விவசாயி கண்டுப்பிடித்த
எலுமிச்சை ரகம்!
திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அந்தோணிசாமி என்ற எலுமிச்சை ரகம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார்

‘‘நான் பார்த்தவரை எலுமிச்சை ரகங்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்க
முடியாமலும், எளிதில் பட்டுப் போறதாகவும் இருந்துச்சு. 45 வருஷமா எலுமிச்சை
சாகுபடி பண்ணிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தில கொத்துக்கொத்தா காய்க்குற
நாட்டு எலுமிச்சையில 13 ரகங்களைத் தேர்ந்தெடுத்தேன்.
அதுல இருந்து ஒண்னை எடுத்துதான் இந்த புதிய ரகத்தை உருவாக்கினேன். இது இரண்டே வருஷத்துல காய்ப்புக்கு வந்துடுது. இதை மதுரை சேவா அமைப்பைச் சேர்ந்த விவேகானந்தன் அகமதாபாத்துல இருக்கற ‘தேசிய அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்க’த்துக்கு அனுப்பி வெச்சாரு. அவுங்க இதைப் பல கட்டமா சோதிச்சுப் பாத்தப்ப, இந்த ரகத்துல எல்லா காய்களும் ஒரே சீரா இருந்ததைப் பாத்து பிரமிச்சுப் போயிட்டாங்களாம்’’ என்கிறார் அந்தோணி சாமி!
விவசாயப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் லட்சக்கணக்கில் செலவு செய்து, அவ்வப்போது புதிய ரகப்பயிர்களை அறிமுகப்படுத்தி வருவது வழக்கம். ஆனால், சில விவசாயிகள், தங்களுடைய அனுபவத்தை வைத்தே, பெரிதாக செலவேதும் இல்லாமல், புதுப்புது ரகங்களை சர்வசாதாரணமாக உருவாக்கி விடுவதுண்டு. இத்தகைய ரகங்களுக்கு முன்பாக... விஞ்ஞானிகளின் ரகங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு.
அந்தவகையில், ‘புளியங்குடி’ அந்தோணிசாமி உருவாக்கியுள்ள புதிய ரக எலுமிச்சையை, தென் மாவட்ட விவசாயிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுறார்கள். காரணம், குறுகிய காலத்தில், இரசாயன உரம் இல்லாமல் நல்ல விளைச்சல் கொடுக்கிறது.
பசுமை விகடன் இதழிலிருந்து....

No comments:
Post a Comment