Wednesday, January 22, 2014

'நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்துக் காட்டுகிறேன்' என்று சவால் விடுத்த எஸ். பி. பாலகிருஷ்ணன்!!!!

சார் கொஞ்சம் சென்னைக்கு வாங்களேன் இங்க சுத்தம் செய்ய வேண்டிய குப்பை அதிகம் உள்ளது.

நல்லதை பாராட்டுவோம்......மாறு வேடத்தில் மதுரை எஸ். பி.!

மதுரை போலீஸார் லஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் மதுரை எஸ். பி. பாலகிருஷ்ணன் மிக உறுதியாக இருக்கிறார். லஞ்சப் புகார்கள் வந்தால் உடனுக்குடன் போலீஸார் மீது நடவடிக்கைகள் எடுத்து வரும் அவர் , சமீபகாலமாக நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரை , லஞ்சம்வாங்காமல் தடுக்கப் போராடி வருகிறார்.தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்று அந்தப் போலீஸார் எஸ்.பி. யிடம் தெரிவிக்க ,ஓப்பன் மைக்கிலேயே 'நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்துக் காட்டுகிறேன்' என்று சவால் விடுத்தார் எஸ். பி. பாலகிருஷ்ணன். அதேபோல் சில நேர்மையான போலீஸாரைத் தேர்வு செய்து , அவர்களை லாரியில்மப்டியில் பயணிக்கச் செய்தார். சிலரை உரிய ஆவணங்கள் இல்லாமல் டூ-வீலரில் பயணிக்கச் செய்தார். சில இடங்களில் எஸ். பி. யே ஹெல்மெட்அணிந்து கொண்டு பைக்கில் சென்றார். மூன்றுமுறை நடந்த இந்தச் சோதனைகளில் , போலீஸார்லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டனர். 'இந்தச்சோதனை தொடரும்' என்று எஸ். பி. அறிவித்திருப்பதால் ,நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் கண்விழி பிதுங்கி நிற்கின்றனர். என்னிடம் மனம் திறந்து பேசிய போலீஸ் ஜீப் டிரைவர் ஒருவர், "தினமும் 2 ஆயிரம்ரூபாயாவது இல்லாமல் ரோந்துப் பணியை முடிக்கமாட்டோம் ஸார்....இப்போது யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. லாரிக்குள் எஸ்.பி. இருப்பாரோ , டூ-வீலர் , லோடு ஆட்டோக்களில் எஸ். பி.வருவாரோ என்று படபடப்பாக இருக்கிறது. கேரளாவிற்கு மாடுகளைக் கால்நடையாக ஓட்டிக்கொண்டு போகிறவர்களிடம் கூட ஐம்பது , நூறு என்று வாங்குவோம். இப்போது மாடு ஓட்டுகின்ற வேடத்தில் கூட எஸ். பி. யோ, அவர் அனுப்பியபோலீஸோ வருகின்றார்களோ என்று பயமாகஇருக்கிறது" என்று சலித்துக் கொண்டார். முன்பெல்லாம் இந்த ரோந்துப் பணிக்கு போலீஸார் விரும்பி வருவார்கள். சட்ட-ஒழுங்கு டென்ஷன் இல்லை: கோர்ட்அலைச்சலில்லை சரியான ஷிப்ட் டூட்டி. போதாதக்குறைக்கு நல்ல வரும்படி என்பதால் பலரும் இந்தப் பணியைப் பெற முண்டியடிப்பார்கள்.இப்போது எஸ்.பி. பாலகிருஷ்ணனின் நடவடிக்கையால் ,'இங்கிருந்து கழண்டு கொ போதும்' என்ற மனநிலையிலேயே பல போலீஸார் இருப்பதாகக் கேள்வி.

#SK
சார் கொஞ்சம் சென்னைக்கு வாங்களேன் இங்க சுத்தம் செய்ய வேண்டிய குப்பை அதிகம் உள்ளது.நல்லதை பாராட்டுவோம்......மாறு வேடத்தில் மதுரை எஸ். பி.!மதுரை போலீஸார் ...லஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் மதுரை எஸ். பி. பாலகிருஷ்ணன் மிக உறுதியாக இருக்கிறார். லஞ்சப் புகார்கள் வந்தால் உடனுக்குடன் போலீஸார் மீது நடவடிக்கைகள் எடுத்து வரும் அவர் , சமீபகாலமாக நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரை , லஞ்சம்வாங்காமல் தடுக்கப் போராடி வருகிறார்.தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்று அந்தப் போலீஸார் எஸ்.பி. யிடம் தெரிவிக்க ,ஓப்பன் மைக்கிலேயே 'நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்துக் காட்டுகிறேன்' என்று சவால் விடுத்தார் எஸ். பி. பாலகிருஷ்ணன். அதேபோல் சில நேர்மையான போலீஸாரைத் தேர்வு செய்து , அவர்களை லாரியில்மப்டியில் பயணிக்கச் செய்தார். சிலரை உரிய ஆவணங்கள் இல்லாமல் டூ-வீலரில் பயணிக்கச் செய்தார். சில இடங்களில் எஸ். பி. யே ஹெல்மெட்அணிந்து கொண்டு பைக்கில் சென்றார். மூன்றுமுறை நடந்த இந்தச் சோதனைகளில் , போலீஸார்லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டனர். 'இந்தச்சோதனை தொடரும்' என்று எஸ். பி. அறிவித்திருப்பதால் ,நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் கண்விழி பிதுங்கி நிற்கின்றனர். என்னிடம் மனம் திறந்து பேசிய போலீஸ் ஜீப் டிரைவர் ஒருவர், "தினமும் 2 ஆயிரம்ரூபாயாவது இல்லாமல் ரோந்துப் பணியை முடிக்கமாட்டோம் ஸார்....இப்போது யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. லாரிக்குள் எஸ்.பி. இருப்பாரோ , டூ-வீலர் , லோடு ஆட்டோக்களில் எஸ். பி.வருவாரோ என்று படபடப்பாக இருக்கிறது. கேரளாவிற்கு மாடுகளைக் கால்நடையாக ஓட்டிக்கொண்டு போகிறவர்களிடம் கூட ஐம்பது , நூறு என்று வாங்குவோம். இப்போது மாடு ஓட்டுகின்ற வேடத்தில் கூட எஸ். பி. யோ, அவர் அனுப்பியபோலீஸோ வருகின்றார்களோ என்று பயமாகஇருக்கிறது" என்று சலித்துக் கொண்டார். முன்பெல்லாம் இந்த ரோந்துப் பணிக்கு போலீஸார் விரும்பி வருவார்கள். சட்ட-ஒழுங்கு டென்ஷன் இல்லை: கோர்ட்அலைச்சலில்லை சரியான ஷிப்ட் டூட்டி. போதாதக்குறைக்கு நல்ல வரும்படி என்பதால் பலரும் இந்தப் பணியைப் பெற முண்டியடிப்பார்கள்.இப்போது எஸ்.பி. பாலகிருஷ்ணனின் நடவடிக்கையால் ,'இங்கிருந்து கழண்டு கொ போதும்' என்ற மனநிலையிலேயே பல போலீஸார் இருப்பதாகக் கேள்வி

No comments:

Post a Comment