Tuesday, March 12, 2013

மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

ஓட்டுனருக்குகளுக்கு  தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Thank info
Puthiya Thalaimurai

தமிழனை அவமானபடுத்தியவர்களை சந்திக்க மறுத்த காமராசர்

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜோன்சன்ஐ சந்திப்பதற்காக அறிஞர் அண்ணா ஒருமுறை அமெரிக்க சென்றாராம்..அங்கே பலமணி நேரம் காக்க வைக்கபட்ட பின்னர் கூட அண்ணாவுக்கு அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையாம்....பின்னர் தமிழகம் திரும்பிவிட்டார்.... சில ஆண்டுகள் பின்னர் லிண்டன் ஜோன்சன் இந்தியாவுக்கு விஜயம் செய்தாரம்... அவர் சந்திக்க விரும்புபவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடித்த பெயர் கர்மவீரர் காமராஜர்....அப்பொழுது அமரிக்க ஜனாதிபதியுடன் நின்று புகைப்படம் எடுக்கவே பல இந்திய தலைவர்கள் விரும்பினார்கள்..... ஆனால் காமராஜர் தன்னால் அவரை சந்திக்க முடிக்க யாது என்று மறுத்துவிட்டாராம்.....எல்லோருக்கும் வியப்பு..ஏன் என்று வினவியபொழுது அவர் சொன்ன பதில் '' ஒரு தமிழனான அண்ணாவை சந்திக்காமல் அவமானபடுத்திய அவரை சந்திஎன்னால் முடியாது....ஏன் என்றால் நானும் ஒரு தமிழன்..'' அதனால் தான் காங்கிரஸ் காரர் என்றாலும் அவரை பச்சை தமிழன் என்று தமிழர்கள் பெருமையாக பெசுகின்றர்கள்........தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்வதற்கு துணைபோய் துரோகத்தின் சின்னமாய் விளங்கும் இன்றைய காங்கிரஸ்காரர்கள் எங்கே எதிர் கட்சியாக இருந்தாலும் தமிழனை அவமானபடுத்தியவர்களை சந்திக்க மறுத்த காமராசர் எங்கே?
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜோன்சன்ஐ சந்திப்பதற்காக அறிஞர் அண்ணா ஒருமுறை அமெரிக்க சென்றாராம்..அங்கே பலமணி நேரம் காக்க வைக்கபட்ட பின்னர் கூட அண்ணாவுக்கு அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையாம்....பின்னர் தமிழகம் திரும்பிவிட்டார்.... சில ஆண்டுகள் பின்னர் லிண்டன் ஜோன்சன் இந்தியாவுக்கு விஜயம் செய்தாரம்... அவர் சந்திக்க விரும்புபவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடித்த பெயர் கர்மவீரர் காமராஜர்....அப்பொழுது அமரிக்க ஜனாதிபதியுடன் நின்று புகைப்படம் எடுக்கவே பல இந்திய தலைவர்கள் விரும்பினார்கள்..... அனால் காமராஜர் தன்னால் அவரை சந்திக்க முடிக்க யாது என்று மறுத்துவிட்டாராம்.....எல்லோருக்கும் வியப்பு..ஏன் என்று வினவியபொழுது அவர் சொன்ன பதில் '' ஒரு தமிழனான அண்ணாவை சந்திக்காமல் அவமனபடுதிய அவரை சந்திஎன்னால் முடியாது....ஏன் என்றால் நானும் ஒரு தமிழன்..'' அதனால் தான் காங்கிரஸ் காரர் என்றாலும் அவரை பச்சை தமிழன் என்று தமிழர்கள் பெருமையாக பெசுகின்றர்கள்........தமிழர்களை கொத்து கொத்தாக கொல்வதற்கு துணைபோய் துரோகத்தின் சின்னமாய் விளங்கும் இன்றைய காங்கிரஸ்காரர்கள் எங்கே எதிர் கட்சியாக இருந்தாலும் தமிழனை அவமனபடுதியவர்களை சந்திக்க மறுத்த காமராசர் எங்கே?

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்..

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

மதுரை , மேலமாசி வீதி பெருமாள் கோவில் வீதி சேர்ந்தவர்கள் , அல்லது இந்த படத்தில் உள்ளவர்கள் மாரியம்மாள் (குழந்தையுடன் இருப்பவர்) , ராக்காயி (சிகப்பு உடையில் இருப்பவர்)
இவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவர்களுடைய பாட்டி சரஸ்வதி என்பவர் கோவையில் தெரேசா காப்பகத்தில் இருக்கிறார் . தன உறவுகளை பிரிந்ததால் மிகவும் துன்பத்தில் உள்ளார். அந்த பாட்டியிடம் இருந்த புகைப்படம் இது , இந்த பாட்டியின் உறவினர்களோ அல்லது இந்த பாட்டியின் உறவினர்களை தெரிந்தவர்களோ உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்....அலைபேசி எண் ((Magi Mahendiran-9843344991 —))

தயவுசெய்து share செய்யுங்கள்.....

தமிழச்சி வீர மங்கை வேலு நாச்சியார்

#இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண் போராளி யார் என்று கேட்டால் ஜான்சி ராணி என்பீர்கள்.ஆம் வட ஹிந்திய பாடத்திட்டமும்,ஜீ-தமிழ் தொலைகாட்சியும் நமக்கு அப்படி தான் சொல்லி கொடுத்துள்ளது.

ஜான்சி ராணி காலத்துக்கு முன்னரே (கி.பி 1772) தனது ராஜ்யத்தை இழந்து மீண்டும் அடைந்த போராடி வென்ற தமிழச்சி வீர மங்கை வேலு நாச்சியார் ஆவார்.முதல் தற்கொலைப்படை பெண் போராளி கூட குயிலி என்ற தமிழ் பெண்ணே ஆவார்.

(பின்னாளில் வேலு நாச்சியாருக்கு துணையாய் இருந்த மருது சகோதரர்களின் வம்சத்தில் ஒருவர் கூட பிழைத்திருக்க கூடாது என விரும்பிய வெள்ளையர்கள் சிறுவர் முதற்கொண்டு அனைவரையும் கொன்றனர்)

Thanks - Boopathy Murugesh
‎#இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண் போராளி யார் என்று கேட்டால் ஜான்சி ராணி என்பீர்கள்.ஆம் வட ஹிந்திய பாடத்திட்டமும்,ஜீ-தமிழ் தொலைகாட்சியும் நமக்கு அப்படி தான் சொல்லி கொடுத்துள்ளது.

ஜான்சி ராணி காலத்துக்கு முன்னரே (கி.பி 1772) தனது ராஜ்யத்தை இழந்து மீண்டும் அடைந்த போராடி வென்ற தமிழச்சி வீர மங்கை வேலு நாச்சியார் ஆவார்.முதல் தற்கொலைப்படை பெண் போராளி கூட குயிலி என்ற தமிழ் பெண்ணே ஆவார்.

(பின்னாளில் வேலு நாச்சியாருக்கு துணையாய் இருந்த மருது சகோதரர்களின் வம்சத்தில் ஒருவர் கூட பிழைத்திருக்க கூடாது என விரும்பிய வெள்ளையர்கள் சிறுவர் முதற்கொண்டு அனைவரையும் கொன்றனர்)

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...! —

via - Padmini Sridharan.

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார்- மின்சார ரயிலில் வீட்டுக்குச் சென்றார் நீதிபதி சந்துரு

சென்னை ஐகோர்ட் நீதிபதி சந்துரு, நேற்று ஓய்வு பெற்றார். அதற்கு முன், சொத்து விவரங்களை, தலைமை நீதிபதியிடம் அளித்தார். மின்சார ரயிலில், வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். சக வழக்கறிஞர்கள், அவரை, வழியனுப்பி வைத்தனர்.கடந்த, 2006ம் ஆண்டு, ஐகோர்ட் நீதிபதியாக சந்துரு நியமிக்கப்பட்டார். 62 வயது பூர்த்தியாவதைத் தொடர்ந்து, நேற்று அவர் ஓய்வு பெற்றார். 80 மாதங்களில், 96 ஆயிரம் மனுக்கள் மீது, உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

நேற்று காலையில், ஐகோர்ட்டுக்கு வந்த உடன், பதிவுத்துறையிடம் காரை ஒப்படைத்தார். பின், கோர்ட் ஹாலில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். வழக்கறிஞர்கள், நேற்று கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இருந்தாலும், அவர் முன் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை விசாரித்தார். பிற்பகலிலும், கோர்ட் ஹாலில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார்.பிரிவு உபசார நிகழ்ச்சி எதுவும் வேண்டாம் என, அவர் மறுத்து விட்டதால், அவரது சேம்பரில், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

வழக்கு விசாரணையை முடித்து விட்டு, மாலையில், சேம்பருக்கு திரும்பினார். அப்போதும், திரளாக வழக்கறிஞர்கள் கூடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.சேம்பருக்கு வரும் முன், தலைமை நீதிபதி அகர்வாலை, அவரது அறையில் சந்தித்தார். தனது சொத்து விவர பட்டியலை, தலைமை நீதிபதியிடம் அளித்தார். பின், சேம்பருக்கு வந்தார். கருப்பு கோட், கவுனை கழற்றி விட்டு, கதர் சட்டை, வேஷ்டி உடன், சேம்பரில் இருந்து புறப்பட்டார். வழக்கறிஞர்கள் ஏராளமானோர், அவருடன் வந்தனர்.பத்திரிகை நிருபர்கள் அறைக்கு, நீதிபதி சந்துரு வந்தார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பின், அவரது சக வழக்கறிஞர்கள் நண்பர்களுடன், பாரிமுனையில் உள்ள ஒரு ஓட்டலில், காபி குடித்து விட்டு, கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்தார். ஏற்கனவே, "சீசன் பாஸ்' வாங்கி வைத்திருந்தார். ரயிலில் புறப்பட்டு, வீட்டுக்கு சென்றார்.

நிருபர்களின் கேள்விகளுக்கு, நீதிபதி சந்துரு அளித்த பதில்:

கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில், வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது. இதனால், அவர்களது கட்சிக்காரர்கள் தான் பாதிக்கப்படுவர். அதேபோல், அடிக்கடி "வாய்தா' வாங்கக் கூடாது. வழக்கறிஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வர வேண்டும்.எனது கடமையை ஆற்றியதில், நான் திருப்தி அடைகிறேன்.

சுப்ரீம் கோர்ட்டில், "பிராக்டீஸ்' செய்ய போவதில்லை. ஒரு வழக்கறிஞராக, பொது வாழ்வில் ஈடுபடுவேன். சமூகப் பிரச்னைகளுக்கு போராடுவேன். அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை.நீதிபதிகள் நியமனம், வெளிப்படையாக நடக்க வேண்டும். ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஆண்டு தோறும், சொத்துக் கணக்கை, தலைமை நீதிபதியிடம், மற்ற நீதிபதிகள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு, நீதிபதி சந்துரு கூறினார்.

இந்த மாதத்துக்குள் அரசு பங்களாவை, காலி செய்து விட்டு, தனது சொந்த "பிளாட்'டில் குடியேறுகிறார். புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்காக, நண்பர்களுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ஏப்., 1 முதல், தனது குடியிருப்பு, என, அபிராமபுரம் வீட்டு முகவரியை குறிப்பிட்டுள்ளார்.

Pic: Dinamalar(via) Gauthaman Ds Karisalkulaththaan