Thursday, May 23, 2013
நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வோம்..!
நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வோம்..!
கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.
* இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.
* இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.
* இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.
* நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.
* நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.
* ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.
* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.
* மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.
* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.
* நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.
* உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000
* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.
* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.
* இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.
* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.
* பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.
* மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது. *
தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.
* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.
* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.
* நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.
* மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.
* பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்.
"முடிந்தால் உதவுங்கள்!!!!"
மெடிக்கல் கட்-ஆஃப் 197/200, மெடிக்கல் சீட் நிச்சயம் ஆனால் படிக்க முடியுமா? +2வோடு கலைந்துவிடுமா இந்த கனவு, மருத்துவர் ஆக முடியுமா இந்த பெண், நீங்கள் உதவினால் ஆகலாம். படித்துவிட்டு உதவுங்கள், இந்த செய்தியை பகிருங்கள்
பெயர் : காயத்ரி
வயது : 17
ஊர் : சின்ன மருதூர் (நாமக்கல் அருகில்)
சாதி (மன்னிக்கவும்) அருந்ததியர் (SC). இந்த இடத்தில் இந்த விவரம் அவசியமானதால் பகிரவேண்டியதாயிற்று.
தொழில் : விவசாய தினக்கூலி வேலை
தாய் : சுமதி (தினக்கூலி வேலை)
தந்தை : செல்வராஜ் (தினக்கூலி வேலை)
மதிப்பெண் (உயிரியல்) : 199
மதிப்பெண் (வேதியல்) : 198
மதிப்பெண் (கணிதம்) : 197
மதிப்பெண் (இயற்பியல்) : 192
காயத்ரியின் மருத்துவ CUTOFF : 197/200
கடந்த வருட அரசு மருத்துவ கல்லூரி CUTOFF : 188.25/200
சிறு வயது லட்சியம் : மருத்துவர் ஆவது.
சமீபத்திய லட்சியம் : மகப்பேறு மருத்துவர் ஆகி தன்னைப் போன்றவர்க்கு உதவுவது.
தற்போதைய நிலை : அரசு மருத்துவக்கல்லூரிகளில் இலகுவாய் இடம்பிடிக்கும் தருவாயில் +2 வோடு படிப்பை நிறுத்தி நாள் செலவுக்கே தினக்கூலி வேலைக்கு போகும் நிலை.
தொலைபேசி : 98436 87990
நம்பிக்கை : கல்வி
பயம் : +2 வோடு கல்வி நின்று கனவு கலையுமோ என்று.
சிறு வயதில் அதிகமாய் நோய்வாய்ப்பட்டு வறுமையின் காரணமாய் பல நேரங்களில் மருத்துவ உதவி கிடைக்காமல் போனது இனி யாருக்கும் நடக்கக்கூடாது என்று எண்ணி மருத்துவராகி தன்னைச் சுற்றி வறுமையில் வாடுபவர்க்கு சேவை செய்ய நினைக்கும் காயத்ரி போன்றோரது கனவை நனவாக்குவது நம்மெல்லோரின் கடமை...
வெறும் வார்த்தை... வாசிப்போடு நின்று விடாது... உங்களால் முடிந்த உதவியை... எவ்வளவு சிறிய தொகையாயினும் அவர் படிப்புக்காக செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்...
அவரை தொடர்பு கொள்ள... 98436 87990 (அவரிடம் ஒரு முறை பேசி சரிபார்த்துவிட்டு பிறகு பணம் செலுத்தவும்)
வங்கிக்கணக்கு விபரம்
S.GAYATHRI
A/C NO 6128812063
BANK INDIAN BANK
BRANCH JEDAR PALAYAM
பணம் அனுப்பியிருந்தால் நீங்கள் விரும்பினால் இங்கே பகிருங்கள், இது மற்றவர்களுக்கும் பணம் அனுப்ப தூண்டுகோலாக இருக்கும்
via Sumathy Krishnan.
Tuesday, May 21, 2013
விவசாயம் செய்யும் பட்டதாரி இளைஞர்களில் ஒருவரான ஜெகன்னாதன் அவர்களின் அலைபேசி எண் : 99626-11767
50 சென்ட்... மாதம் ரூ.30 ஆயிரம்... பட்டதாரி இளைஞர்களின் பசுமைப் புரட்சி .!
விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து... பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்... பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்... ஆச்சர்யம்தானே!
சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொறியாளர்கள் என பல துறையைச் சேர்ந்த இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது, இயற்கை விவசாயம். ‘நல்ல கீரை’ என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி, பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
நன்றி பசுமை விகடன்
விவசாயம் செய்யும் பட்டதாரி இளைஞர்களில் ஒருவரான ஜெகன்னாதன் அவர்களின் அலைபேசி எண் : 99626-11767
எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து!
எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து!
எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.
வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.
இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க நடை பயிற்சி, உடற்பயிற்சின்னு உடல் வருத்தக்கிறாங்க.
இன்னொரு பக்கம் ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ ன்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு,எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு.
ஆனா, இவ்வளவு சிரமம் இல்லாம, உடல் எடை குறைக்க முடியும். அது ஒரு காலத்துல கடிச்சி, ருசிச்ச சாப்பிட்ட இனிப்பான சமாச்சாரம்தான்.
அவுஸ்திரேலியா நாட்டில் இருக்கிற மெல்போர்ன் உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து ஒரு ஆய்வு செய்துள்ளனர்.
அதன்படி, குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை
கரையச் செய்கிறது.
இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும்.
பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை
ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —
உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....
via - I Love MY Jaffna
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்கள்,ம ற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.
திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.
இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை(நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்.
நன்றி : தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
Subscribe to:
Posts (Atom)