Sunday, August 31, 2014

கருப்பட்டியின் பயன்கள்:


கருப்பட்டியின் பயன்கள்:

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் 
சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

கருப்பட்டியின் பயன்கள்:
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில்
சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்........................


பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்........................

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணு கின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் செரிமானமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாகத் துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக் கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்ப வர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையை யும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச் சிக்கலினால் துன்பப்படு பவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் குடிக்கவேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயைக் குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும்.

இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால், இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பயன்கள் உண்டு. பீட்ரூட்டின்  முக்கியப் பயன்கள்:  புற்றுநோய் பரவு வதை தடுக்கும்.

* மலச்சிக்கலைப் போக்கும்.

* பித்தத்தைக் குறைக்கும்

* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.

* சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

ViduthalaiEpaper

Read : http://viduthalai.in/home/viduthalai/medical/85650-2014-08-11-10-33-42.html#ixzz3Bf0xTIMp

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்........................
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் செரிமானமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாகத் துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக் கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்ப வர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையை யும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பல மாதங்களாக மலச் சிக்கலினால் துன்பப்படு பவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் குடிக்கவேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயைக் குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும்.
இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால், இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பயன்கள் உண்டு. பீட்ரூட்டின் முக்கியப் பயன்கள்: புற்றுநோய் பரவு வதை தடுக்கும்.
* மலச்சிக்கலைப் போக்கும்.
* பித்தத்தைக் குறைக்கும்
* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
* சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

விவசாயம்



ஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள் எதுவுமே கிடையாது.
ஏரிகளும் கிடையாது.ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது.
கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைதான் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
மக்கள் பயன்படுத்திய பிறகு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்களுக்கும்,பூங்காக்களுக்கும் பாய்ச்சப்படுகிறது.
அந்த நீர் விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
விலைக்கு வாங்கப்பட்ட நீரைக்கொண்டு பாலைவனத்தில் பசுமை குடில்கள் அமைத்து காய்கறிகளை பயிரிடுகிறார்கள்.
அப்படி பசுமை குடில்களில் பயிரிடப்பட்டிருக்கும் தக்காளி செடிகள்தான் மேலே உள்ள படம்.
கடந்த ஆண்டு மட்டும் UAE 38,000 டன் காய்கறிகளை விளைவித்து 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்திருக்கிறது.
2020ம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 40% காய்கறிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.
தக்காளி,முட்டைக்கோசு,வெள்ளரிக்காய்,கத்தரிக்காய் என ஒவ்வொரு காய்கறியாக பயிரிட்டு வந்தவர்கள் தற்போது கோதுமை பயிரிட்டு அறுவடை செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்
இதே வேகத்தில் போனால் பாலைவனத்தில் நெல் அறுக்கும் காலம் விரைவில் வந்தாலும் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்போது விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற மாட்டார்கள்.
இங்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் சற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் என்பதால் மக்கள் இவற்றை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
UAEயை போன்றே பெரும்பாலும் பாலைவனத்தை கொண்ட நாடுதான் இஸ்ரேல்.
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையை என்பது போல இஸ்ரேலில் ஓடும் யோர்தான் நதிதான் அவர்களின் ஒரே நீர் ஆதாரம்.
பல்விளக்கக்கூட பற்றாத தண்ணீரைக் கொண்டு பல பயிர்களையும் விளைவிக்கிறார்கள் இஸ்ரேலியர்கள்.
இஸ்ரேலின் மழை பொழிவு விகிதம் ஆண்டுக்கு வெறும் 50 மி.மீட்டர்தான்.
6.25 மில்லியன் எக்டர் மீட்டர்தான் இஸ்ரேல் நாட்டின் ஒட்டுமொத்த நீர்வளம். அது சராசரியாக நம்மூர் பவானிசாகர் அணையில் ஒர் ஆண்டில் வந்து சேரும் நீருக்கு சமம்.
இந்த அளவு நீரைக்கொண்டு அவர்கள் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறார்கள்.
அப்படி விவசாயம் செய்யும் ஒரு இஸ்ரேலிய விவசாயியின் சராசரி ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 66,000 அமெரிக்க டாலர்கள்.
பரப்பளவில் மிகச்சிறிய நாடான இஸ்ரேலில் விவசாயம் நடைபெறும் பகுதி இன்னும் குறைவானது.
சொட்டு நீர் பாசனம்,தெளிப்பு நீர் பாசனத்தில் உலகிற்கே முன்னோடி இஸ்ரேலியர்கள்.
இஸ்ரேலிலாவது யோர்தான் நதி எனப்படும் ஒரு சிறிய நதி ஓடுகிறது.
ஆனால் UAEல் அதுக்கூட கிடையாது.முற்றிலும் பாலைவன தேசமான இங்கு மழை பொழிவின் அளவு இஸ்ரேலைவிட மிக குறைவு.
அவர்கள் காட்டிய அதே சொட்டு நீர் பாசனம்தான் இங்கும் கைகொடுக்கிறது.
நீர் பாசன முறையில் நாம் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய நேரம்நேரம் நெருங்கிவிட்டது.
நம் நாட்டில் நீர்வளம் குறைவான பகுதியில் இதே போன்ற முறையை பின்பற்றி நாமும் விவசாயம் செய்ய முயற்சி செய்யலாமே.....

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ! ஔவையார் எழுதிய விநாயகர் அகவல்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
--------------------------------------------------
ஔவையார் எழுதிய விநாயகர் அகவல் 
--------------------------------------------------
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச்சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகெரிப்பப்
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச்சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகெரிப்பப்

பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிரே
முப்பழம் நுகரும் மூஷிக வாகனா
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகை நான் மகிழ்ந்தெனக் கருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலம் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி

கருவிகளொடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் களைந்தே
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்து

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆராதாரத் தங்கிசை நிலையும்
தேறா நிறத்திப் பேச்சுரை அறுத்தே

இடைபிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி

குண்டலியதனிக் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை
காலாலெழுப்பும் கருத்தறிவித்து

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயம் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

ஷண்முக சூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளி
புரியட்டகாயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினிற் கபால வாயிற்காட்டி
இருத்தி முக்தி இனிதெனக்கருளி
என்னையறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள் வெளி இரண்டிற்கு ஒன்றிடமென்ன
அருள் தரும் ஆனந்தத்தழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்தே அருள் வழி காட்டி
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீரும் விளங்க நிறுத்தி
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
--------------------------------------------------
ஔவையார் எழுதிய விநாயகர் அகவல்
--------------------------------------------------
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச்சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகெரிப்பப்
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச்சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகெரிப்பப்
பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
பேழைவயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிரே
முப்பழம் நுகரும் மூஷிக வாகனா
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதலைந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகை நான் மகிழ்ந்தெனக் கருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலம் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளி
கருவிகளொடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் களைந்தே
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்து
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆராதாரத் தங்கிசை நிலையும்
தேறா நிறத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி
குண்டலியதனிக் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை
காலாலெழுப்பும் கருத்தறிவித்து
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயம் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
ஷண்முக சூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளி
புரியட்டகாயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயிற்காட்டி
இருத்தி முக்தி இனிதெனக்கருளி
என்னையறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள் வெளி இரண்டிற்கு ஒன்றிடமென்ன
அருள் தரும் ஆனந்தத்தழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தமளித்து
அல்லல் களைந்தே அருள் வழி காட்டி
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீரும் விளங்க நிறுத்தி
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே

ஆதவ் ட்ரஸ்ட்



அன்பான நண்பர்களே, ஆதவ் ட்ரஸ்ட் தற்பொழுது போதிய அளவு தங்குமிடம் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரவிரும்பும் நோய்மையாளர்களை அனுமதிக்க இயலாத சூழலில் உள்ளது. இது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. காரணம் , எவ்வளவு விரைவாக சிகிச்சைக்கு உட்படுகிறார்களோ அவ்வளவு எளிதாக நோயின் தாக்கத்தைக்குறைக்க இயலும். இன்னிலையில் கடந்த பல வருடங்களாக ஆதவின் திட்டத்தில் இருக்கும் கைவிடப்பட்டோருக்கான தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான தங்குமிடம், மாற்றுவழி மருத்துவம் (இயன்முறை மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், அக்குப்ரஷர்) Hydrotherapy சிகிச்சை அளிக்க உதவும் வகையில் நீச்சல் குளத்துடன் கூடிய மருத்துவமையம், சிறப்புப் பள்ளி மற்றும் வேலைவாய்ப்பு மையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை நிறுவ சுமார் ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இது சேலத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்குள் கிடைத்தால் மிகவும் வசதியாக இருக்கும். உங்கள் சுற்றுவட்டாரத்தில் 12-13 லட்சம் மதிப்பிலான நிலம் இருப்பின் என்னைத்தொடர்பு கொள்ளவும். இதற்கு உங்களால் ஆன பொருளுதவியும் வழங்க கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தங்கி இருப்போருக்கான மற்றும் தினசரி வந்துபோகும் நோய்மையாளர்களுக்கான வாடகை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றிற்காக ஒவ்வொரு மாதமும் சுமார் 25,000 ரூபாய் செலவாகிறது.
இதற்கு உங்களால் ஆன பொருளுதவியும் வழங்க கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு 80 G பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு.
Bank Name : Canara Bank
SB Account Name : Aadhav Trust
Branch : Suramangalam
Account number : 1219101036462
IFSC Code : CNRB0001219
MICR Code : 636015005
email: mailaadhavtrust@gmail.com
phone: 9976399403

கணவர்கள் விற்கப்படும் கடை !!! அது என்னன்னா...!

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.
அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..
அது என்னன்னா...!
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.
இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."பச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"
முதல் தளத்துல அறிக்கை பலகைல,
"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு
இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா
இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு
இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.
மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு
அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.
நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.
ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..
ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான்
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது..

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ?


தெரிந்து கொள்வோம் :
பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ?
உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .
ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
------------------------------------------------------------------------
இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது...

இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தம்.



ஒரு மரம் அழிக்கப்படுவது நம் கண்களுக்கு தெரியும். ஆனால் அம்மரத்தை நம்பி வாழும் பல உயிர்கள் அழிவதை உணர்த்துகிறது இந்த நிழற்படம்.
இப்படத்தை பகிருங்கள். இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தமென்பதை உணர்த்துவோம்.

Tuesday, August 26, 2014

விவசாயத்திற்கு சூர்ய சக்தி மின் மோட்டார் பகிர்வு (SHARE) செய்திடுங்கள். விவசாயிகள் பயன் பெறட்டும்......


விவசாயத்திற்கு
சூர்ய சக்தி மின் மோட்டார்
பகிர்வு (SHARE) செய்திடுங்கள்.
விவசாயிகள் பயன் பெறட்டும்......

கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு.



என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால
குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …
ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.!
என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க …
நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.!
அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க …
நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.!
சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்டினு சொல்லி சிரிச்சாங்க …
நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!
என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க …
நான் கவர்னர் ஆனேன்.!
இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் … அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க… தன்னம்பிக்கையாலும் என்னோட கடின உழைப்பாலையும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.!
எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.!
அது அவர்களின் வியாதி நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது.!
- கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு.

ஆகஸ்ட் 26: அன்னை தெரசா பிறந்த தினம்


ஆகஸ்ட் 26: அன்னை தெரசா பிறந்த தினம்
இந்தியாவில் அவர் ஆற்றிய சேவைக்காக இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதளித்து பெருமைப் படுத்தியது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றிருக்கிறார்

Sunday, August 24, 2014

நண்பர்கள் கவனத்திற்கு. . யாரேனும் கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட எந்தவொரு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.


நண்பர்கள் கவனத்திற்கு. .
உங்களது உறவினர், நண்பர் யாரேனும் கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட எந்தவொரு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
இங்கு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள்.
்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
இங்கு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள்.
எந்த நிலையில் இருந்தாலும் 100% குணப்படுத்தி விடுகின்றனர்.
முகவரி :- N.S.நாராயணமூர்த்தி
நரசிபுரா, அனந்தபுரா,
சகாரா வழி, சிமோகா,
கர்நாடகா .
போன் -08183258033
முடிந்தவரை இதை பகிர்ந்து பலரது உயிர்காக்க உதவுங்கள் !
மேலும் இது சம்மந்தமான வீடியோ பதிவைப் பார்க்க கூகுளில் Shimoga cancer cure என்று டைப் செய்தால் முழு விபரமும் கிடைக்கப்பெறுவீர்கள்
Youtubeல் http://www.youtube.com/watch?v=76819p5OIJY

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?



சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?
இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதோர்க்கு......
தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது
முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம் ஆனால் இப்போது டைனிங் டேபிள் இது சரியா தவறா..?முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.
காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது.....!




இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழி தமிழ்?

இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழி தமிழ்?

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வடநாட்டு பா.ஜ.க எம்.பி பாராளுமன்றத்தில் கோரிக்கை!

இந்திய பாராளுமன்றதில் உள்ள தமிழக எம்பிக்கள் ஒருக்கணம் வியப்பில் மூழ்கினர். அதற்கு காரணம் பாஜகவின் ராஜ்ய சபை உறுப்பினர் தருண் விஜய் தமிழை இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று எழுப்பியதால் தான்.

தமிழ் மொழியின் அருமை பெருமைகளை பற்றி வடநாட்டு மக்கள் உணராது , அதற்கு உரிய இடம் அளிக்காதது அவர்களின் கடும் போக்கையே காட்டுகின்றது. ஏழ்கடல் தாண்டி தன்மனம் வீசி புகழ்கொண்டு வாழும் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழியாக பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறது என்று பாராளுமன்றத்தில் பறைசாற்றினார் தருண் விஜய். இவர் ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கை பரப்பும் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.வின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த தருண் விஜய் , தமிழ் மொழியில் வேலை செய்யும் திறன் பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் , சம்பள உயர்வு , பதவி உயர்வு கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி , அனைத்து இந்திய பல்கலைகழகங்களிலும் தமிழுக்கு சிறப்பு பிரிவு ஒரு உருவாகப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் , இந்திய நடுவண் அரசு , தமிழை அனைத்து வடநாட்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் பரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் தருண் விஜய்

தமிழ் அறிஞர்கள் பலரும் வடநாட்டு இந்துக் கோவில்களுக்கு வந்துள்ளனர். இப்படியாக தென்னாட்டையும் வடநாட்டையும் அவர்கள் இணைத்துள்ளனர். உண்மையான தேசிய ஒருமைப்பாட்டை தமிழ் கவியான பாரதியார் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவின் பண்பாட்டு புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் காரணியாக விளங்கும் தமிழ் மொழிக்கு உரிய மரியாதையும் , இடமும் இது வரை இந்த நாட்டில் கிடைக்க வில்லை என்பதையும் சுட்டி காட்டியுள்ளார் தருண். தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் போதெல்லாம் தருண் அவர்களை 'வணக்கம்' என்று கூறியே வரவேற்கிறார்.

தமிழுக்கு ஆதரவான தருண் விஜய்யின் இந்த கூற்றை தமிழக எம்பிக்கள் வரவேற்று உள்ளனர். குறிப்பாக சி.பி.ஐ. கட்சியின் து. ராஜா அவர்கள் , வடநாட்டு தலைவர்கள் இப்படி தமிழ் மொழியை ஆதரிப்பது உண்மையில் பாராட்டுதலுக்கு உரியது என்று பேசினார்.

இதில் என்ன வியப்பு என்றால் இது நாள் வரை இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், மற்ற மொழிகள் எல்லாம் அடிமை மொழியாக இருக்க வேண்டும் என்று எண்ணிய பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர் இப்படி ஒரு கருத்தை முன்வைத்துள்ளது தான்.

இது வடநாட்டு இந்துத்வா மக்களின் மனநிலை முதிர்ச்சியை காட்டுவதாக உள்ளது. தமிழை இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிய வடநாட்டு எம்பியை நிச்சியம் பாராட்டியே ஆகவேண்டும்.

காரணம் ++

இந்தி மொழி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்று மொழியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர் .

இந்தியாவை பொறுத்தவரை , தேசிய மொழி என்று எதுவும் கிடையாது . ஆனால் இந்தி தான் ஆட்சி மொழி அலுவல் மொழி. ஆங்கிலம் துணை அலுவல் மொழியாக உள்ளது .

உண்மையின் தருண் கோரியது போல தமிழ் மொழிக்கு ஆட்சி மொழி அதிகாரம் வந்து விட்டால் , தமிழ் மொழியை அழிவில் இருந்து காப்பாற்றி விடலாம்.

இங்குள்ள தமிழர்கள் பிழைப்புக்காக இந்தியை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது . தமிழ் மொழியிலேயே அனைத்து நடுவண் அரசு அலுவல்களையும் பார்க்கலாம் . நடுவண் அரசின் நாணயங்கள், அஞ்சல் தலைகள் , கடவுச் சீட்டுகள் , அடையாள அட்டைகள் அனைத்திலும் தமிழும் இடம் பெரும். இதை நியாயமாக தமிழர்கள் போராடி ஆட்சி மொழி அதிகாரத்தை பெற வேண்டும். அதற்காக போராட்ட முன்னெடுப்புகளை தமிழக கட்சிகள் இது வரை எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம் . ....

நம் தலைமுறையில் தமிழை இந்தியாவில் ஆட்சிமொழியாக்க பாடுபடுவோம். தமிழுக்கு உரிய இடத்தை பெற்றுத் தருவோம்.

என்ன தயாரா ...தமிழ் மக்களே ?

இதை பதிவு செய்ய காரணம்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு 14 வயதில்
4 நாட்கள் சிறையில் அடைபட்டு வருந்திய வருத்தம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை .....
நன்றி.
திரு தருண் விஜய்

வாழ்க வாத்தியார்கள்...



இந்த பதிலுக்கு 5 மார்க் போட்ட வாத்தியாருக்கு நல்லாசிரியர் விருது நிச்சயம்....
வாழ்க வாத்தியார்கள்...


நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...!

பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்று கொண்டிருந்தது.
ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக்
காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.
சிறுவன் முகத்தில் வியப்பு.
“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம்
என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார்.
சிறுவன் சொன்னான், ‘ இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.
நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...!
பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்று கொண்டிருந்தது.

ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக்
காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.

சிறுவன் முகத்தில் வியப்பு. 

“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம்
என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார்.

சிறுவன் சொன்னான், ‘ இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.

நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...!

அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!

அந்த காலம் தான் நன்றாக இருந்தது....!
பேருந்துகுள் கொண்டுவந்து நாளிதழ்கள் விற்பார்கள் .,
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்..,
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.,
கலைஞரின் அறிக்கைகளை தேடி படித்தார்கள்.,
எல்லா வீடுகளிலும் முதல் மரியாதை பாடல் ஒலித்தது.,
வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,
எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,
சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,
மழை நின்று நிதானமாக பொழியும்
,சாராய கடைகள் இருந்தன.,ஆனால் இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை.,
தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்.,
வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை.,
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது.,
சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,
முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,
பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்.,சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை.,
சுவாசிக்க காற்று இருந்தது.,குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,
தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்.,
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு அப்பாவிடம் அடி வாங்கினேன் ..,
மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே,ஆங்கிலம்.,
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால்
டவுசர்.,
கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,
நம்பிக்கைகளும்தான்.., மொத்தத்தில் மரியாதை இருந்தது.

Monday, August 18, 2014

முடிந்த அளவு பகிருங்கள் யாராவது ஒருவர் மாறலாம்.

முடிந்த அளவு பகிருங்கள் யாராவது ஒருவர் மாறலாம்.
படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல.....
படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல....
நான் காய்கறி வாங்க கடைக்கு சென்றேன்.. அங்க
எனக்கு முன் ஒரு பெரியவர் வாங்கி கொண்டிருந்தார்.
...
வெள்ளை வேட்டி(பளுப்பு நிறமாக மாறியது)..
சந்தனகலர் கட்டம் போட்ட சட்டை... கையில்
ஒரு கருப்பு குடை... காலில் இப்பவோ அப்பவோ என
உயிர் ஊசலாடி கொண்டிருக்கும் செருப்பு....
சில காய்கறிகளை வாங்கினார்.. கடையில் இருப்பவர்
விலை சொன்னதும் இடுப்பில் கட்டி இருந்த
பெல்ட்டிலிருந்த
ு பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார்....
கடைக்காரர் பாலிதீன் பை எடுத்தார்...
பெரியவர்: வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு...
கடைக்காரர்: பழைய பாலீத்தின் பைய ஏன்
தூக்கிட்டு திரியுறிக்க?..... உங்களுக்கு கொடுக்கிற
ஒரு பையில் நான் கொறஞ்சிடமாட்டேன்...
பெரியவர்: நீ பெரிய
கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும்... இந்த கருமத்தல
(பாலிதீன்) வீடு குப்பையாச்சி... ஊரு குப்பையச்சி...
நாடு குப்பையாச்சி... இந்த உலகமே குப்பையாச்சி...
மண்ணுல போட்டா மண்ண கெடுத்துடுது...
எரிச்சிவிட்டா காத்த கெடுத்துடுது...
இலவசமா கிடைக்குது.. பாவிக்க(பயன்படுத்த)
சுலபமா இருக்கு... அதுக்காக ஏன் நல்லா இருக்குறத
குப்பைல போடனும்.... அந்த பை எவ்வளவு காலம்
உழைக்குதோ அதுவரைக்கும்
பாவிச்சிட்டு இனி முடியாங்கும்
போது தூக்கி குப்பைல போடு....
இப்படி செஞ்சாலே கொட்டுற முக்காவாசி குப்பைங்க
கொறஞ்சிடும்...
பயன்படுத்திய பொருளை எடுத்துவச்சி திரும்ப
பயன்ப்டுத்துவதில் என்ன வெக்கம்? எனமுன
ுமுனுத்து கொண்டே சென்றார்..
சுட்டிவிரலில் ஊசியால் குத்தியதுபோல் சுள்
என்று இதயத்தில் ஒரு வலி....
படித்தவர்கள்..... பட்டத்துக்கு மேல் பட்டம்
வாங்கி குவித்தவர்கள்.... நுனிநாக்கில் ஆங்கிலம்
பேசுபவர்கள்... அனைத்து மொழி செய்திதாளையும்
தினந்தோறும் தவராமல்
படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள்....
இதில் எத்தனை பேர் இதை யோசிச்சிருப்பாங்க.....
எத்தனை பேர் பின்பற்றுவாங்க.....
பயன்படக்கூடிய பொருள்
குப்பைக்கு போவதை தடுத்தாலே... சுற்றுசூழல்
பிரச்சனை பாதியாக குறையும்
என்று அவருக்கு தெரிந்திருக்கிறது....
5 நிமிடத்திற்கு முன் சாதாரண பாமரனாக தெரிந்த
அவர்...
5 நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக தெரிந்தார்..
அன்றிலிருந்து நானும் அதனை பின்பற்ற
முயலுகிறேன்

உடல்: அறிந்ததும்...அறியாததும்

உடல்: அறிந்ததும்...அறியாததும்
* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.
* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.
* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.
* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.
* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.
* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.
* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.
* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.
* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.
* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.
* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.
* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.
* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.
* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.
உடல்: அறிந்ததும்...அறியாததும்

* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.

* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.

* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.

* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.

* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.

* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.

* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.

* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.

* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.

* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.

* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.

* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.

* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

காமராஜரின் ரிக்ஷா பயணம்

காமராஜரின் ரிக்ஷா பயணம்
********************************************
காமராஜர் ஒரு தடவை வெளியூர் போய்விட்டு எழும்பூர் ரெயில்நிலையத்தில் வந்து இறங்கினார். கிடுகிடுவென்று ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தவர், ஒரு சைக்கிள் ரிக்ஷாவை கூப்பிட்டு ஏறி உட்கார்ந்து திருமலைப்பிள்ளை சாலைக்கு போகணும் என்றார்.
தன் வீட்டு வாசலில் ரிக்ஷாவை நிறுத்தி எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டுக் கொடுத்தார். அப்போது ரிக்ஷாக்காரர் காமராஜரைப் பார்த்து, "வெளியூரா... காமராஜர் அய்யாவைப் பார்க்க வந்து இருக்கீங்களா?'' என்றார். காமராஜர் சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் விறுவிறுவென்று சென்று விட்டார்.
வாசலில் நின்றிருந்த காவலாளி ஓடிவந்து, "யோவ்... என்னய்யா நீ... அவர்தான் நம்ம முதல்-அமைச்சர்'' என்றார். ரிக்ஷாக்காரர் திகைத்துப் போய்விட்டார்.

உயிருள்ளவரை தமிழுக்காக் குரல் கொடுப்பேன் என உத்தர்கண்ட் எம்பி தருண் விஜய் கூறியுள்ளார்

உயிருள்ளவரை தமிழுக்காக் குரல் கொடுப்பேன் என உத்தர்கண்ட் எம்பி தருண் விஜய் கூறியுள்ளார். நேற்று மாநிலங்களவையில் தமிழ் மொழியின் சிறப்புகளை முன் வைத்துப் பேசிய தருண் விஜய், தமிழை வட மாநிலங்களில் விருப்பப் பாடமாகக் கொண்டு வர வேண்டும் என்றார்.
மேலும் திருவள்ளுவர் தினமான ஜனவரி 16-ம் தேதியை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மீது இத்தனைப் பற்று கொண்டுள்ள தருண் விஜய், தன் தமிழ்ப் பற்றுக்கான காரணத்தை இப்படிக் கூறியுள்ளார்: "உலகின் தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பை இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதை எனது வாழ்வின் சிறந்த தவமாகக் கருதுகிறேன். அந்த அளவுக்கு தமிழையும், தமிழ் படைப்புகளையும் நான் காதலிக்கிறேன். நான் தமிழ் மீது கொண்டுள்ள ஈர்ப்பு, நான் வாழும் காலத்தில் அதற்கு ஏதேனும் தொண்டு செய்ய வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனது விருப்பத்துக்கு எந்தத் தடையும் யாரும் விதித்ததில்லை. அதனால், உயிருள்ளவரை தமிழுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்!
வட மாநில மக்கள் தமிழைக் கற்க வேண்டும். தமிழ் மொழியில் உள்ள சிறப்புகளை அறிய வேண்டும் என்பதே என் ஆசை. தமிழ் மக்களை இந்தி கற்கச் சொல்லும் முன், வட மாநிலத்தவர் தமிழ் கற்க ஆரம்பிக்க வேண்டும், என்பதுதான் நான் சொல்வது," என்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும்.
உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும், உத்தரவுகளும் தமிழிலேயே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
பெரும்பாலான வட இந்திய கோர்ட்டுகளில் உள்ளூர் மொழியை தொடர்பு மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அப்படி இருக்கும்போது ஏன் தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கக் கூடாது.
வேற்று மொழி நீதிபதிகள் இருப்பதால் தமிழை ஆட்சிமொழியாக்க இயலாது என்ற வாதம் புரியவில்லை. ஏற்கக் கூடியதாக இல்லை. இந்தியாவில் அனைத்து மொழிகளுக்குமே சம மரியாதையும், கெளரவமும் அளிக்கப்பட வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று அனைத்துத் தமிழக கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதை மதிக்க வேண்டும், ஏற்க வேண்டும். இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தருண் விஜய் கூறியுள்ளார்.
தருண் விஜய் இதற்கு முன் ஆர்எஸ்எஸின் பஞ்சஜன்யா பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். இவருக்கு தமிழ் நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ட்விட்டர் பக்கத்திலும், தமிழ் மொழிக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் தருண்.