Tuesday, April 28, 2015

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.

 
வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.
எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!
வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!
நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!

Friday, January 2, 2015

MakkhiChoose பயன்படுத்தி பாருங்களேன், ரம்யா இதை ஏன் "அருமையான நேரம் மற்றும் பணம் சேமிக்கும் கருவி" என்கிறார் என்று உணர்வீர்கள்

ரம்யா இன்று மிக மகிழ்ச்சியாக உள்ளார். Samsung LED TV வாங்கும்பொழுது, MakkhiChoose பயன்படுத்தி, அவர் 44649 ரூபாய் சேமித்துள்ளார்!
நீங்கள் எந்த இணையதளத்தில் (Flipkart, Amazon, Snapdeal, Myntra, Jabong) வாங்கிக்கொண்டு இருந்தாலும் சரி, அதே பொருள் வேறு தளத்தில் மலிவாக கிடைக்குமா என்று உங்களுக்கு சொல்லும். இன்னும் அருமையான விஷயம் என்ன தெரியுமா! ஒரு பொருளின் விலை கணிசமாக வீழ்ச்சி அடையும்பொழுது, மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு தெரிவிக்கும்.
MakkhiChoose பயன்படுத்தி பாருங்களேன், ரம்யா இதை ஏன் "அருமையான நேரம் மற்றும் பணம் சேமிக்கும் கருவி" என்கிறார் என்று உணர்வீர்கள்



ரூபி ஆன் ரயில்ஸில் ப்ரோகிராம் எழுதுவதைப் போலவே மகிழ்ச்சியான சவால்கள்.



மழையோடு புத்தாண்டு தொடங்கியது. தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் எந்த புத்தகத்தை எந்த சில்லுன்டி எரித்தார் என்று கவணிக்கவில்லை. நேற்று ஒசூரின் குளிர் வீடு திரும்பியதை உணர்த்தியது.
நான் வளர்த்த கீரைகள் அறுவடைக்கு தயாராக இருக்கின்றன. இயற்கை விவசாயமெல்லாம் வேலைக்காதுங்க, அது மேல்தட்டு மக்களுக்கு மட்டும் தான், என்று ஒசூரில் ஒரு பள்ளியின் காரியதரிசி தொடர்ந்து என்னை எரிச்சல் படுத்தியதால், "நெலத்த குடுய்யா முதல்ல" என்று வீம்புக்கு இறங்கி விவசாயம் செய்தேன். நாற்பது சென்ட் நிலத்தில், கீரை விதைகளுக்கான செலவு ஆயிரம் ருபாய். தினமும் நூறு கட்டு அறுப்பதாக திட்டம். சென்ற வருடம் கொடுத்த இயற்கை உரங்கள் மண்ணை வளப்படுத்தி இருந்ததால், உரங்கள் எதுவும் இடவில்லை. பள்ளிக்கூடத்திலேயே அத்தனையும் விற்க முடியும். பெரிய செலவு இல்லாமல் தொடர்ந்து வருமானம் வரும் என்று விளக்கிச் சொல்லி, வர்ற காச நீங்களே வச்சு கோயில் கட்டுங்கப்பா! என்று சொல்லி கொஞ்சம் காய்கறிகளை உற்பத்தி செய்து வேலையாட்களுக்கு பயிற்சி அளித்து விலகிக்கொண்டேன்.
என் கவனம் முழுவதும் aquaponics பரிசோதனையில் நிற்கிறது. விளைச்சலும் கிட்டத்தட்ட எதிர்பாத்த அளவுக்கு உள்ளது. பூச்சி புழு இல்லாத ஆர்கானிக் காலிஃப்ளவர், நாட்டு பாகற்காய், பாலக்கீரை, தக்காளி செடிகளை காண்க. இனி இதன் விரிவாக்கத்தை கல்லுப்பட்டியில் பாமயன் பண்ணையில் நிகழ்த்த திட்டம். சில சவால்கள் இருக்கின்றன. தினமும் 10 கிலோ மண்புழுக்கள் மற்றும் ஐந்து கிலோ கருஞ்சிப்பாய் ஈக்களை உற்பத்தி செய்து மீனுக்கு உணவாக உற்பத்தி செய்வது. மேலும் பொருளாதார முன்மாதிரிகளை உருவாக்குவது என்று பல சவால்கள். ஆனாலும் ரூபி ஆன் ரயில்ஸில் ப்ரோகிராம் எழுதுவதைப் போலவே மகிழ்ச்சியான சவால்கள்.

நமது மூளையைப் போல் ஓர் மாபெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை

நமது மூளையைப் போல் ஓர் மாபெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை


 நமது மூளையைப் போல் ஓர் மாபெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை என்பதைப் பல அறிவு டோஸ்களைப் படித்து அறிந்து இருப்பீர்கள். இன்றைய அறிவு டோஸில் கூட நமது மூளையைப் பற்றிய வேறு மிகவும் வியப்பூட்டும் தகவல்களை அறியத் தருகிறேன்.
1. நீங்கள் சோர்வாக இருக்கும் பொழுது உங்கள் மூளை புதிய கோணங்களில் சிந்தித்தலை அதிகமாக நிகழ்த்துகிறது. சோர்வாக இருந்தால், கவனம் அதிகமாகச் சிதறும். உங்களது நோக்கம் ஒரே கோணத்தில் நிலைத்திருக்காது. இந்த நேரம் நீங்கள் புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப் புதிய செயல்முறைகளை உருவாக்க முடியும்.
2. மன அழுத்தம் மூளையின் அளவை சுருக்கி சிறிதாக்கி விடும்.
3. மூளை பல பணிகளை ஒரே நேரம் செய்வது சாத்தியமற்றது. பல விதமான பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் பொழுது, தவறு வீதம் 50க்கு உயரும். மேலும் அவ்வேலைகளை செய்து முடிக்க இரண்டு மடங்கு அதிகமான நேரம் எடுக்கும்.
4. குட்டித்தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறனை நாளுக்கு நாள் மேம்படுத்த உதவும். நாம் தூங்கும் போது மூளையின் வலது பக்கம் "ஒழுங்குப்படுத்தல்" கடமைகளை கையாளுகிறது. அதாவது, இடது பக்க மூளை ஓய்வு எடுக்கும் பொழுது, வலது மூளை, அன்றைய தினத்தில் நடந்த செய்திகளை நீண்ட கால ஞாபகச் சேமிப்பில் மாற்றி, அந்த நினைவுகளை உறுதிப் படுத்தும்.
5. தியானம் மூளையை அமைதிப் படுத்தும். மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும்.
6. நாம் தவறுகள் செய்யும் மனிதர்களையே அதிகம் விரும்புகிறோம். இந்த முடிவை ஆராய, உளவியலாளர் எலியட் ஆரோன்சன் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். அதில் ஒரு பதிவு செய்த விநாடி வினா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் தவறுதலாகத் தனது தேநீர் கோப்பையை உடைத்துவிட்டார். மக்களிடம் எந்தப் போட்டியாளருக்கு உங்கள் ஆதரவு எனக் கேட்ட பொழுது, கோப்பையை உடைத்தவரையே மக்கள் அதிகம் விரும்புவதாகத் தெருவித்தனர்.
நமது மூளை பற்றிய எவ்வளவோ விடயங்கள் இன்னும் ஆராய உள்ளது, நண்பர்களே. ஆனால் நமது மூளை ஓர் அதிசயம் என்பதில் ஒரு நாளுமே சந்தேகம் இருக்கப் போவதில்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.

ஐ.டி. நிறுவனங்களின் அக்கிரமங்கள்: இப்படி பண்றீங்களேம்மா!

ஐ.டி. நிறுவனங்களின் அக்கிரமங்கள்: இப்படி பண்றீங்களேம்மா!


எல்லா கதைகளுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். ஐ.டி நிறுவனங்களைப் பற்றி நான் முதலில் புரிந்துகொள்ளத் தொடங்கியது கல்லூரியின் நான்காம் வருடத்தில்தான்.
கேம்பஸ் இண்டர்வியூவுக்கு பல கனவுகளுடன் ஐ.டி நிறுவனங்களின் செயல்பாடு எப்படி? எந்தெந்த டெக்னாலஜியில் நம்மை வளர்த்துக் கொண்டால் உதவிகரமாக இருக்கும் என்றெல்லாம் நாங்கள் தேடித் தேடி படித்து வந்தோம். சரி, இப்போது இதுதான் நமது பாதை என்று ஆகிவிட்டது; இனி இந்த பயணத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் முன்பே சிலர் சிந்திக்கத் தொடங்கினர்.
கல்லூரி காலம் முடியும் முன்னரே நிறைய பேருக்கு நிறுவனத்தில் சேர்வதற்கான அழைப்புக் கடிதம் (Call Letter) வந்தது.
ஜூலை மாதத்தின் கடைசியில் வரிசை வரிசையாக நண்பர்கள் சேரத் தொடங்கினர். ஆகஸ்ட் மாதத்தில் எனது பயணமும் தொடங்கியது, ஆனால் கால் லெட்டருக்குக் காத்திருந்தபடியே சில நண்பர்கள் தங்கள் நாட்களை கடத்தினர்.
முதலில் 'நீங்க என்னடா அதுக்குள்ள வேலைக்கு சேர்ந்துடீங்க கொஞ்ச வாழ்க்கையையும் வாழுங்க' என்றெல்லாம் கேலி செய்து வந்தனர். நாட்கள் நகர நகர எனது ட்ரெய்னிங் முடிந்தது, ப்ராஜெக்ட்டிற்காக நான் காத்திருந்த நாட்களில் எனது நண்பன் அவனது கால் லெட்டருக்காகக் காத்திருந்தான்.
பெஞ்ச் படலம்
டிசம்பர் மாதம் ஐ.டி. நிறுவனங்களின் இலையுதிர் காலம் வெளிநாட்டில் எங்கும் கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டம் என்பதால் ப்ராஜெக்ட் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இருந்தாலும் தினந்தோறும் அலுவலகம் வந்தபடி வாய்ப்புகள் தேடிக் காத்திருந்தேன் நண்பர்களுடன்.
இந்தக் காத்திருக்கும் படலத்தின் பெயர் 'பென்ச்' (Bench). ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் ப்ராஜெக்ட்டும் கிடைத்தது. அன்றும் நண்பன் தனது ப்ராஜெக்டிற்காக காத்திருந்தான். கல்லூரியில் பயோ டெக்னாலஜி படித்த அவன் கேம்பஸ் இன்டர்வியூ'வில் மூன்று நிறுவனங்கள் நடத்திய இன்டர்வியூவையும் அசத்தி ஒரே நாளில் மூன்று வேலைகளை வாங்கினான். மூன்றில் ஒன்று எடுக்க வேண்டிய தருணம் அன்று.
ஐ.டி. நிறுவனத்தில் வேலைப் பார்க்கச் சென்றாலும் தான் படித்த படிப்பு வீண்போகக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். மற்ற இரண்டு நிறுவனங்களை காட்டிலும் 'அச்சில்' நிறுவனத்தில் சம்பளம் சற்று குறைவுதான் என்றாலும் தான் படித்த படிப்பை இணைக்கும் வகையில் ஐ.டி.யில் லைஃப் சயின்ஸ் பிரிவில் வேலைப் பார்க்கிற வாய்ப்பு என்கிற ஒரே காரணத்திற்காக, அச்சில் நிறுவனத்தில் வேலை செய்வதாக உறுதி கொடுத்தான். அவனுடன் சேர்த்து 2012 ஆம் ஆண்டு அச்சில் நிறுவனத்தில் வேலை கிடைத்த பலருக்கும் அந்த வருடத்தில் 'கால் லெட்டர்' வரவில்லை.
காலாவதியான கால் லெட்டர்கள்
நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமானது. அப்போது வரை நிறுவனத்திலிருந்து அவனுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் இருந்தது. நாட்கள் காத்திருப்பை அதிகரித்துக் கொண்டே வந்தன. இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாதோ? என்கிற வருத்தம், நண்பர்கள் எல்லாம் வேலைக்கு போகும்போது என்னால் போக முடியவில்லையே என்ற விரக்தி, இன்று வந்திடுமோ நாளை வந்திடுமோ இப்படி ஐயத்திலே ஒவ்வொரு நாளும் காத்திருப்பில் கடந்தது.
அந்த வருடத்தில் கால் லெட்டர் கிடைத்த சிலருக்கும் கால் லெட்டர் வந்துவிட்டதால் உங்கள் அனைவருக்கும் வேலை நிச்சயம் என்று கிடையாது. 'ஒரு தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் மெரிட் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். மற்றவர்களைப்பற்றி நாங்கள் பின்பு கூறுவோம்' என்று நிறுவனம் உரைத்த செய்தி அந்த வருடத்தில் சேர்ந்த பல ஊழியர்களை பாதித்தது.
இனிமேலும் காத்திருந்து என்ன நடக்கப் போகிறது? இந்த ஐ.டி'லாம் நமக்குப் பகல்கனவு தான். இனியும் காத்திருப்பதில் பயன் ஏதும் இல்லை என்கிற சிந்தையில் பேங்க் தேர்வு எழுதி வெற்றி பெற்று கிளெர்க்காக வேலைக்குச் சேர்ந்தான்.
சவுக்கடி மின்னஞ்சல்
நான்கு வருடம் பொறியியலை காதலுடன் படித்தவனுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைப் பார்க்கவில்லையே என்கிற வருத்தம். 2012 ஆம் ஆண்டு வேலைக்கு சேர வேண்டியவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் கழித்து நிறுவனத்திடம் அழைப்புக் கடிதம் வந்தது:
'வாழ்த்துக்கள் நீங்கள் அடுத்த மாதம் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த வேலையில் சேர விருப்பம் இல்லை என்றால், உடனடியாக இரண்டு நாட்களுக்குள் சொல்லி விடவும்' என்று அக்கடித்தில் எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்து அமைதியாக தான் எடுத்த முடிவு தான் சரி என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். இதே கடித்ததை பெற்ற என் தோழி ஒருத்தி இதைக் கண்டு வெகுண்டெழுந்தாள் 'ஒன்றரை வருடங்கள் ஆகிறது, எனக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததே மறந்து போச்சு. இன்று உங்கள் கடிதத்தை கண்டதும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் உங்களுக்காக வருடங்களாக காத்திருக்கிறோம்... உங்களால் உங்களது மெத்தனத்திற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்க முடியாதா? எத்தனை திறமைசாலிகளின் கனவை நீங்கள் உடைத்துள்ளீர்கள் என்று தெரியுமா? எவ்வளவு ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அது என்ன இரண்டு நாட்களுக்குள் பதிலை சொல்லு என்று கெடு விதிக்கின்றீர்கள்? எங்களது மின்னஞ்சல்களுக்கு பதில் சொன்னீர்களா? அழைப்புகளுக்கு பதில் சொன்னீர்களா? இருந்தாலும் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன் 'பங்குச் சந்தையில் உங்கள் நிறுவனத்தின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். மீண்டும் உங்களது பங்குகள் இறங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது; அப்படி கீழிறங்கும் பட்சத்தில் என்னைப் போன்றவர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கு நீங்கள் கொஞ்சமும் தயங்கமாட்டீர்கள் என்று நான் நன்கு அறிவேன். மனிதர்களை மதிக்கத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் நான் இப்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனிதாபிமானமற்ற உங்கள் நிறுவனத்தின் வேலை எனக்கு நிச்சயம் வேண்டாம். இதை நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கொண்டு செல்லுங்கள், எனக்குக் கவலையில்லை' என்று சவுக்கடி வரிகளில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினாள்.
தமிழகத்தில் அமைந்துள்ள சேவை சார்ந்த ஐ.டி நிறுவனங்கள் பலவும் மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்வதில்லை.
நாங்க இருக்கோம்
'ஆமாண்ணா.. இங்க வாங்க.. அவர் சொன்னத நாம எப்படி மூணு மாசத்துக்குள் முடிக்கறது? இதுல இருக்குற வேலையை பார்த்தா டெவெலப்மென்ட், டெஸ்டிங் எல்லாம் சேர்த்து குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகுமே!' என்று நண்பன் ஒருவரிடம் கேட்டான். அவர் 'இல்லைடா, அது மூன்று மாசம் இல்லை இன்னும் இரண்டு மாசத்துக்குள் முடிக்கணும். ஆமா, என்னை ஏன் நீங்க அண்ணான்னு கூப்படறீங்க? நானும் உங்க பேட்ச் தான், இந்த ப்ராஜெக்டல நாங்க மூணு மாசமா வேலை செய்யறோம். அப்பவே இத முடிக்க ஒரு வருஷம் ஆகும்ன்னு ஒருத்தர் சொன்னாரு. அது இப்போ தான் இவங்களுக்கு புரிஞ்சிருக்கு. இன்னும் இரண்டு மாசத்துல முடிச்சாகணும்னு புடுங்கறாங்க. நான் மூணு வாரமா இங்கயே இரண்டு மணி வரைக்கும் வேலை பார்க்கிறேன். சில சமயத்துல 48 மணி நேரம் தொடர்ந்து வேலைப் பார்க்கிற மாதிரி ஆகுது.. சன்டேவும் எங்களுக்கு விடுமுறை கிடையாது' என்றார்.
'இப்போ தான் இந்த வேலை முடிக்க ஆள் தேவைன்னு உங்களலாம் சேர்த்திருக்காங்க, காசாகும்.. ப்ராஜெக்ட் பட்ஜெட்ன்னு சொல்லி சீனியர்களையும் சேர்க்கல. இந்த மேனேஜர்க்கும் டெக்னிகலா எதுவும் தெரியல. எதாவது வடை சுட்டு முடித்துக் கொடுக்கிறோம்ன்னு வாக்கு கொடுத்திடராறு. அதுக்கு ஏற்ற மாதிரி ஆளுங்களையும் எடுக்கணும்.'
'சரி எதுக்கு பாஸ், இப்படிலாம் கஷ்டப்படறீங்க? உங்க பிரச்சினைய HR - Human Resource (மனிதவளம்) பார்வைக்கு கொண்டு போக வேண்டியதுதானே?' என்றேன்.
'பாஸ் அதுலாம் உங்களுக்கு தான் நான் பச்சை டாக் (Green Tag) போட்டிருக்கேன் உங்கள மாதிரி ப்ளூ டாக் (Blue Tag) போடலை. நாங்கலாம் டெம்ப்ரவரி வொர்க்கர். இங்க இரண்டு வருஷம் இப்படி வேலை பார்த்தாதான் இந்த மேனேஜர் ரெகமெண்ட் செய்து எங்களை பெர்மனேன்ட் ஆக்குவாறு!' என்று பதில் வந்தது.
ஏன் பாஸ் நீங்க இன்ஜினியரிங் படிக்கலியா? என்றேன். 'இல்லை பாஸ் நான் பீ.ஈ. கம்ப்யூட்டர் சைன்ஸ் தான். நான் ரூரல்ல (Rural) படிச்சேன் நான் படிச்ச கல்லூரியில கேம்பஸ் ப்ளேஸ்மென்ட் கிடையாது. வேலை தேடி அலைஞ்சி பாருங்க அப்போ உங்களுக்கு தெரியும் ஒரு வேலை வாங்கறர்து எப்படின்னு! நாங்கலாம் உங்களுடைய இப்போதைய லெவல் தொடுவதற்கு இரண்டு வருஷமாவது கடினமாக உழைக்கணும். அப்போ கூட இவங்க என்ன செய்வாங்கன்னு தெரியாது.
பரீட்சை எனும் வேலி
என் உறவினர் வேலை பார்க்கும் மற்றொரு பிரபலமான ஐ.டி நிறுவனத்தில் பி.எஸ்.சி படித்தவர்களை பொறியியளார்கள் பணியில் அமர்த்தி பணி நேரத்திற்கு பிறகு ட்ரெய்னிங் அளிக்கின்றனர். விடுமுறை நாட்களில் அவர்கள் புகழ்பெற்ற கல்லூரியில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் எடுத்து வார முடிவுகளில் வகுப்புகளில் பங்குபெற்று கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் முதுகலை படித்து முடிக்க வேண்டும். அப்படி படித்து முடித்தால் மட்டுமே அவர்களால் இருபதாயிரத்தை பார்க்க முடியும்.
பாட அமைப்பு அவர்களை குறைந்த பட்சம் மூன்று வருடமாவது படிக்க வைக்கும்படி அமைந்திருக்கும். மூன்றாம் வருடத்தின் இறுதியில் சுமார் அறுபது சதவீத மக்கள் தான் தேர்ச்சி பெறுவார்கள். மீதமுள்ளவார்கள் மீண்டும் படிக்க வேண்டும். அப்போது தான் நிரந்தரமாக்கப்படுவார்கள்.
இது ஒருவகையான நூதனமான திருட்டு இது. 'ஒரு மனித வளத்திற்கு குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வெளிநாட்டு வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் வாங்குகிறார்கள். அதுவும் பொறியியல் படித்து கேம்பஸ் இன்டர்வியுவில் வேலைக்கு வரும் ஊழியனுக்கு குறைந்தது இருபதாயிரம் அளிக்கப்பட வேண்டும் என்பதால் அவனுக்கு பதிலாக ஒரு பி.எஸ்.சி படித்தவனை எடுத்தால் பத்தாயிரம் கொடுத்தால் போதுமானது. அதுவும் இந்த முதுகலை படித்து முடிக்கும் வரை அவன் வேறு நிறுவனங்களைத் தேட மாட்டான். அதுவரை அவனுக்கு அளிக்கும் சம்பளமும் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தைத் தான் அளிக்கப் போகிறது என்கிற எண்ணம்.
ரிசோர்ஸ் கட் டவுனின் (Resource Cut Down) பின்புலம்
இந்த அநியாயங்களின் அடுத்த உச்சம் தற்போது தேநீர்சிஸ் நிறுவனத்தில் நடந்து வரும் ரிசோர்ஸ் கட் டவுன் (Resource Cut Down). தற்போது நிறைய பேரை வேலையை விட்டு நீக்கியதற்கு, அவர்கள் சரியாக வேலைப் பார்க்காத காரணத்தால் நிறுவனம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கூறுகிறது. இது உண்மை தானா? சற்று உற்று நோக்குவோம்.
நீக்கப்பட்டவர்கள் யார்?
முதலில் வேலையில் ஒருவன் புதிதாக சேர்கின்றபோது அவனுடைய போஸ்ட் 'Trainee' எனப்படும். அதன் பின் படிப்படியாக அவன் நிறுவனத்திற்கு பங்களிக்கின்ற விதம், அவனது பதவியை மேல் எடுத்துச் செல்கிறது. இன்று தேநீர்சிஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்ட பலரும் இரு வகையில் விழுகின்றனர் ஒருவர் 'Trainee' மற்றொருவர் 'Associate Consultant'.
ப்ராஜெக்ட் கிடைப்பதற்காக மாதங்களாக காத்திருப்பவர்கள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பொதுவாக சிலர் ஏமாற்றும் எண்ணத்துடன் கிடைக்கின்ற ப்ராஜெக்ட்களுக்கு நொட்டை கூறி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கப் பார்ப்பதுண்டு. வேறு சிலர் நிறைய முயற்சிகள் எடுத்தும் ப்ராஜெக்ட் ஏதும் இல்லாத காரணத்தால் காத்திருப்பதும் உண்டு; இந்த இரண்டு பிரிவுகளில் உள்ளவரையும் கரிசனம் பார்க்காது நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியுள்ளது.
அடுத்ததாக consultant-களுக்கு வருவோம். யார் இவர்கள்? அடிப்படையாக ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்தவர்களால்தான் இந்த பதவியை எட்ட முடியும். இன்று நிறுவனம் இந்த மனிதர்கள் பலரை எப்படி தகுதியற்றவர் எனக்கூறி நீக்கியுள்ளது? இவர்கள் உண்மையிலே தகுதியற்றவர்கள் என்றால் எதற்காக இத்தனை ஆண்டுகள் இவர்களை நிறுவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
Associate Consultant பதவியில் இருப்பவர்கள் மாதத்திற்கு குறைந்தது ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு இவர்கள் இடத்தில் வேறொரு ஆளை புகுத்தி விட்டால் அவர்களுக்கு இருபதிலிருந்து, முப்பதாயிரம் வரை சம்பளம் கொடுத்தால் போதும். அதுவும் புதிதாக இணைந்துள்ளவர்களைப் பயன்படுத்தினால் இருபதாயிரம் கொடுத்தால் போதுமானது. இதுதான் ஐ.டி. நிறுவனங்களின் காஸ்ட் கட்டிங் (Cost Cutting) முறை.
'ஷாக்' விளைவுகள்
நண்பன் கூறுகையில், இப்போதெல்லாம் என் டீம் லீட் தினமும் வந்தவுடன் மெயில் எதாவது வந்ததா என்று கேட்கிறார். எல்லோர் மீதும் அவருக்கு நம்பிக்கை போய் விட்டது. வெளிநாட்டிலும் இதுதான் நடக்கிறது. இங்கே டிஸ்மிஸல் லெட்டரை கொடுத்து ஒரு மாத ஊதியம் கொடுத்து ஒரே நாளில் கிளம்பச் சொல்கிறார்கள், வெளிநாட்டில் ஒரு மாத கெடுவாம்.
அங்க ஃபாரின்ல இருப்பவர் தினமும் போன் பண்ணி ஏதாவது சொன்னாங்களா? என்று தான் முதலில் கேட்கிறார். பக்கத்து டீம்'ல காத்தால வந்தவர் சாப்பிட போய் இருக்காரு. வந்தவருக்கு ஹெச்.ஆர்.கிட்டேந்து ஒரு மெயில் 'உங்கள வேலையை விட்டு தூக்கறோம்ன்னு' அப்படியே ஷாக்காகி உட்கார்ந்தவர் சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பிட்டார்.
அநியாயம் பண்றாங்க இங்க நிறைய பேர் ஹவுசிங் லோன், அது இதுன்னு இறக்கி விட்டுறுக்காங்க. பேமிலி மேன் - எங்கள வேலையை விட்டு தூக்கிட்டா நாங்க குடும்பத்த எப்படி காப்பாற்றுவதுன்னு ஒவ்வொரு நாளும் கவலைபடறாங்க. இந்த இடம் இப்போ வேலைப் பார்க்குற இடம் மாதிரியே இல்லை. நாளைக்கு இவங்களோட ஹெல்ப் இல்லாம நாங்கல்லாம் எப்படி வேலைப் பார்க்க முடியும்?
எத்தனையோ வருடம் தேநீர்சிஸ் நிறுவனம் ஸ்டாக் மார்க்கெட்டில் பெரிய பெரிய லாபங்களை ஈட்டிருக்கு. அப்பலாம் அதுக்கு காரணமா இருந்த ஊழியர்களுக்கெல்லாம் ஊதியத்தை ஏற்றியா கொடுத்திருக்கு? நிறுவனத்திற்காக உழைத்தவர்களை Poor Performers என்று பொய்யாக பட்டம் கட்டி வேலையை விட்டு அனுப்புவது அநீதியானது.
தன்னுடன் இருப்பவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும், தன் வேலை போகாமல் இருந்தால் சரி என்ற நோக்கத்துடன் பிற ஊழியர்கள் இன்னும் சுயநலமாக அமைதிகாப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.
வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்தே பழகிய முதுகெலும்புகள் இன்று ரப்பர் துண்டாக மாறி வருகின்றன. முதலாளித்துவத்தின் உச்சபட்ச பசிக்கு இன்று உணவுகள் கூடிக் கொண்டே போகின்றன. தீராப் பசிக்கு உணவாக - என்றுதான் உறைக்குமோ?
கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்று, சமூக சேவைக்கு லட்சக் கணக்கில் பணம் ஒதுக்குகிறார்கள். உங்களிடம் வேலை பார்ப்பவனும் சமுதாயத்தில் ஓர் அங்கம் தானே? அவனுடைய நல்வாழ்வுக்கு யார் சார் ரெஸ்பான்சிபிள்?

Thursday, January 1, 2015

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் உண்மை நிலை

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் உண்மை நிலை
1. மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்?
மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.
நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் சேர்கின்றது அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால், நமக்குள் அது வலிமை பெறுகின்றது.
விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும்,
வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின்,
நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
ஏனென்றால், மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியபின், விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக, மாட்டின் சாணம் வெளிப்படுகின்றது. ஆகவே, விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின் சாணத்திற்கு உண்டு.
ஆகையால், ஞானிகள் “மாட்டின் சாணத்தை வீட்டில் தெளி” என்றார்கள். மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால், நம்மால் வெளியிடப்பட்டு, வீட்டில் பதிந்துள்ள சங்கடம், சலிப்பு, வேதனை, போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.
2. எந்த எண்ணத்துடன் கோலம் போடவேண்டும்?
அதே மாதிரி வீடுகளில் கோலம் போடுவார்கள். இது சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. கோலம் எதற்காகப் போடுகிறார்கள்? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.
கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.
நாம் நமது வீட்டில் கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால், மாமியார் மீது வெறுப்பு, மாமனார் மீது வெறுப்பு, கணவர் மீது வெறுப்பு என்று மனதில் வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால் எப்படியிருக்கும்?
இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது, பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.
குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி
கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
ஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும், இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், இங்கு கோலமிட வேண்டும்.
ஆக, சாஸ்திரங்கள் காண்பித்த தத்துவங்கள் பொய்யல்ல. நாம் தெளிவாக இதையெல்லாம் தெரிந்து அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ்வோம்.