Sunday, September 28, 2014

காசியின் மகிமை

காசியின் மகிமை

பருந்து பறக்காத - பல்லி ஒலிக்காத நகரம்!
சில தலங்களுக்கென தனித்துவங்கள் உண்டு. காசிக்கு ஐந்து அதிசயங்களைச் சொல்வார்கள். காசியில் கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்ப தில்லை; மாடு முட்டுவதில்லை; பூக்கள் மணப்ப தில்லை; எரிக்கப்படும் பிணங்கள் நாறுவதில்லை.
இந்த அதிசயங்களில் காசியில் கருடன் பறக் காமைக்கும் பல்லி ஒலிக்காமைக்கும் காரணமானவர் பைரவர்தான். காசி நகரைச் சுற்றி 45 மைல் பரப் பளவில் கருடன் பறப்பதில்லை என்கிறார்கள்.
இராவணனை வதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்ய நினைத்தார் இராமபிரான். காசிக்குச் சென்று சிவலிங்கம் ஒன்று கொண்டு வருமாறு அனுமனுக்குக் கட்டளையிட்டார். அனுமன் காசிக்குச் சென்றார். அங்கு எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்கள் இருந்தன. அந்த லிங்கங்களில் எந்த லிங்கம் சுயம்பு லிங்கம் என்று புரியாமல் தடுமாறினார் அனுமன்.
அந்த நேரத்தில் அவருக்குத் துணை செய்ய நினைத்தார் மகாவிஷ்ணு. விஷ்ணுவின் அருளால் அவருடைய வாகனமான கருடன் ஒன்று பறந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட லிங்கத்துக்கு மேல் வட்டமடித்தது. பல்லியும் அதே நேரத்தில் நல்லுரை சொல்வதுபோல ஒலித்தது.
இந்த இரண்டு குறிப்புகளையும் புரிந்து கொண்ட அனுமன், அந்த லிங்கம்தான் சுயம்பு லிங்கம் என்று உணர்ந்து, அச்சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் பறக்கலானார்.
காசிக்கு காவல் தெய்வம் பைரவர். எட்டு பைரவர்கள் காசி நகரின் எட்டு திசைகளிலிருந்து காவல் செய்வதாக ஐதீகம்.
சிவலிங்கத்துடன் வந்த அனுமனைத் தடுத்த பைரவர், ""என்னுடைய அனுமதியில்லாமல் காசியில் இருக்கும் லிங்கத்தை நீ எப்படி பெயர்த்துச் செல்லலாம்?'' என்று கேட்டார்.
அனுமன், பைரவரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், ""என் தெய்வமான இராமபிரானின் உத்தரவு. அதனால் லிங்கத்தை எடுத்துக் கொண்டு செல்கிறேன்'' என்று சொன்னார்.
அனுமனின் பதிலில் திருப்தியடையாத பைரவர் அனுமனுடன் சண்டையிட்டார். இருவருக்கும் கடும் போர் நடந்தது. வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அந்தப் போர் அமைந்தது. அவர்கள் இருவரும் சண்டை யிட்டுக் கொள்வதைக் கண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் கவலையில் ஆழ்ந்தார்கள். அவர் களுள் சிலர் காசி நகரை நோக்கி விரைந்தார்கள். கால பைரவரை வணங்கினார்கள். ""சுவாமி! உலக நன்மைக்காக இந்த சிவலிங்கத்தை எடுத் துக் கொண்டு தென்னாடு போக அனுமனுக்கு அனுமதி தரவேண்டும். ஸ்ரீஇராமபிரான் இந்த லிங்கத்துக்குப் பூஜை செய்வதற்காக சேதுவில் காத்திருக்கிறார். எனவே அனுமனை அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்கள்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி னார் பைரவர். மனசாந்தி அடைந்தார். சிவலிங்கத் தைக் கொண்டு போக அனுமதித்தார்.
அனுமனுக்குச் சரியான லிங்கத்தை அடை யாளம் காட்டியது கருடனும் பல்லியும். அனு மனுக்குத் துணைபுரிந்த கருடன் இனிமேல் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும்; காசியில் பல்லிகள் இருந்தாலும் அவை ஒலிக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார் பைரவர்.
பைரவரின் கட்டளைப்படிதான் காசியில் இன்றும் கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை என்கிறார்கள்.

Monday, September 22, 2014

சிவாஜி - ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை தன்னை தேடிவந்து பார்க்கச் செய்தவன்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய காலகட்டம் அது.
ஆனால்,
அமெரிக்கா சென்றபோது அதே சூப்பர் ஸ்டார்களை தன்னை தேடிவந்து பார்க்கச் செய்தவன், நம் தமிழ்மண்ணின் தவப்புதல்வன் சிவாஜி கணேசன்.
சிவாஜியின் நடிப்பாற்றலை கேள்விப்பட்டு அவருடன்
சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு தங்கள்
வீடுகளுக்கே அழைத்துச் சென்று உபசரித்தார்கள் அந்த ஹாலிவுட் ஸ்டார்கள்.
"காட்பாதர்" கதாநாயகன் மார்லன் பிராண்டோ,
"பென் ஹர்" நாயகன், சார்டன் ஹெஸ்டன், டென்
காமாண்ட்மெண்ட்ஸ்சில் கலக்கிய "பூல்பிரன்னர்"
உள்பட ஹாலிவுட் பஞ்ச பாண்டவர்கள் மத்தியில்,
எவ்வளவு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது நமது தமிழ் சினிமா..

ரசாயனப் பால்! – சும்மா கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க. அதிர்ச்சியாகிடாதீங்க.

ரசாயனப் பால்! – சும்மா கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க. அதிர்ச்சியாகிடாதீங்க.
கிராமத்தில் கூட்டறவு பால் வழங்கும் சங்கம்னு இருக்கும். அந்தந்த பகுதியில கறந்த பால எடுத்துகிட்டு வந்து ஒரு இடத்தில் அளந்து ஊற்றுவார்கள். இன்னாருடையது இவ்வளவு லிட்டர் என குறிப்பெடுத்துக்கொண்வார்கள்.அதை கேன்களில் ஏற்றி ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ப்பார்கள். பிறகு நாற்பது லிட்டர் கேன்களில் ஊற்றி வைப்பார்கள். அதில் ஐந்து லிட்டர் பால் எடுத்துவிட்டு, மனச்சாட்சி இருந்தால் மூன்று லிட்டர் பால் எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றுவார்கள். ஐநூறு கிராம், அல்லது முன்னூறு கிராம் சர்க்கரையை போட்டு கலக்கிவிட்டால் போதும். லேக்டா மீட்டரில் கண்டுபிடிக்க முடியாது.
அப்புறம் அந்த பால் கேன்களை எல்லாம் லாரியில் ஏற்றிச் செல்வார்கள். அதிலுள்ள கிளீனர், டிரைவர் சாமார்த்தியத்திற்கு ஏற்ப கை வைத்துவிட்டு பதிலுக்கு கொஞ்சம் தண்ணீர்.இப்படியாக அந்த பகுதியில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்திற்கு போய் சேரும்.
அங்க பெரிய தொட்டியில கேன் கேனா எடுத்து கவிழ்ப்பார்கள். கொழுப்பை பிரித்தெடுத்து பதப்படுத்தப்பட்ட பாலா மாற்றுவதற்காக நீண்ட சில்வர் குழாய்களில் ஓடியபடியே இருக்கும். அப்படி நூறு கேன்களை எடுத்து கவிழ்த்தால் நான்காயிரம் லிட்டர் பால்…கூடவே அனாமுத்தா ஒரு ஐந்து கேன்கள் தண்ணீர் எடுத்து ஊற்றுவார்கள். பால் அப்படி இப்படியுமாக கீழே சிந்தி சேதாரமாகுமில்ல. அதை ஈடுகட்டவாம். லட்சக்கணக்கான லிட்டர் பால் என்றால் எவ்வளவு தண்ணீர்….?
இப்படி குளிரூட்டி, கொழுப்பு நீக்கிய பால் பெரிய பெரிய லாரிகளில் ஏற்றி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு அனுப்புகிறார்கள்.அப்படி வரும்போது வழியில் பக்குவமாக சீல் உடைத்து ஆயிரம் இரண்டாயிரம்னு எடுத்துவிடுவார்கள். அங்கேயும் தண்ணீர் கலப்படம்.
ஒரு வழியாக அந்த வாகனம் நகரங்களில் உள்ள பால் பண்யைகளுக்கு வரும். அங்கு பதப்படுத்தி தரப்படுத்தும் வேலை. அங்கேயும் ஏராளமான பால் கீழே சிந்திகிக்கிடக்கும். ஆக இங்கேயும் ஈடுகட்டுவதற்கென்று தண்ணீர் கலப்பு.? அதோடு நின்றுவிடவில்லை. இன்னும் இருக்கிறது. மனதை தைரியப்படுத்திக்கொள்ளுங்கள்.
பிறகு அங்கிருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள பால் வினியோக நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வந்து அங்குள்ள டேங்கரில் நிரப்பிவிட்டுச் செல்வார்கள். அங்கே சில்லரையில் விற்பதற்காக இருக்கும் ஆட்கள், அவர்களின் பங்கிற்கு இரண்டு குடமோ, மூன்று குடமோ தண்ணீர் கலந்துவிடுவார்கள். அவர்களின் செலவுக்கு வேண்டுமில்லையா..அதற்காக கலப்பார்கள். நம்ப ஆட்கள் அட்டை வாங்கி வைத்துக்கொண்டு, ‘ --- பால்தான் பெஸ்ட்’ என்று குளிரிலும் மழையிலும் வரிசையில் நின்று வாங்குவார்களே அந்த பாலின் கதை இதுதான். இப்படித்தான்..
கிராமத்தில் உள்ளவார்கள் பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்து காய்ச்சி சாப்பிடுவார்கள். நகரத்தில் உள்ள நாம் தண்ணீரில் கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி சாப்பிடுகிறோம். அதுவும் ரசாயணக் கலவையோடு….!

பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?

பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?

சமூக இணையத்தளங்களில் அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்துவது பேஸ்புக் தளத்தைத்தான்.
இதில் உங்கள் எண்ணங்கள் கருத்துக்களை தமிழில் பகிர்வதற்கு நினைப்பீர்கள் ஆனால் பேஸ்புக் தளத்தில் நேரடியாக தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.

சரி நாம் இன்று பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இதற்க்கு Google Transliteration IME என்ற மென்பொருள் பயன்படுகிறது.

இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்

01. முதலில் இங்கு சென்று Google Transliteration IME
http://www.google.com/inputtools/windows/
என்ற மென்பொருளை Download செய்யவும்.
கீழே படத்தில் உள்ளது போல் Tamil என்பதை தெரிவு செய்து I agree to the Google.. என்பதில் மார்க் வைத்து Download செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.

02. இதனை உங்கள் கணினியில் Install செய்த பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் Taskbar -இல் EN என்று வந்திருக்கும் நீங்கள் EN என்பதில் கிளிக் செய்து TA Tamil (India) என்பதை தெரிவு செய்யவும்.

03. TA Tamil என்பதை தெரிவு செய்த பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் உங்கள் கணினி Desktop-இல் வரும்.

04. இப்பொழுது நீங்கள் பேஸ்புக் Skype எங்கு வேண்டுமானாலும் உங்கள் கணினியில் தம்ழில் டைப் செய்யலாம்!
நீங்கள் டைப் செய்யும்போது தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்.
உதரணத்திற்க்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

05. நீங்கள் தமிழில் டைப் செய்யும்போது ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டுமானால் CTRL+G கொடுக்கவும்.
திரும்ப தமிழில் டைப் செய்ய இதே போன்று CTRL+G கொடுத்தால் சரி…

Monday, September 8, 2014

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்

அல்சரை தவிர்க்க.........!
ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்

அதிசய பானம்......!!
A + B + C .... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும்எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.......!
விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்......!
இந்த பானம் அருந்துவதால் பயன்கள்......!
புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.......!
ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.......!
மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது......!
உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.
இரத்தத்தை சுத்தபடுதுகின்றது.
பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.......!
மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.......!
*உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.......!
^ கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்.......!
அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும்......!

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், திருத்தணி

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், திருத்தணி

------------------------[ Pls share ]------------------------------------------
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தின வரலாறு:

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.

ஆசிரியர் பணி என்றால் என்ன?

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

ஆசிரியர் தினம்:

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு:

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில்,  தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.

1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்:

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

Thanks: தமிழ் கல்சுரல் இந்தியா

Like us (y) : https://www.facebook.com/smallthingsbigmatter

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், திருத்தணி

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
ஆசிரியர் தின வரலாறு:
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.
ஆசிரியர் பணி என்றால் என்ன?
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
ஆசிரியர் தினம்:
தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு:
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.
1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டம்:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மகாமண்டபம்

 கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மகாமண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது படுவதையும், விளக்குகள் ஏதுமில்லாத நிலையில் சூரிய ஒளியில் ஒளிரும் சிவலிங்கத்தையும் படத்தில் காணலாம்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. 

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7
வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில்
கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால்
முடிவேயில்லை (இது சித்தர்களால்
மட்டுமே முடியும்).

செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

Posted Date : 09:00 (05/09/2014)Last updated : 09:00 (05/09/2014)
'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
இன்று.  விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய
பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில்
பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில்
வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு
இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின்
விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில்
வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று
அழைத்தார்கள் தலைவர்கள்.

இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில்
தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி
உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ்
கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார்.
ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து
கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா
எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ்.
எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம்
பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும்
குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று
அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில்
கோரல் நூற்பாலை யில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்
வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல்
ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார்.
விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது
தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு
விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர்
வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால்
அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து
ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி
ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி
ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு
மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே  சிதம்பரம்பிள்ளையின்
பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்
பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்
விடுதலை பெறும்" என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல்
முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து
புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த
கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?'
என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்று
வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.

அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை
வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,"இந்நூலின்
எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !" என்று குறிப்பிட்டார்.
சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார்.
மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார்.

அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதபதி வாலஸ் நினைவாக
தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை
நீங்காமலே வாழ்ந்து  தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர்
மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின்
மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய இதே தினத்தில்
உயிர் துறந்தார்.

Wednesday, September 3, 2014

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு! ..........

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு! ..........
குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை... - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்)
சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.
குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி.
அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது.
அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.
படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.
எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.
அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்). அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக் கிறது.
தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது.
அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.
படிப்பு, விளை யாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.
எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான் - 

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்;

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்

குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.

பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.

எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது ?

எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது ?
பொதுவாக ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு திசை சிறந்தது என்கிறது சாஸ்திரம். அதாவது சாப்பிடும்போது கிழக்கு நோக்கியும், வேதம் சொல்லும்போது தெற்கு நோக்கியும் மூத்ர விஸர்ஜனம் செய்யும்போது வடக்கு நோக்கியும் கால்களை அலம்பும்போது மேற்கு திசை நோக்கியும் செய்வது உத்தமம் என்கிறது சாஸ்திரம்.
ஆயுஷ்யம் ப்ராங்முகோ புங்க்தே யசஸ்யம் தக்‌ஷிணா முக: ஶ்ரீயம் ப்ராத்ங்முகோ புங்க்த ருதம் புங்க்த உதங்முக:
என்ற ஸ்லோகத்தின் படி...
கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நீண்ட ஆயுள்
தெற்கு திசை .... நல்ல புகழ் கிட்டும்
மேற்கு திசை ....நிறைய செல்வம் கிட்டும்
ஆனால் எக்காரணம் கொண்டும் வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது என தெரிய வருகிறது.

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் - பாஸ்ட் புட் கடைகள்

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்
1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை …
2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???
3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..
4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..
5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..
6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க … அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..
7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..
8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..
9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..
10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..
இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் …
- – தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்

உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்
‪#‎NESTLE‬ கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
‪#‎FAIR‬ & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
‪#‎VICKS‬ பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
‪#‎LIFE‬ BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
‪#‎COKE‬ மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.
‪#‎வெளிநாட்டு‬ கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
‪#‎ஹிந்தி‬ சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
‪#‎PIZZA‬ பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.
# கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
# Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
# நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!
● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.
● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!
+++++++++++++++++++++++++++++++

அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா..?

தெரிந்துகொள்வோம் : 

அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா..?

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுகனகான  ரூபாய் மிச்சமாகும்...

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு....

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்றத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்...

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்...

தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி  குடிக்கறாங்க...

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான்...!

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!
1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும்
அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க
வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்
முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்
தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய
கணவன் என்றோ,
மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில்
பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள்
பார்வை அவர்கள்
மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும்
அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும்
கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக
பொருந்தியிருக்க முடியாத
நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய
ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது
பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்
கேட்டு அவர்களின்
பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும்
அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம்
அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்
கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக
நாம் அறிந்து கொண்டு அவர்கள்
கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்
கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும்
இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்
செயலிழக்கச்
செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்
அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும்
இதை செய்து வைக்க
அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள்
உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்
பகுதிகளை பிறர் யாரும்
தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும்
அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,
அவசியமற்ற உதவிகளை செய்யும்
போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய
அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்
கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில்
இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும்
அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள்
குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்
திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப்
பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,
அதை கவனிக்கத் தொடங்குங்கள்.
கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.
நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள்
என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;
அது நாம் பெற்றோராக இருந்தாலும்
சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக
இருந்தாலும் சரி!

Monday, September 1, 2014

திருச்சி யில் பிறந்த அல்லது படித்த பிரபலங்கள் :

திருச்சி யில் பிறந்த அல்லது படித்த பிரபலங்கள் :
சி.வி. ராமன், ஏபிஜே அப்துல் கலாம்,M R ராதா திருச்சியில்
வசித்தார்கள்
டி.ஏ. மதுரம் திருச்சியில் 1918ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தவர்.டி.ஏ. மதுரம் (1918 -1974) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையும் பாடகியும் ஆவார்..
வாலி- ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில்(ஸ்ரீரங்கம்). தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார்
சுஜாதா- ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார்.அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
கல்கி- அவர்கள் ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்
ஜேம்ஸ் வசந்தன் (பிறப்பு: அக்டோபர் 1), தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் , நிகழ்ச்சித் தொகுப்பாளரும்மனா இவர் திருச்சியில் பிறந்து வளர்ந்தர்.
சிவகார்த்திகேயன் ஜே.ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியல் Engineering படித்தவர்
பிரசன்னா சாரநாதன் பொறியியல் கல்லூரியல் EEE படித்தவர்
பாலாஜி மோகன்- காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைபடத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் 25, 1987ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர்
விமல் தமிழ்நாட்டின், மணப்பாறை அருகில் உள்ள பணனான்கொம்பு என்னும் கிராமத்தில் பிறந்தவர். பின்பு இவர் சென்னைக்கு இடம் பெயர்ந்தார்
வெண்ணிலா கபடி குழு விஷ்ணு Campion School லில் பள்ளிப்படிப்பை முடித்தவர்
அசோகன் பிறந்து, வளர்ந்தது திருச்சி .
பரத் திருச்சிராப்பள்ளி யில் பிறந்தவர்.
நலன் குமாரசாமி ஜெ.ஜெ. பொறியியல் கல்லோரியில் படித்தவர்.
கிரிஷ், இந்திய பின்னணி பாடகர் திருச்சி
நெப்போலியன், இந்திய திரைப்பட நடிகர் திருச்சி
எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்
நீயா நானா கோபிநாத் திருச்சி தேசிய கல்லூரியில் படித்தவர்.
கவுதம் வாசு தேவ் மேனன் திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் படித்தவர்.
பென்சில் பட டைரக்டர் மணி நாகராஜ் திருச்சி St.Joseph's கல்லூரியில்படித்தவர்
a.r.murugadoss பிஷப் ஹீபர் கல்லூரியில் படித்தவர்.

Like