Saturday, October 15, 2016

சிவகார்த்திகேயன் அழுததற்கு காரணம் என்ன?: சொல்கிறார் வினியோகஸ்தர் சுப்பிரமணியம்

சென்னை: ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுதது குறித்து பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நடந்த ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி அழுதுவிட்டார். எங்களை நிம்மதியாக வேலை செய்யவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சிவகார்த்திகேயன் மேடையில் அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ரெமோ வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில்,

ரெமோ 
ரஜினிகாந்தின் சிவாஜி படத்திற்கு பிறகு நான் வாங்கி வெளியிட்டுள்ள படம் ரெமோ. வினியோகஸ்தர்கள் தான் தயாரிப்பாளர்களை தேடிச் சென்று படங்களை வெளியிடுவோம். ஆனால் ரெமோ தயாரிப்பாளர் ராஜாவோ என்னை தேடி வந்து படத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.

ராஜா 
நான் படங்களை வாங்கி வெளியிடும் வேலையை நிறுத்திவிட்டேன் என்று கூறியும் ராஜா கேட்கவில்லை. அனுபவம் உள்ள நீங்கள் தான் ரெமோவை வாங்க வேண்டும் என்று கூறி விற்றுவிட்டார்.
லாபம் 
ரெமோ படத்தை தமிழகம் முழுவதும் ரூ.30 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளனர். அதில் வினியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி லாபம் கிடைப்பது உறுதி.

சிவகார்த்திகேயன் 
ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுதது குறித்து அறிந்து அவருக்கு போன் செய்து பேசினேன். 'வேந்தர் பிலிம்ஸ்' மதனும், 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதனும் சிவா புதுப்படத்தில் நடிக்க முன்பணம் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

மன உளைச்சல் 
எந்த மதனிடம் இருந்தும் முன்பணம் வாங்கவில்லை என்கிறார் சிவா. இரு தரப்பையும் நேரில் அழைத்து பேசினால் தான் உண்மை நிலவரம் தெரியும். இந்த மன உளைச்சலில் இருந்ததால் தான் சிவா மேடையில் அழுதுள்ளார்.

Tuesday, April 28, 2015

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.

 
வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.
எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!
வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!
நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!

Friday, January 2, 2015

MakkhiChoose பயன்படுத்தி பாருங்களேன், ரம்யா இதை ஏன் "அருமையான நேரம் மற்றும் பணம் சேமிக்கும் கருவி" என்கிறார் என்று உணர்வீர்கள்

ரம்யா இன்று மிக மகிழ்ச்சியாக உள்ளார். Samsung LED TV வாங்கும்பொழுது, MakkhiChoose பயன்படுத்தி, அவர் 44649 ரூபாய் சேமித்துள்ளார்!
நீங்கள் எந்த இணையதளத்தில் (Flipkart, Amazon, Snapdeal, Myntra, Jabong) வாங்கிக்கொண்டு இருந்தாலும் சரி, அதே பொருள் வேறு தளத்தில் மலிவாக கிடைக்குமா என்று உங்களுக்கு சொல்லும். இன்னும் அருமையான விஷயம் என்ன தெரியுமா! ஒரு பொருளின் விலை கணிசமாக வீழ்ச்சி அடையும்பொழுது, மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு தெரிவிக்கும்.
MakkhiChoose பயன்படுத்தி பாருங்களேன், ரம்யா இதை ஏன் "அருமையான நேரம் மற்றும் பணம் சேமிக்கும் கருவி" என்கிறார் என்று உணர்வீர்கள்



ரூபி ஆன் ரயில்ஸில் ப்ரோகிராம் எழுதுவதைப் போலவே மகிழ்ச்சியான சவால்கள்.



மழையோடு புத்தாண்டு தொடங்கியது. தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் எந்த புத்தகத்தை எந்த சில்லுன்டி எரித்தார் என்று கவணிக்கவில்லை. நேற்று ஒசூரின் குளிர் வீடு திரும்பியதை உணர்த்தியது.
நான் வளர்த்த கீரைகள் அறுவடைக்கு தயாராக இருக்கின்றன. இயற்கை விவசாயமெல்லாம் வேலைக்காதுங்க, அது மேல்தட்டு மக்களுக்கு மட்டும் தான், என்று ஒசூரில் ஒரு பள்ளியின் காரியதரிசி தொடர்ந்து என்னை எரிச்சல் படுத்தியதால், "நெலத்த குடுய்யா முதல்ல" என்று வீம்புக்கு இறங்கி விவசாயம் செய்தேன். நாற்பது சென்ட் நிலத்தில், கீரை விதைகளுக்கான செலவு ஆயிரம் ருபாய். தினமும் நூறு கட்டு அறுப்பதாக திட்டம். சென்ற வருடம் கொடுத்த இயற்கை உரங்கள் மண்ணை வளப்படுத்தி இருந்ததால், உரங்கள் எதுவும் இடவில்லை. பள்ளிக்கூடத்திலேயே அத்தனையும் விற்க முடியும். பெரிய செலவு இல்லாமல் தொடர்ந்து வருமானம் வரும் என்று விளக்கிச் சொல்லி, வர்ற காச நீங்களே வச்சு கோயில் கட்டுங்கப்பா! என்று சொல்லி கொஞ்சம் காய்கறிகளை உற்பத்தி செய்து வேலையாட்களுக்கு பயிற்சி அளித்து விலகிக்கொண்டேன்.
என் கவனம் முழுவதும் aquaponics பரிசோதனையில் நிற்கிறது. விளைச்சலும் கிட்டத்தட்ட எதிர்பாத்த அளவுக்கு உள்ளது. பூச்சி புழு இல்லாத ஆர்கானிக் காலிஃப்ளவர், நாட்டு பாகற்காய், பாலக்கீரை, தக்காளி செடிகளை காண்க. இனி இதன் விரிவாக்கத்தை கல்லுப்பட்டியில் பாமயன் பண்ணையில் நிகழ்த்த திட்டம். சில சவால்கள் இருக்கின்றன. தினமும் 10 கிலோ மண்புழுக்கள் மற்றும் ஐந்து கிலோ கருஞ்சிப்பாய் ஈக்களை உற்பத்தி செய்து மீனுக்கு உணவாக உற்பத்தி செய்வது. மேலும் பொருளாதார முன்மாதிரிகளை உருவாக்குவது என்று பல சவால்கள். ஆனாலும் ரூபி ஆன் ரயில்ஸில் ப்ரோகிராம் எழுதுவதைப் போலவே மகிழ்ச்சியான சவால்கள்.

நமது மூளையைப் போல் ஓர் மாபெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை

நமது மூளையைப் போல் ஓர் மாபெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை


 நமது மூளையைப் போல் ஓர் மாபெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை என்பதைப் பல அறிவு டோஸ்களைப் படித்து அறிந்து இருப்பீர்கள். இன்றைய அறிவு டோஸில் கூட நமது மூளையைப் பற்றிய வேறு மிகவும் வியப்பூட்டும் தகவல்களை அறியத் தருகிறேன்.
1. நீங்கள் சோர்வாக இருக்கும் பொழுது உங்கள் மூளை புதிய கோணங்களில் சிந்தித்தலை அதிகமாக நிகழ்த்துகிறது. சோர்வாக இருந்தால், கவனம் அதிகமாகச் சிதறும். உங்களது நோக்கம் ஒரே கோணத்தில் நிலைத்திருக்காது. இந்த நேரம் நீங்கள் புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப் புதிய செயல்முறைகளை உருவாக்க முடியும்.
2. மன அழுத்தம் மூளையின் அளவை சுருக்கி சிறிதாக்கி விடும்.
3. மூளை பல பணிகளை ஒரே நேரம் செய்வது சாத்தியமற்றது. பல விதமான பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் பொழுது, தவறு வீதம் 50க்கு உயரும். மேலும் அவ்வேலைகளை செய்து முடிக்க இரண்டு மடங்கு அதிகமான நேரம் எடுக்கும்.
4. குட்டித்தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறனை நாளுக்கு நாள் மேம்படுத்த உதவும். நாம் தூங்கும் போது மூளையின் வலது பக்கம் "ஒழுங்குப்படுத்தல்" கடமைகளை கையாளுகிறது. அதாவது, இடது பக்க மூளை ஓய்வு எடுக்கும் பொழுது, வலது மூளை, அன்றைய தினத்தில் நடந்த செய்திகளை நீண்ட கால ஞாபகச் சேமிப்பில் மாற்றி, அந்த நினைவுகளை உறுதிப் படுத்தும்.
5. தியானம் மூளையை அமைதிப் படுத்தும். மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும்.
6. நாம் தவறுகள் செய்யும் மனிதர்களையே அதிகம் விரும்புகிறோம். இந்த முடிவை ஆராய, உளவியலாளர் எலியட் ஆரோன்சன் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். அதில் ஒரு பதிவு செய்த விநாடி வினா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் தவறுதலாகத் தனது தேநீர் கோப்பையை உடைத்துவிட்டார். மக்களிடம் எந்தப் போட்டியாளருக்கு உங்கள் ஆதரவு எனக் கேட்ட பொழுது, கோப்பையை உடைத்தவரையே மக்கள் அதிகம் விரும்புவதாகத் தெருவித்தனர்.
நமது மூளை பற்றிய எவ்வளவோ விடயங்கள் இன்னும் ஆராய உள்ளது, நண்பர்களே. ஆனால் நமது மூளை ஓர் அதிசயம் என்பதில் ஒரு நாளுமே சந்தேகம் இருக்கப் போவதில்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.

ஐ.டி. நிறுவனங்களின் அக்கிரமங்கள்: இப்படி பண்றீங்களேம்மா!

ஐ.டி. நிறுவனங்களின் அக்கிரமங்கள்: இப்படி பண்றீங்களேம்மா!


எல்லா கதைகளுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். ஐ.டி நிறுவனங்களைப் பற்றி நான் முதலில் புரிந்துகொள்ளத் தொடங்கியது கல்லூரியின் நான்காம் வருடத்தில்தான்.
கேம்பஸ் இண்டர்வியூவுக்கு பல கனவுகளுடன் ஐ.டி நிறுவனங்களின் செயல்பாடு எப்படி? எந்தெந்த டெக்னாலஜியில் நம்மை வளர்த்துக் கொண்டால் உதவிகரமாக இருக்கும் என்றெல்லாம் நாங்கள் தேடித் தேடி படித்து வந்தோம். சரி, இப்போது இதுதான் நமது பாதை என்று ஆகிவிட்டது; இனி இந்த பயணத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் முன்பே சிலர் சிந்திக்கத் தொடங்கினர்.
கல்லூரி காலம் முடியும் முன்னரே நிறைய பேருக்கு நிறுவனத்தில் சேர்வதற்கான அழைப்புக் கடிதம் (Call Letter) வந்தது.
ஜூலை மாதத்தின் கடைசியில் வரிசை வரிசையாக நண்பர்கள் சேரத் தொடங்கினர். ஆகஸ்ட் மாதத்தில் எனது பயணமும் தொடங்கியது, ஆனால் கால் லெட்டருக்குக் காத்திருந்தபடியே சில நண்பர்கள் தங்கள் நாட்களை கடத்தினர்.
முதலில் 'நீங்க என்னடா அதுக்குள்ள வேலைக்கு சேர்ந்துடீங்க கொஞ்ச வாழ்க்கையையும் வாழுங்க' என்றெல்லாம் கேலி செய்து வந்தனர். நாட்கள் நகர நகர எனது ட்ரெய்னிங் முடிந்தது, ப்ராஜெக்ட்டிற்காக நான் காத்திருந்த நாட்களில் எனது நண்பன் அவனது கால் லெட்டருக்காகக் காத்திருந்தான்.
பெஞ்ச் படலம்
டிசம்பர் மாதம் ஐ.டி. நிறுவனங்களின் இலையுதிர் காலம் வெளிநாட்டில் எங்கும் கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டம் என்பதால் ப்ராஜெக்ட் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இருந்தாலும் தினந்தோறும் அலுவலகம் வந்தபடி வாய்ப்புகள் தேடிக் காத்திருந்தேன் நண்பர்களுடன்.
இந்தக் காத்திருக்கும் படலத்தின் பெயர் 'பென்ச்' (Bench). ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் ப்ராஜெக்ட்டும் கிடைத்தது. அன்றும் நண்பன் தனது ப்ராஜெக்டிற்காக காத்திருந்தான். கல்லூரியில் பயோ டெக்னாலஜி படித்த அவன் கேம்பஸ் இன்டர்வியூ'வில் மூன்று நிறுவனங்கள் நடத்திய இன்டர்வியூவையும் அசத்தி ஒரே நாளில் மூன்று வேலைகளை வாங்கினான். மூன்றில் ஒன்று எடுக்க வேண்டிய தருணம் அன்று.
ஐ.டி. நிறுவனத்தில் வேலைப் பார்க்கச் சென்றாலும் தான் படித்த படிப்பு வீண்போகக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். மற்ற இரண்டு நிறுவனங்களை காட்டிலும் 'அச்சில்' நிறுவனத்தில் சம்பளம் சற்று குறைவுதான் என்றாலும் தான் படித்த படிப்பை இணைக்கும் வகையில் ஐ.டி.யில் லைஃப் சயின்ஸ் பிரிவில் வேலைப் பார்க்கிற வாய்ப்பு என்கிற ஒரே காரணத்திற்காக, அச்சில் நிறுவனத்தில் வேலை செய்வதாக உறுதி கொடுத்தான். அவனுடன் சேர்த்து 2012 ஆம் ஆண்டு அச்சில் நிறுவனத்தில் வேலை கிடைத்த பலருக்கும் அந்த வருடத்தில் 'கால் லெட்டர்' வரவில்லை.
காலாவதியான கால் லெட்டர்கள்
நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமானது. அப்போது வரை நிறுவனத்திலிருந்து அவனுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் இருந்தது. நாட்கள் காத்திருப்பை அதிகரித்துக் கொண்டே வந்தன. இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாதோ? என்கிற வருத்தம், நண்பர்கள் எல்லாம் வேலைக்கு போகும்போது என்னால் போக முடியவில்லையே என்ற விரக்தி, இன்று வந்திடுமோ நாளை வந்திடுமோ இப்படி ஐயத்திலே ஒவ்வொரு நாளும் காத்திருப்பில் கடந்தது.
அந்த வருடத்தில் கால் லெட்டர் கிடைத்த சிலருக்கும் கால் லெட்டர் வந்துவிட்டதால் உங்கள் அனைவருக்கும் வேலை நிச்சயம் என்று கிடையாது. 'ஒரு தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் மெரிட் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். மற்றவர்களைப்பற்றி நாங்கள் பின்பு கூறுவோம்' என்று நிறுவனம் உரைத்த செய்தி அந்த வருடத்தில் சேர்ந்த பல ஊழியர்களை பாதித்தது.
இனிமேலும் காத்திருந்து என்ன நடக்கப் போகிறது? இந்த ஐ.டி'லாம் நமக்குப் பகல்கனவு தான். இனியும் காத்திருப்பதில் பயன் ஏதும் இல்லை என்கிற சிந்தையில் பேங்க் தேர்வு எழுதி வெற்றி பெற்று கிளெர்க்காக வேலைக்குச் சேர்ந்தான்.
சவுக்கடி மின்னஞ்சல்
நான்கு வருடம் பொறியியலை காதலுடன் படித்தவனுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைப் பார்க்கவில்லையே என்கிற வருத்தம். 2012 ஆம் ஆண்டு வேலைக்கு சேர வேண்டியவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் கழித்து நிறுவனத்திடம் அழைப்புக் கடிதம் வந்தது:
'வாழ்த்துக்கள் நீங்கள் அடுத்த மாதம் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த வேலையில் சேர விருப்பம் இல்லை என்றால், உடனடியாக இரண்டு நாட்களுக்குள் சொல்லி விடவும்' என்று அக்கடித்தில் எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்து அமைதியாக தான் எடுத்த முடிவு தான் சரி என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். இதே கடித்ததை பெற்ற என் தோழி ஒருத்தி இதைக் கண்டு வெகுண்டெழுந்தாள் 'ஒன்றரை வருடங்கள் ஆகிறது, எனக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததே மறந்து போச்சு. இன்று உங்கள் கடிதத்தை கண்டதும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் உங்களுக்காக வருடங்களாக காத்திருக்கிறோம்... உங்களால் உங்களது மெத்தனத்திற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்க முடியாதா? எத்தனை திறமைசாலிகளின் கனவை நீங்கள் உடைத்துள்ளீர்கள் என்று தெரியுமா? எவ்வளவு ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அது என்ன இரண்டு நாட்களுக்குள் பதிலை சொல்லு என்று கெடு விதிக்கின்றீர்கள்? எங்களது மின்னஞ்சல்களுக்கு பதில் சொன்னீர்களா? அழைப்புகளுக்கு பதில் சொன்னீர்களா? இருந்தாலும் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன் 'பங்குச் சந்தையில் உங்கள் நிறுவனத்தின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். மீண்டும் உங்களது பங்குகள் இறங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது; அப்படி கீழிறங்கும் பட்சத்தில் என்னைப் போன்றவர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கு நீங்கள் கொஞ்சமும் தயங்கமாட்டீர்கள் என்று நான் நன்கு அறிவேன். மனிதர்களை மதிக்கத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் நான் இப்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனிதாபிமானமற்ற உங்கள் நிறுவனத்தின் வேலை எனக்கு நிச்சயம் வேண்டாம். இதை நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கொண்டு செல்லுங்கள், எனக்குக் கவலையில்லை' என்று சவுக்கடி வரிகளில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினாள்.
தமிழகத்தில் அமைந்துள்ள சேவை சார்ந்த ஐ.டி நிறுவனங்கள் பலவும் மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்வதில்லை.
நாங்க இருக்கோம்
'ஆமாண்ணா.. இங்க வாங்க.. அவர் சொன்னத நாம எப்படி மூணு மாசத்துக்குள் முடிக்கறது? இதுல இருக்குற வேலையை பார்த்தா டெவெலப்மென்ட், டெஸ்டிங் எல்லாம் சேர்த்து குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகுமே!' என்று நண்பன் ஒருவரிடம் கேட்டான். அவர் 'இல்லைடா, அது மூன்று மாசம் இல்லை இன்னும் இரண்டு மாசத்துக்குள் முடிக்கணும். ஆமா, என்னை ஏன் நீங்க அண்ணான்னு கூப்படறீங்க? நானும் உங்க பேட்ச் தான், இந்த ப்ராஜெக்டல நாங்க மூணு மாசமா வேலை செய்யறோம். அப்பவே இத முடிக்க ஒரு வருஷம் ஆகும்ன்னு ஒருத்தர் சொன்னாரு. அது இப்போ தான் இவங்களுக்கு புரிஞ்சிருக்கு. இன்னும் இரண்டு மாசத்துல முடிச்சாகணும்னு புடுங்கறாங்க. நான் மூணு வாரமா இங்கயே இரண்டு மணி வரைக்கும் வேலை பார்க்கிறேன். சில சமயத்துல 48 மணி நேரம் தொடர்ந்து வேலைப் பார்க்கிற மாதிரி ஆகுது.. சன்டேவும் எங்களுக்கு விடுமுறை கிடையாது' என்றார்.
'இப்போ தான் இந்த வேலை முடிக்க ஆள் தேவைன்னு உங்களலாம் சேர்த்திருக்காங்க, காசாகும்.. ப்ராஜெக்ட் பட்ஜெட்ன்னு சொல்லி சீனியர்களையும் சேர்க்கல. இந்த மேனேஜர்க்கும் டெக்னிகலா எதுவும் தெரியல. எதாவது வடை சுட்டு முடித்துக் கொடுக்கிறோம்ன்னு வாக்கு கொடுத்திடராறு. அதுக்கு ஏற்ற மாதிரி ஆளுங்களையும் எடுக்கணும்.'
'சரி எதுக்கு பாஸ், இப்படிலாம் கஷ்டப்படறீங்க? உங்க பிரச்சினைய HR - Human Resource (மனிதவளம்) பார்வைக்கு கொண்டு போக வேண்டியதுதானே?' என்றேன்.
'பாஸ் அதுலாம் உங்களுக்கு தான் நான் பச்சை டாக் (Green Tag) போட்டிருக்கேன் உங்கள மாதிரி ப்ளூ டாக் (Blue Tag) போடலை. நாங்கலாம் டெம்ப்ரவரி வொர்க்கர். இங்க இரண்டு வருஷம் இப்படி வேலை பார்த்தாதான் இந்த மேனேஜர் ரெகமெண்ட் செய்து எங்களை பெர்மனேன்ட் ஆக்குவாறு!' என்று பதில் வந்தது.
ஏன் பாஸ் நீங்க இன்ஜினியரிங் படிக்கலியா? என்றேன். 'இல்லை பாஸ் நான் பீ.ஈ. கம்ப்யூட்டர் சைன்ஸ் தான். நான் ரூரல்ல (Rural) படிச்சேன் நான் படிச்ச கல்லூரியில கேம்பஸ் ப்ளேஸ்மென்ட் கிடையாது. வேலை தேடி அலைஞ்சி பாருங்க அப்போ உங்களுக்கு தெரியும் ஒரு வேலை வாங்கறர்து எப்படின்னு! நாங்கலாம் உங்களுடைய இப்போதைய லெவல் தொடுவதற்கு இரண்டு வருஷமாவது கடினமாக உழைக்கணும். அப்போ கூட இவங்க என்ன செய்வாங்கன்னு தெரியாது.
பரீட்சை எனும் வேலி
என் உறவினர் வேலை பார்க்கும் மற்றொரு பிரபலமான ஐ.டி நிறுவனத்தில் பி.எஸ்.சி படித்தவர்களை பொறியியளார்கள் பணியில் அமர்த்தி பணி நேரத்திற்கு பிறகு ட்ரெய்னிங் அளிக்கின்றனர். விடுமுறை நாட்களில் அவர்கள் புகழ்பெற்ற கல்லூரியில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் எடுத்து வார முடிவுகளில் வகுப்புகளில் பங்குபெற்று கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் முதுகலை படித்து முடிக்க வேண்டும். அப்படி படித்து முடித்தால் மட்டுமே அவர்களால் இருபதாயிரத்தை பார்க்க முடியும்.
பாட அமைப்பு அவர்களை குறைந்த பட்சம் மூன்று வருடமாவது படிக்க வைக்கும்படி அமைந்திருக்கும். மூன்றாம் வருடத்தின் இறுதியில் சுமார் அறுபது சதவீத மக்கள் தான் தேர்ச்சி பெறுவார்கள். மீதமுள்ளவார்கள் மீண்டும் படிக்க வேண்டும். அப்போது தான் நிரந்தரமாக்கப்படுவார்கள்.
இது ஒருவகையான நூதனமான திருட்டு இது. 'ஒரு மனித வளத்திற்கு குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வெளிநாட்டு வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் வாங்குகிறார்கள். அதுவும் பொறியியல் படித்து கேம்பஸ் இன்டர்வியுவில் வேலைக்கு வரும் ஊழியனுக்கு குறைந்தது இருபதாயிரம் அளிக்கப்பட வேண்டும் என்பதால் அவனுக்கு பதிலாக ஒரு பி.எஸ்.சி படித்தவனை எடுத்தால் பத்தாயிரம் கொடுத்தால் போதுமானது. அதுவும் இந்த முதுகலை படித்து முடிக்கும் வரை அவன் வேறு நிறுவனங்களைத் தேட மாட்டான். அதுவரை அவனுக்கு அளிக்கும் சம்பளமும் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தைத் தான் அளிக்கப் போகிறது என்கிற எண்ணம்.
ரிசோர்ஸ் கட் டவுனின் (Resource Cut Down) பின்புலம்
இந்த அநியாயங்களின் அடுத்த உச்சம் தற்போது தேநீர்சிஸ் நிறுவனத்தில் நடந்து வரும் ரிசோர்ஸ் கட் டவுன் (Resource Cut Down). தற்போது நிறைய பேரை வேலையை விட்டு நீக்கியதற்கு, அவர்கள் சரியாக வேலைப் பார்க்காத காரணத்தால் நிறுவனம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கூறுகிறது. இது உண்மை தானா? சற்று உற்று நோக்குவோம்.
நீக்கப்பட்டவர்கள் யார்?
முதலில் வேலையில் ஒருவன் புதிதாக சேர்கின்றபோது அவனுடைய போஸ்ட் 'Trainee' எனப்படும். அதன் பின் படிப்படியாக அவன் நிறுவனத்திற்கு பங்களிக்கின்ற விதம், அவனது பதவியை மேல் எடுத்துச் செல்கிறது. இன்று தேநீர்சிஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்ட பலரும் இரு வகையில் விழுகின்றனர் ஒருவர் 'Trainee' மற்றொருவர் 'Associate Consultant'.
ப்ராஜெக்ட் கிடைப்பதற்காக மாதங்களாக காத்திருப்பவர்கள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பொதுவாக சிலர் ஏமாற்றும் எண்ணத்துடன் கிடைக்கின்ற ப்ராஜெக்ட்களுக்கு நொட்டை கூறி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கப் பார்ப்பதுண்டு. வேறு சிலர் நிறைய முயற்சிகள் எடுத்தும் ப்ராஜெக்ட் ஏதும் இல்லாத காரணத்தால் காத்திருப்பதும் உண்டு; இந்த இரண்டு பிரிவுகளில் உள்ளவரையும் கரிசனம் பார்க்காது நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியுள்ளது.
அடுத்ததாக consultant-களுக்கு வருவோம். யார் இவர்கள்? அடிப்படையாக ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்தவர்களால்தான் இந்த பதவியை எட்ட முடியும். இன்று நிறுவனம் இந்த மனிதர்கள் பலரை எப்படி தகுதியற்றவர் எனக்கூறி நீக்கியுள்ளது? இவர்கள் உண்மையிலே தகுதியற்றவர்கள் என்றால் எதற்காக இத்தனை ஆண்டுகள் இவர்களை நிறுவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
Associate Consultant பதவியில் இருப்பவர்கள் மாதத்திற்கு குறைந்தது ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு இவர்கள் இடத்தில் வேறொரு ஆளை புகுத்தி விட்டால் அவர்களுக்கு இருபதிலிருந்து, முப்பதாயிரம் வரை சம்பளம் கொடுத்தால் போதும். அதுவும் புதிதாக இணைந்துள்ளவர்களைப் பயன்படுத்தினால் இருபதாயிரம் கொடுத்தால் போதுமானது. இதுதான் ஐ.டி. நிறுவனங்களின் காஸ்ட் கட்டிங் (Cost Cutting) முறை.
'ஷாக்' விளைவுகள்
நண்பன் கூறுகையில், இப்போதெல்லாம் என் டீம் லீட் தினமும் வந்தவுடன் மெயில் எதாவது வந்ததா என்று கேட்கிறார். எல்லோர் மீதும் அவருக்கு நம்பிக்கை போய் விட்டது. வெளிநாட்டிலும் இதுதான் நடக்கிறது. இங்கே டிஸ்மிஸல் லெட்டரை கொடுத்து ஒரு மாத ஊதியம் கொடுத்து ஒரே நாளில் கிளம்பச் சொல்கிறார்கள், வெளிநாட்டில் ஒரு மாத கெடுவாம்.
அங்க ஃபாரின்ல இருப்பவர் தினமும் போன் பண்ணி ஏதாவது சொன்னாங்களா? என்று தான் முதலில் கேட்கிறார். பக்கத்து டீம்'ல காத்தால வந்தவர் சாப்பிட போய் இருக்காரு. வந்தவருக்கு ஹெச்.ஆர்.கிட்டேந்து ஒரு மெயில் 'உங்கள வேலையை விட்டு தூக்கறோம்ன்னு' அப்படியே ஷாக்காகி உட்கார்ந்தவர் சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பிட்டார்.
அநியாயம் பண்றாங்க இங்க நிறைய பேர் ஹவுசிங் லோன், அது இதுன்னு இறக்கி விட்டுறுக்காங்க. பேமிலி மேன் - எங்கள வேலையை விட்டு தூக்கிட்டா நாங்க குடும்பத்த எப்படி காப்பாற்றுவதுன்னு ஒவ்வொரு நாளும் கவலைபடறாங்க. இந்த இடம் இப்போ வேலைப் பார்க்குற இடம் மாதிரியே இல்லை. நாளைக்கு இவங்களோட ஹெல்ப் இல்லாம நாங்கல்லாம் எப்படி வேலைப் பார்க்க முடியும்?
எத்தனையோ வருடம் தேநீர்சிஸ் நிறுவனம் ஸ்டாக் மார்க்கெட்டில் பெரிய பெரிய லாபங்களை ஈட்டிருக்கு. அப்பலாம் அதுக்கு காரணமா இருந்த ஊழியர்களுக்கெல்லாம் ஊதியத்தை ஏற்றியா கொடுத்திருக்கு? நிறுவனத்திற்காக உழைத்தவர்களை Poor Performers என்று பொய்யாக பட்டம் கட்டி வேலையை விட்டு அனுப்புவது அநீதியானது.
தன்னுடன் இருப்பவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும், தன் வேலை போகாமல் இருந்தால் சரி என்ற நோக்கத்துடன் பிற ஊழியர்கள் இன்னும் சுயநலமாக அமைதிகாப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.
வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்தே பழகிய முதுகெலும்புகள் இன்று ரப்பர் துண்டாக மாறி வருகின்றன. முதலாளித்துவத்தின் உச்சபட்ச பசிக்கு இன்று உணவுகள் கூடிக் கொண்டே போகின்றன. தீராப் பசிக்கு உணவாக - என்றுதான் உறைக்குமோ?
கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்று, சமூக சேவைக்கு லட்சக் கணக்கில் பணம் ஒதுக்குகிறார்கள். உங்களிடம் வேலை பார்ப்பவனும் சமுதாயத்தில் ஓர் அங்கம் தானே? அவனுடைய நல்வாழ்வுக்கு யார் சார் ரெஸ்பான்சிபிள்?

Thursday, January 1, 2015

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் உண்மை நிலை

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் உண்மை நிலை
1. மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்?
மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.
நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் சேர்கின்றது அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால், நமக்குள் அது வலிமை பெறுகின்றது.
விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும்,
வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின்,
நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
ஏனென்றால், மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியபின், விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக, மாட்டின் சாணம் வெளிப்படுகின்றது. ஆகவே, விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின் சாணத்திற்கு உண்டு.
ஆகையால், ஞானிகள் “மாட்டின் சாணத்தை வீட்டில் தெளி” என்றார்கள். மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால், நம்மால் வெளியிடப்பட்டு, வீட்டில் பதிந்துள்ள சங்கடம், சலிப்பு, வேதனை, போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.
2. எந்த எண்ணத்துடன் கோலம் போடவேண்டும்?
அதே மாதிரி வீடுகளில் கோலம் போடுவார்கள். இது சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. கோலம் எதற்காகப் போடுகிறார்கள்? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.
கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.
நாம் நமது வீட்டில் கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால், மாமியார் மீது வெறுப்பு, மாமனார் மீது வெறுப்பு, கணவர் மீது வெறுப்பு என்று மனதில் வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால் எப்படியிருக்கும்?
இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது, பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.
குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி
கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
ஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும், இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், இங்கு கோலமிட வேண்டும்.
ஆக, சாஸ்திரங்கள் காண்பித்த தத்துவங்கள் பொய்யல்ல. நாம் தெளிவாக இதையெல்லாம் தெரிந்து அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ்வோம்.

Tuesday, December 30, 2014

100க்கு100 உண்மை கண்டிப்பாக ஷேர் செய்யுங்கள்

100க்கு100 உண்மை கண்டிப்பாக ஷேர் செய்யுங்கள்,உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். இங்கு நிற்பவர்கள் அனைவரும் அனைத்து வகையான கேன்சர்,கிட்னி செயல் இழந்தவர்கள,டயாலிசிஸ் செய்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,நோயாளிகள் நேரில் செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை அவர்களை சார்ந்து மற்றொருவர் சென்றால் போதும், நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் டாக்டர்களால் கை விடப்பட்ட நோயாளியா.? இங்கு சென்றால் பூரண குணம் அடைந்து தீர்வு காணப்படுகிறது,ஓரு வாரத்திற்கு 2000லிருந்து3000பேர் வரை இங்கே பூரண குணமடைந்து செல்கிறார்கள்.
பார்வை நாள் ;-
வியாழன், ஞாயிறு நாட்களில் மட்டும் . வைத்தியர் மற்றும் மருந்தின் செலவு 100 மட்டுமே.இடம்.கர்நாடக மாநிலம் ஷிமோகாவிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அனந்தப்பூரிலிருந்து 7 கிலோ மீட்டரில் உள்ளது நரசிபுரா கிராமம்.அனைவருக்கும் சொல்லுங்கள் பகிருங்கள் ...டி.வி மோகன் 8056960537



இப்படியும் ஒரு பெண்ணா?

இப்படியும் ஒரு பெண்ணா?



8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் கற்பழிக்கப்படுகிறார், சுனிதா கிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 15. வாழ்க்கை போச்சே என்று இடிந்து போய் முடங்கி விடவில்லை. அன்றே முடிவெடுத்தார், தன்னை போல் பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள், பெண்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று. களத்தில் இறங்கவும் செய்தார்.
மாலினி என்கிற 15 வயது சிறுமியை, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், விபச்சார விடுதியில் விற்று விடுகிறார். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50,000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல். கேட்கவே மனம் பதறுகிறது. சிறைக் கைதியைப் போன்று அடைத்து வைக்கப்பட்ட அந்த குழந்தை வெளியே தப்பித்து வர 3 முறை முயன்றும், தோற்றுப் போன அந்தச் சிறுமி, இறுதியாக சுனிதா கிருஷ்ணனின் திறமையான செயல்பாடுகளால் காப்பாற்றப்பட்டு, ஐதராபாத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாள். www.puradsifm.com
ஒரு முறை, சமூக விரோதிகளிடமிருந்து சிறுமிகளைக் காப்பாற்றப் போன இடத்தில் வாங்கிய அடி உதையால், இவரது வலது காது கேட்கும் திறனை இழந்திருக்கிறது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார். வாழ்க நவீன புரட்சி நாயகி.
இதை பகிர்ந்து அவரது செயலுக்கு ஊக்கமும், ஆதரவும், மரியாதையும் தாருங்கள் சகோதரர்களே..! 


இந்தியாவில் உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.!




இந்தியாவில் உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.!

எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :
1. உங்கள் செல்போனிலிருந்து *#06# க்கு டயல் செய்யுங்க...
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை ( cop@vsnl.net ) க்கு மெயில் பண்னுங்க...
5. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...
6. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!

Monday, December 29, 2014

மீத்தேன் திட்டம் என்றால் என்ன?

நண்பர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும்.
மீத்தேன் திட்டம் என்றால் என்ன? 

2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார்.
அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.
ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம். 

இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.
கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

மீத்தேன் எடுக்கும் முறை:

மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது. 

இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை பயன்படுத்துவார்கள்.
முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள்.
பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள்.
பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.
பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள். 

பின்னர் அந்த வேதிப்பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள்.
மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.

சற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் , அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும். நிலம் உள்வாங்கும். பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும்.
மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும்.
இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது. 

இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா...........

பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்? -- வாரியார் சுவாமிகள்

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.

அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.

வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.

வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.



அயல் நாட்டில்... ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்.

ஒரு அயல் நாட்டில்... ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்..மூவரும்
மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்...!
அவர்களுக்கு 50 சவுக்கடிகள்.. தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..!
ஆனால்.. அதற்கு முன்.. அவர்கள்
வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும் என சொல்லப்பட்டது..!
முதலில்.. ரஷ்யன்..!!
"எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக
குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..!
"என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை..ஒன்றை கட்டுங்கள்..!"
என்றான்..! அவ்வாறே செய்யப்பட்டது..!!
பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவன்.. பலமான காயத்துக்கு..ஆளானான்..!
அடுத்து... சீனன்..!!
"எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!! இரண்டாவது...
"என் முதுகில்..இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!"
என்றான்..!
அவ்வாறே செய்யப்பட்டது..!
15 சவுக்கடிகளில்.. தலையணைகள்
கிழிந்து அவன்.. முதுகு பிளந்தது..!!
அடுத்து.. தமிழன்..!
அமைதியாக சொன்னான்..
"எனக்கு 50 சவுக்கடியை... 75 ஆக உயர்த்துங்கள்..!" என்றான்..!
அங்கிருந்த அனைவரும்.. அதிர்ச்சியுடன்.. அவனை பார்த்தனர்.!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது..!!
சொன்னான்....
"எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்..! என்றான்..!!!

மாமருந்தாகும் மாம்பழம் :-

மாமருந்தாகும் மாம்பழம் :-

மாம்பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் ஆயுளையும் நீடிக்கச் செய்யும். இப்பழங்களின் பூர்வீகம் இந்தியாவாகும். ராஜகனியான மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும். மாம்பழத்தின் பூர்வீகம் தென்னிந்தியா தான். மாம்பழம் பொதுவாக கோடைக் காலத்தில் அதிகம் விளையும். நன்கு கனிந்தமாம்பழத்தை உண்பது நல்லது. மாம்பழம் உடலுக்கு உஷ்ணம் தரும் பழம் தான்.ஆனால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு. மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெறும்வயிற்றில் சாப்பிடக் கூடாது. உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்துசாப்பிடுவது நல்லது.

மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.

100 கிராம் மாம்பழத்தில்

நீர்ச்சத்து - 76.0 கிராம்

நார்ச்சத்து - 0.6 கிராம்

தாதுப் பொருள் - 0.4 கிராம்

கொழுப்பு - 0.4 கிராம்

புரதம் - 0.5 கிராம்

மாவுப்பொருள் - 17.0 கிராம்

சுண்ணாம்புச் சத்து - 13 மில்லி கிராம்

இரும்புச் சத்து - 1.2 மில்லி கிராம்

கரோட்டின் - 2740 தஞ்

எரிசக்தி - 72. கலோரி

தையமின்-0.8 மி.கி

நியாசின் - 0.8 மி-கி

ரைபோஃபிளேவின் - 0.08 மி.கி

வைட்டமின் சி - 16.0 மி.கி.

மாம்பழத்தின் மருத்துவப் பயன்கள்

காலை உணவு முடித்து 30 நிமிடங்களுக்கு பின் 50 கிராம் மாம்பழச்சாற்றுடன் ஒரு ஸ்பூன் நெய்யும், 1 ஸ்பூன் தேனும் கலந்து அருந்திவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் வயிற்றுப் புண்குணமாகும்.

மேற்கண்ட முறைப்படி அருந்தி வரும் நாட்களில் மலம் அதிகளவு வெளியேறினால் தேனை இரட்டிப்பாக சேர்த்துக்கொள்ளலாம்,.

மாம்பழத்தின் சாறுடன், தேன், குங்குமப் பூ, ஏலக்காய்த் தூள், பச்சைகற்பூரம் இவைகளை சிறிதளவு சேர்த்து அதில் காய்ச்சிய பாலைக் கலந்து இரவுஉணவுக்குப்பின் அருந்தி வந்தால் இதயம் பலப்படும்.

சிறு குழந்தைகளுக்கு உணவு சாப்பிட்டப்பின் மாம்பழம் கொடுப்பது நல்லது.மாம்பழத்தை நெய்யில் தடவிக் கொடுப்பது மிகவும் நல்லது. இரவில் பாலும்கொடுத்து வந்தால் குழந்தை கொழுகொழுவென்று வளரும்.

இரவு உணவின் அளவைக் குறைத்து மாம்பழத் துண்டுகளை சாப்பிட்டு பால் அருந்தினால் உடல் பலமடைவதுடன் செரிமான சக்தியும் கூடும். மாத விலக்கு சீராக இல்லாத பெண்கள் மாம்பழம் கிடைக்கும் காலங்களில் அதைபாலில் கலந்து இரவு உணவுக்குப்பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு சீராகும்.

இரவு உணவுக்குப்பின் மாம்பழச் சாறு சாப்பிட்டு வந்தால் முகம் பளபளக்கும். மலட்டுத் தன்மையைப் போக்கி ஆண்மையை அதிகரிக்கும். புளிப்பு மாம்பழச் சாறு 100 மி.லி. அதனுடன் 50 கிராம் நெய் இரண்டையும்கலந்து ஒரு சட்டியில் ஊற்றி 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்து சூடேற்றிஇறக்கிக் கொள்ளவும். காலை, பகல் உணவோடு ஊறுகாய்க்குப் பதிலாகசேர்த்துக்கொண்டு வந்தால் உணவு எளிதில் சீரணமாகும். நரம்பு தளர்ச்சிநீங்கும்.

நீரிழிவு நோய் கொண்டவர்கள், சொறி, சிரங்கு உள்ளவர்கள் மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது


அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு உண்டான கணத்தில் இருந்தே குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கண்டறியும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர்.

விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், அதன் பின்பே ஸ்கேன் செய்து பார்க்க முடியும், மனிதன் செய்யும் சில தவறுகளால் அரசு அதையும் தடை செய்து விட்டது. ஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு உண்டான கணத்தில் இருந்தே குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கண்டறியும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர். ஒரு பெண் மூச்சு விடும் நாசியின் பக்கங்களை வைத்தும், அந்த பெண் குழந்தையை சுமக்கும் போது எந்த கையை ஊன்றி மேலே எழுகிறார் என்பதை வைத்தும் இன்னும் இது போன்று நிறைய முறைகளில் இதற்கு முன் இருந்தவர்கள் கணித்தனர்.
"கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ்
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை"
என்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில் கரு உண்டான காலத்தில் நாசியில் ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே குழந்தையின் பாலினத்தை நம்மால் கணிக்க முடியும் என்பது தான் இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்தி. அதாவது மூச்சுக் காற்றானது வலது புற நாசியில் ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது புற நாசியில் ஓடினால் பெண் குழந்தை எனவும், மூச்சுக்காற்று சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே இதன் விளக்கம். இதே போன்று குழந்தை கருவில் உண்டான தேதியில் இருந்து என்னென்ன உறுப்புகள் எந்தெந்த மாதங்களில் உருவாகும்,கருவில் குழந்தை உருவான தேதில் இருந்து பிறக்கும் நாள், குழந்தை குறைபாடு, கருச் சிதைவு, மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை துல்லியமாக கொடுத்துச் சென்றுள்ளனர், மேற்கத்திய மோகத்தினாலும், தமிழை தாழ்வாக நினைப்பதாலும், கடவுள் மறுப்பு கொள்கைகளினால் சித்தர் பாடல்களை நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற அறிய விடயங்களை நாம் தவற விடுகின்றோம். இவை அனைத்தும் அவர்களின் மெய்ஞானத்தால் தோன்றியவையே, சித்தர் பாடல்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக அளவில் தமிழ் மக்களுக்கு மேலும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதே என் கருத்து.


Sunday, December 28, 2014

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்…! அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங்.





அது என்னப்பா பாரத ரத்னா உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகள் எல்லாம் சினிமா பிரபலங்கள் , அரசியல் வாதிகளுக்கு தான் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமா..? இந்தியாவில் பெரும்பான்மை சமூகமான விவசாயிகளுக்கு எத்தனை பேருக்கு இந்த விருதுகள் எத்தனை கொடுக்கப்பட்டுள்ளது என்றால் நிட்சயம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை.. 

கடந்த 2013 ஆண்டு இதே விருது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்டது . அவர் ஒரு விளையாட்டு பிரபலம்..இந்த துறையில் 25 ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியவர். அதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.. ஆனால் இந்த சாதனைக்காக அவர் ஊதியமாக பல நூறு கோடிகளை விளையாடும் காலத்திலேயே பெற்றுவிட்டார்.பரிசுகளாக பல கோடி மதிப்புள்ள பெராரி கார் வரை இலவசமாக பெற்றுவிட்டார் .அதுவும் வரி செலுத்தாமலே .இருந்தும் கூட பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னாவும் அவரை அலங்கரித்தது.

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு நபர் சத்தமில்லாமல் ஒரு மிகப்பெரும் சாதனை நிகழ்த்தி கட்டியுள்ளார்..நாம் வாழும் காலத்தில் . ஆனால் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியும் கூட அவருக்கு கோடிகளும் குவியவில்லை . சிறந்த இந்திய குடிமகன் என்று அரசின் உயர் விருதுகளாலும் இல்லை.. ஊடகங்களிலும் தொடர்சியான பாராட்டுக்களும் இல்லை.. மாறாக அவர் நிகழ்த்திய சாதனை மட்டும் என்றும் அழியாத புகழோடு இருக்கும் என்பது மட்டும் உண்மை. அவரது பெயர் ஜாதவ் பயேங் இவர் கிடத்தட்ட தனது வாழ்நாளின் 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு காட்டை உருவாக்கவே செலவிட்டு அதில் சாத்தித்தும் கட்டியுள்ளார்.நாட்டின் வன வளங்களை அழிக்கும் இன்றைய காலட்டத்தில் இதை சாத்தித்துள்ளார் .அதுவும் கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் காடுகளை தனி ஒரு மனிதராக யார் உதவியும் இன்றி எந்த ஒரு ஊதியமும் இன்றி ருந்தும் கூட பாரதத்தின் உயரிய விருது அவருக்கு இல்லை . மாறாக எதாவது ஒரு அரசியல் வாதிக்கு அல்லது சினிமா பிரப்பலங்களுக்கு இந்த விருதை கொடுப்பது பற்றி தான் இன்றுவரை சிந்தித்து வருகிறது நமது அரசுகள். ஏன் இப்படியான நிலை .. ஒருவேளை அவர் ஏழை என்பதால் , ஊடகங்களால் புகழ்சிகள் இல்லை என்பதால் நம் நாட்டின் உயரிய விருதுகள் கொடுக்கப்படவில்லையோ .. அவரை பற்றிய ஒரு சிறிய குறிப்பு..

யார் இந்த மனிதர் ?!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது…எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்…!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை ‘முலாய்’ என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன.
மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்…ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் ‘சமூககாடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை…!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி – எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்…ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து ‘சிவப்பு எறும்பு’களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார்.

இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்…வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்…இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர்.
அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்:

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். “இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் ” என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல:

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 30,000 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன…!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த ‘முலாய் காடுகள்’ !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது…இரு ஆண்டுகளுக்கு முன் மிக ‘பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்’ இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். ‘ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்’ என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்…ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை…இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது...

இவரை போன்ற எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்தின் , இயற்கையின் மீது அக்கறை கொண்ட நல்லுங்கள் தான் நம் நாட்டின் உயரிய சொத்துக்கள் .. ஆனால் ஏனோ நமது அரசுகளுக்கு இவர் செய்த சாதனைகள் , தியாகங்கள் எல்லாம் கண்களில் தெரியவில்லை போலும்.. எது எப்படியோ இவரின் சாதனை இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு உந்துதல் இவரது இந்த சாதனை எக்காலத்திலும் அழியாத ஒன்று என்றால் மிகையில்லை..

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது.





மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே.

இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது.
படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது. "சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்

நன்றி: சசிதரன்

வாழ்ந்ததற்கு அர்த்தம் வேண்டும்

வாழ்ந்ததற்கு அர்த்தம் வேண்டும்





எண்ணெய்ப் பசை சிறிதும் இல்லாததால் கொச்சைக் கயிறுபோல் திரிந்துபோன தலைமுடி…ஆங்காங்கே கிழிந்து கந்தலாகி அழுக்கடைந்து காணப்படும் ஆடைகள். அருகே சென்றால் குளித்து நாள் கணக்கில் ஆகிப்போனதன் அடையாளமாக வீசும் துர்நாற்றம்... இவை நாடு முழுவதும் சாலையோரங்களில் காணப்படும் மன நோயாளிகள், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்களின் அடையாளங்கள்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் இருந்த மனநோயாளிகளை நான்கு இளைஞர்கள் கடந்த வாரம் முடிதிருத்தம் செய்து, குளிப்பாட்டி, ஆடைகளை வழங்கி புதிய வாழ்க்கைக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தனர். அதை வியப்புடன் பார்த்து அவர்களிடம் பேசத் தொடங்கினோம். அவர்களில் ஒருவரான பி.மணிமாறன் மடை திறந்த வெள்ளம்போல் பேசியது:
“என் சொந்த ஊர் திருவண்ணாமலை. விவசாயக் குடும்பம். 8-வதுவரை படிச்சிருக்கேன்.அதுக்கு மேல படிப்பு ஏறலை.`உனக்கு எது விருப்பமோ, அதைச் செய்!’னு அப்பா அறிவுரை கூறினார். எனது மானசீக குரு அன்னை தெரசா. அவரைப் பார்க்கறதுக்காக சென்னையில் இருந்து ரயிலில் கொல்கத்தா சென்றேன். அங்கே ரயில் நிலையத்தில் எனது சூட்கேஸ் திருடு போயிருச்சு. பாஷையும் புரியலை. அங்கிருந்த சிலர் என்னை பிச்சை எடுக்க வைச்சாங்க. இந்த மாதிரி ஒரு வாரம் கழிந்தது.
அப்போ கொல்கத்தாவிலே ஆட்டோ ஓட்டிக்கிட்டிருந்த ராஜேந்திரன் என்கிற தமிழர் என்னைக் காப்பாற்றி, அன்னை தெரசா ஆசிரமத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போனார். தெரசா ஆசிரம நிர்வாகிகள் எனக்கு நிறைய அறிவுரை கூறினாங்க. சொந்த ஊருக்குப் போய் ஏழை, எளியவர்களுக்கு தொண்டு செய்யுமாறு அறிவுறுத்தினாங்க. அது எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு.” எனச் சொல்லும் மணிமாறன் முதன் முதலில் கொல்கத்தாவில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சேவை செய்யச் சென்றார். ஆனால் பசியால் வாடித் திரிந்து பின்னர் ஒரு ஹோட்டலில் நாளுக்கு ரூ.35 சம்பளம் வேலை செய்யத் தொடங்கினார். ஆனால் வெகு நாள் தாக்குபிடிக்க முடியவில்லை, சொந்த ஊருக்கே திரும்பினார்.
“கொல்கத்தாவில் சகிப்புத் தன்மையைக் கத்துக்கிட்டேன். 2002-ம் ஆண்டு மே மாதம் (அப்போ எனக்கு 16 வயது) திருப்பூர் போனேன். அங்கு எனது அண்ணன் டெய்லரா வேலை பார்த்து வந்தாரு. அவருக்கு உதவியாளராக நான் வேலைக்குச் சேர்ந்தேன். முதல் மாதச் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்தேன்.
அப்போ அவர், `அந்தப் பணத்தை வைத்து சாலையோரம் காணப்படும் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோருக்கு சாப்பாடு கொடு’ எனச் சொல்லி பணத்தை வாங்க மறுத்துட்டார். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அப்போ அவங்க முகத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது” என்றார் மணிமாறன்.
வாழ்வதற்கு அர்த்தம் வேண்டும்! வாழ்ந்ததற்கு அடையாளம் வேண்டும்! என்கிற எண்ணம் ஏற்பட்டவுடன் `உலக மக்கள் சேவை மையம்’ என்கிற பெயரில் ஒரு தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மணிமாறன். சாலையோரம் திரியும் மன நோயாளிகள், ஆதரவற்றோர், தொழுநோயாளிகள் ஆகியோருக்கு உணவு, ஆடை வழங்குவது, மருத்துவ வசதி செய்வது, ஆதரவற்றோர் இறந்தால் அவர்களை இறுதிச் சடங்கும் செய்யும் பணியையும் செய்து வருகிறார்.
”திருப்பூரில் இருந்து பனியன் ஆடைகளை வாங்கி விற்பனை செய்கிறோம். அதில் கிடைக்கும் பணத்தை இந்தக் காரியங்களுக்கு பயன்படுத்துறோம். இதுவரை தமிழகம் முழுவதும் 450 தொழுநோயாளிகளைப் பராமரித்துள்ளோம். 51 தொழுநோயாளிகளை தத்தெடுத்துள்ளோம்” என அமைதியாக சொல்லும் மணிமாறன் திருப்பூர், திருவண்ணாலை, ஈரோடு, விழுப்புரம், வேலூர், சேலம் உள்பட பல்வேறு ஊர்களில் இதுவரை 138 ஆதரவற்ற பிணங்களை அவரே அடக்கம் செய்துள்ளார்.
இவரது அமைப்பின் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்துள்ளனர். இவருடைய அமைப்பின் சார்பில் கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ரத்தினம் கல்லூரி, நாமக்கல் விவேகானந்தர் பெண்கள் கல்லூரி, திருப்பூர் குமரன் கல்லூரி உள்பட தமிழ்நாடு முழுவதும் 48-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மன நலம் பாதிக்கப்பட்டோர், தொழு நோயாளிகள், ஆதரவற்றோருக்கு சேவை செய்வது, கண் தானம், ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
“அண்மையில் தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தோம். அவர் எங்களது சேவையைப் பாராட்டினார். எங்கள் பணியை இன்னும் பல இளைஞர்களிடம் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார்” எனச் சொல்கிறார் மணிமாறன்
“நாங்கள் பார்த்த அளவில் தற்போதைய இளைஞர்களில் 10 வீதம் பேர் குடும்பச் சூழ்நிலை, காதல் தோல்வி, வறுமை உள்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 5 சதவிகிதம் பேர் மனநோயாளிகளாக மாறியிருக்கிறார்கள். இளைஞர்களையும், சமுதாயத்தையும் திருத்தணும் என்கிற நோக்கத்துடனே சேவை செய்துவருகிறேன். பாதிக்கப்பட்டவர்களை குறித்து தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு சேவை செய்யத் தயார்” என்கிறார்.
இவரது சேவையைப் பயன்படுத்த 99656 56274 என்கிற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






வெறிநாய் கடிக்கு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் பிறந்த தின பகிர்வு! 27 -12

வெறிநாய் கடிக்கு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் பிறந்த தின பகிர்வு! 27 -12


மனிதர்கள் கொத்துக் கொத்தாக நோய்களில் செத்துப்போவது கடவுள் தரும் தண்டனை எனப் பலகாலம் நம்பிக்கொண்டு இருந்தனர் மக்கள். ராபர்ட் ஹூக் நுண்ணுயிரிகளை மைக்ராஸ்கோப்பில் கண்டிருந்தாலும் நோய்களுக்கு இந்தக் கண்ணுக்கு தெரியாத ஜீவன்கள் காரணம் என யாரும் நினைக்கவில்லை. 

திராட்சைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒயின் சீக்கிரம் கெட்டுப்போனது . விடாது ஆய்வு செய்தார் பாஸ்டர். நொதித்தலுக்குக் காரணமான நுண்ணுயிரிகளைக் கண்டறிந்தார். நோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து நுண்ணுயிரி கோட்பாட்டை வெளியிட்டார். நொதித்தல் செயலுக்கு இந்த நுண்ணுயிரிகளே காரணம் என்றும் அவற்றைக் கண்ணால் காண முடியாது, மைக்ராஸ்கோப் கொண்டே அவற்றைக் காண முடியும் என்றும் சொன்னார். 

குறிப்பிட்ட வெப்பநிலையில் வாழும் அவற்றைக் கட்டுப்படுத்த வெப்பநிலையை மாற்ற வேண்டும் என்றும் சொன்னார். பாலை கெடாமல் காக்க நன்றாகச் சூடாக்கி உடனடியாகக் குளிர வைக்கும் [பாஸ்சரைசேஷன்] இவர் உருவாக்கியதே . 

வெறிநாய்க்கடி மிகப்பெரிய சிக்கலை அக்காலத்தில் உண்டு செய்திருந்தது. வெறிநாய் கடித்தால் அந்த நாயை போலவே நடந்து கொண்டு, நீருக்கு பயந்து ஒடுங்கி இருந்து பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். 'நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு சதையைக் கொத்தாக வெட்டி எடுத்தல்' என ரத்தம் உறைய வைக்கும் முறைகள் அந்த நோயை குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டன. ஒன்றும் நடக்கவில்லை. 

பாஸ்டர் பல நாய்களின் பின்னர் உயிரை பணயம் வைத்துத் திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்குக் காரணம் என்று உணர்ந்தார். நாயின் உமிழ் நீரை தானே உறிஞ்சி, மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் தாக்கப்பட்டுப் பதினான்கு இடங்களில் கடிபட்டிருந்த ஜோசஃப் மிஸ்டர் என்கிற ஒன்பது வயது சிறுவனின் உடலில் செலுத்தி, பதினான்கு நாட்களில் அவனைக் குணப்படுத்தினார். ராபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது. 

மருத்துவர்கள் கையுறை அணிவது, அறுவை சிகிச்சை கத்திகளை ஸ்டெரிலைஸ் செய்வது ஆகியவற்றையும் இவர் வலியுறுத்தினார். உயிர் இழப்பை இதனால் அதிக அளவில் தடுக்க முடிந்தது . 

ஆந்த்ராக்ஸ் நோயும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. கால்நடைகள் மொத்தமாகச் செத்து விழுந்தன. அந்த நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கொன்று, மீண்டும் அவற்றை மிருகங்களின் உடம்பில் செலுத்தி சாதித்தார் பாஸ்டர். ஐரோப்பா முழுக்கப் பட்டுபுழுக்கள் செத்துக்கொண்டு இருந்தன. நோய் வாய்ப்பட்ட பட்டுப் புழுக்களைப் பிரித்து வையுங்கள் என்று அவர் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்ட பட்டு உற்பத்தி மையங்கள் தப்பித்தன. இத்தாலி தேசத்து பட்டு உற்பத்தி நிறுவனத்துக்கு இவரின் பெயரையே சூட்டினார்கள். 

இவர் ஓயாமல் ஆய்வில் மூழ்கி உலகை மறந்திருந்தார். இது எந்த அளவுக்குப் போனது என்றால் இவரைத் திருமண நாளன்று இவரைக் காணவில்லை. எங்கெங்கும் தேடிப்பார்த்தார்கள். ஆளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டார் என்று எண்ணிக்கொண்டு இறுதி முயற்சியாக அவரின் ஆய்வகம் நோக்கி போனார்கள். அங்கே கூலாக ஆய்வு செய்து கொண்டிருந்தார். “உனக்கு இன்னைக்கு கல்யாணம்!” என்று சொல்லி இழுத்துக்கொண்டு போனார்கள். தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக உழைத்தவர் அவர்.

திசையன்விளை அருகே தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறுகள்

திசையன்விளை அருகே தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறுகள்

திசையன்விளையில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் முதுமொத்தன்மொழி பஞ்சாயத்து ஆயன்குளம் படுகை அருகில் இந்த கிணறுகள் உள்ளது. இந்த கிணற்றுக்குள் மணிமுத்தாறு அணை உபரி தண்ணீரை அதிக அளவில் திருப்பி விட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அதன்படி கிணறுகளுக்குள் தண்ணீர் விடப்பட்டது. அவற்றில் 2 கிணறுகள் தண்ணீரை உள்வாங்கிய படியே உள்ளன. இதனை அறிந்த பொதுமக்கள் பலர் அந்த அதிசய கிணறுகளை பார்த்து வியந்து சென்றனர். மாவட்ட வருவாய் அதிகாரி குழந்தைவேலு, ராதாபுரம் தாசில்தார் சேக் அப்துல்காதர், சுனாமி தாசில்தார் அபுல்காசிம், திசையன்விளை வருவாய் ஆய்வாளர் ஜெஸ்லட் ஜெயா மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வந்த விவசாயிகள், மணிமுத்தாறு அணை தண்ணீரை இங்குள்ள கிணறுகள் வழியாக அதிக அளவு திருப்பி விட்டால் இப்பகுதியில் உள்ள சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விவசாய பம்பு செட் நிலங்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள உப்பு நீர் நல்ல நீராக மாற வாய்ப்பு உள்ளதாக கூறினர்.
மேலும் சிறிய அளவிலான கலர் பாசி (கழுத்தில் அணிவது) களை இந்த கிணற்றில் கொட்டி இங்குள்ள தண்ணீர் எங்கு செல்கிறது என்று சோதனை செய்ததாகவும், அந்த கலர் பாசிகள், காரி கோவில், குண்டல், நவ்வலடி, உவரி தேரி பகுதியில் உள்ள கிணறுகளில் மிதந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி குழந்தைவேலு இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் நேரில் கூறி மணித்தாறு அணை 4–வது ரீச் வழியாக தண்ணீர் வர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.


திசையன்விளை அருகே தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறுகள்