Sunday, November 16, 2014

புதிய சதுரங்க வேட்டை: மெடிக்கல் காலேஜை OLX மூலம் ரூ 700 கோடிக்கு விற்க முயன்ற 3 கில்லாடிகள் கைது

புதிய சதுரங்க வேட்டை: மெடிக்கல் காலேஜை OLX மூலம் ரூ 700 கோடிக்கு விற்க முயன்ற 3 கில்லாடிகள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலெட்சுமி மெடிக்கல் கல்லூரியியை இணையதளம் மூலம் விற்க முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உங்க வீட்டுல இருக்கிற பழைய பொருட்களை விற்க ஓ.எல்.எக்ஸ் இருக்கு அப்லோட் பண்ணுங்க என அடிக்கடி டிவியில் விளம்பரம் அடிக்கடி வந்துபோகிறது. இந்த ஓ.எல்.எக்ஸ் மூலம் ஒரு மருத்துவகல்லூரியையே விற்க முயன்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கல்வி நிறுவனமாக விளங்கும் தனலெட்சுமி கல்வி நிறுவனம், திருச்சி, பெரம்பலூர், சென்னை என 16க்கும் மேற்பட்ட பொறியியல், மருத்துவக்கல்லூரிகள், கலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறது. இதில் தனலெட்சுமி மருத்துவக்கல்லூரியை 700 கோடிக்கு விற்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் இணையதளத்தில் (olx.in) விளம்பரம் வந்தது. இதனால் கல்லூரிக்கு எண்ணற்ற விசாரணைகள் வரவே இது தொடர்பாக தனலெட்சுமி மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் பெரம்பலூர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகன், கண்ணன் மகன் கதிரவன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். இணையதளம் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரியை விற்க முயன்ற சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய சதுரங்க வேட்டை: மெடிக்கல் காலேஜை OLX மூலம் ரூ 700 கோடிக்கு விற்க முயன்ற 3 கில்லாடிகள் கைது

No comments:

Post a Comment