Sunday, August 31, 2014

ஆதவ் ட்ரஸ்ட்



அன்பான நண்பர்களே, ஆதவ் ட்ரஸ்ட் தற்பொழுது போதிய அளவு தங்குமிடம் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரவிரும்பும் நோய்மையாளர்களை அனுமதிக்க இயலாத சூழலில் உள்ளது. இது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. காரணம் , எவ்வளவு விரைவாக சிகிச்சைக்கு உட்படுகிறார்களோ அவ்வளவு எளிதாக நோயின் தாக்கத்தைக்குறைக்க இயலும். இன்னிலையில் கடந்த பல வருடங்களாக ஆதவின் திட்டத்தில் இருக்கும் கைவிடப்பட்டோருக்கான தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான தங்குமிடம், மாற்றுவழி மருத்துவம் (இயன்முறை மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், அக்குப்ரஷர்) Hydrotherapy சிகிச்சை அளிக்க உதவும் வகையில் நீச்சல் குளத்துடன் கூடிய மருத்துவமையம், சிறப்புப் பள்ளி மற்றும் வேலைவாய்ப்பு மையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை நிறுவ சுமார் ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இது சேலத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்குள் கிடைத்தால் மிகவும் வசதியாக இருக்கும். உங்கள் சுற்றுவட்டாரத்தில் 12-13 லட்சம் மதிப்பிலான நிலம் இருப்பின் என்னைத்தொடர்பு கொள்ளவும். இதற்கு உங்களால் ஆன பொருளுதவியும் வழங்க கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தங்கி இருப்போருக்கான மற்றும் தினசரி வந்துபோகும் நோய்மையாளர்களுக்கான வாடகை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றிற்காக ஒவ்வொரு மாதமும் சுமார் 25,000 ரூபாய் செலவாகிறது.
இதற்கு உங்களால் ஆன பொருளுதவியும் வழங்க கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு 80 G பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு.
Bank Name : Canara Bank
SB Account Name : Aadhav Trust
Branch : Suramangalam
Account number : 1219101036462
IFSC Code : CNRB0001219
MICR Code : 636015005
email: mailaadhavtrust@gmail.com
phone: 9976399403

No comments:

Post a Comment