்ளவு, திறன், அளவு ஆகிய வகைகளில் நமக்கு கிடைக்கிறது.

காலத்திற்கேற்ப இதனுடைய தன்மையிலும், வகைகளிலும் மாறுபட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் microSD card என்று சொல்லப்படும் இந்த மெமரி கார்ட்களை உலகளில் பார்க்கும்போது 400க்கும் அதிகமான நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன.

மெமரி கார்டின் வகைகள்:

எட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.

1. SDSC (Standard Capacity)

2. SDXC (The extended Capacity)

3. SDHC (The High Capacity)

4. SDIO

SD CARD என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதிகள் எதுவும் இல்லை.

முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் முறைகளே இதில் பயன்படுத்தபட்டுள்ளன. SDHC கார்ட்களைவிட SD, SDXC வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி திறன் கொண்டது.
மெமரி கார்டின் அளவுகள்:

பொதுவா SD cards மூன்று வகையான அளவுகளில் கிடைக்கின்றன. இவைகள் ஸ்டான்டர்ட் ஆகும் .

அவை.

1. Standared SD (இதன் அளவு 32×24 மில்லிமீட்டர்)

2. Mini SD (இதன் அளவு 20×21.5 மில்லிமீட்டர்)

3. MicroSD (இதன் அளவு 15×11 மில்லிமீட்டர்)

எஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் திறன் வளர்ச்சிகளை வேறுபடுத்திக்காட்ட SD, SDHC மற்றும் SDXC என குறிப்பிடுகின்றனர். எஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து, எடுக்கப்படும் வீடியோவின் தரமும் அமையும்.

காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் அதிகமாக கையகப்படுத்துவதால்தான். இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு MB தகவல்கள் எழுதப்படும். அதே வேகத்தில் அதை படிக்கவும் முடியும்.

இந்த வேகத்தில் தகவல்கள் எழுத முடிவதால் தெளிவான படங்கள், வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை நாம் பெற முடியும். அனைத்து SD கார்ட்களிலும் CPRM என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது.

CPRM என்பதின் விரிவு Content Protection for Recordable Media என்பதாகும்.

SD கார்டின் சிறப்பு;

இதன் மிகச்சிறந்த பயன்பாடே, பத்தாயிரத்துக்கும் அதிகமான முறை தகவல்களை அழித்து, மீண்டும் எழுத முடியும் என்பதுதான்.

ஒவ்வொரு முறையில் தேவையில்லாத அல்லது பழைய டேட்டாவினை அழித்து புதிய டேட்டாவினை பதிந்துகொள்ள முடியும்.

இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான பிராண்டட் SD கார்ட்களில் மட்டுமே செய்ய முடியும்.

பிராண்டட் SDcards ஒருசில…

Sasmung microSD card

Sandisk Ultra microSD card

Transcend microSD card

Sandisk mobile ultra

Toshiba microSD card

Sony microSD card

இதுபோல 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் microSD Card கள் உள்ளன.

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது.

இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .

சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?

(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம் மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்

மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 – 6MB per second

Class 8 – 8MB per second

Class 10 – 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது

இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது.

Sunday, December 21, 2014

எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்; ஆண்களின் மச்ச பலன்கள்

எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்; ஆண்களின் மச்ச பலன்கள்

News


இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும் கூறுவார்கள்.
ஆண்களும் மச்சங்களும்:
வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்கள்.
வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள் இருக்கும்.
நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
வலது கண்ணுக்குள், வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர், ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
இரு கண்களில், ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள்பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும். இருப்பினும், அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும், ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும், அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோக முள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.
வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.
தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்
முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்

வந்துவிட்டது சூரிய உழவு இயந்திரம்: மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

வந்துவிட்டது சூரிய உழவு இயந்திரம்: மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!



விழுப்புரம்தொழில்நுட்பத்தை விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் சூரிய சக்தி உழவு இயந்திரத்தை கண்டிபிடித்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
 
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அகுரே உத்தில் உள்ள மைலம் பொறியியல் கல்லூரி மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் நான்காம் ஆண்டு பயிலும் செல்வன் ப்ரேம்நாத், வெற்றிவேல், அருண், சிவராமன் ஆகிய நான்கு மாணவர்கள் ஒன்று சேர்ந்து துணை பேராசிரியர் ராஜபார்த்திபன் உதவியோடு சூரிய மின்சக்தியால் ஏர் உழவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த இயந்திரமானது முழுவதுமாக சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்குகிறது. இதில் எரிபொருள் ஏதும் பயன்படுத்தாதலால் சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது. மேலும் இது ரிமோட்டின் மூலம் கட்டுப்படுத்தும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு விவசாயின் கஷ்டம் குறைக்கப்படுகிறது. நாடு எவ்வளவுதான் தொழில்நுட்பத்தில் முன்னேறினாலும் எந்த தொழில் நுட்பமும் விவசாயத்தை முழுமையாக சென்றடையவில்லை. இதனை யோசித்த இந்த நான்கு மாணவர்கள், தங்களால் இயன்ற அளவு தொழில்நுட்பத்தை விவசாயிக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தும் நோக்கில் இறங்கியுள்ளனர்.

இன்று வரை நாம் டிராக்டர் கொண்டுதான் உழவு செய்கிறோம். சுமார் நூறு ஆண்டுகளாக இந்த ஒரு தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் டிராக்டர் எடை மிகவும் அதிகம் என்பதால் அதனை நிலத்தில் பயன்படுத்துவதால் நிலத்தின் தன்மை பாதிக்கப்படுகிறது. எனவே இந்த மாணவர்கள் வடிவமைத்த இயந்திரமானது டிராக்டரை விட எடை குறைவானது. இதனால் நிலத்தின் தன்மை பாதுகாக்கப்படுகின்றது. இந்த இயந்திரம் முழுவதுமாக சூரிய மின்சக்தியால் இயங்குகிறது.

மேலும் இது ரிமோட்டின் மூலமாக சுலபமாக இயக்கப்படுகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இயக்கி எவ்வளவு நிலத்தை வேண்டுமானாலும் உழவு செய்யலாம். ஒரு விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செய்வதற்கு டிராக்டர் வாடகை, டீசல் மற்றும் ஆள் கூலி சேர்த்து சராசரியாக 3000 ரூபாய் செலவு ஆகிறது. தற்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் நிலையானது அல்ல. சில வருடங்களுக்கு பிறகு எரிபொருள் தட்டுப்பாடு பெருமளவு காணப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் விவசாயத்திற்கு முழுவதுமாக சூரிய சக்தியை பயன்படுத்தலாம் என்பது இந்த மாணவர்களின் கருத்து. இதனால் சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதுகாக்கப்படும் என்பது அவர்களின் கருத்து. இந்த சூரியசக்தியால் இயங்கும் இந்த இயந்திரத்தை வடிவமைக்க கிட்டதட்ட 4 முதல் 5 லட்சம் வரை செலவாகும். இந்த இயந்திரத்தில் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. அது சூரிய சக்தியை சேகரித்து நிலத்தை உழவுவதற்கு பயன்படுகிறது. தொடர்ந்து 4 மணிநேரம் வரை உழலாம். ஒரு சாதாரண விவசாயி டிராக்டர் மூலம் உழுவதால் ஆகும் செலவை விட இது குறைவான செலவாகும். இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதால் டீசல் செலவு இதர எரிபொருள் செலவுகள் குறைக்கப்படுகிறது.

இதற்காக இந்த மாணவர்கள் பல்வேறு விவசாயிகளை நேரில் சந்தித்து பேசி அவர்களுடைய கஷ்டங்களை கேட்ட பின்னர், விவசாயத்தை முழுவதுமாக மேம்படுத்துவதற்கான ஒரு ஆரம்பமாக இவர்கள் இந்த உழவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். மேலும் விழுப்புரத்தில் உள்ள தோட்டக்கலை இயக்குநரிடம் கலந்தாய்வு செய்த பின் இன்றுவரை இதுபோன்ற கருவி கண்டுபிடிக்கவில்லை என்றும், மேலும் இந்த கருவி எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயன்படவேண்டும் என்றும் கூறினார்.

இந்த இயந்திரத்தின் மூலம் படித்த இளைஞர்களும் விவசாயம் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை இளம் தலைமுறையினரிடம் உருவாக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.