Saturday, October 15, 2016

சிவகார்த்திகேயன் அழுததற்கு காரணம் என்ன?: சொல்கிறார் வினியோகஸ்தர் சுப்பிரமணியம்

சென்னை: ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுதது குறித்து பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நடந்த ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி அழுதுவிட்டார். எங்களை நிம்மதியாக வேலை செய்யவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சிவகார்த்திகேயன் மேடையில் அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ரெமோ வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில்,

ரெமோ 
ரஜினிகாந்தின் சிவாஜி படத்திற்கு பிறகு நான் வாங்கி வெளியிட்டுள்ள படம் ரெமோ. வினியோகஸ்தர்கள் தான் தயாரிப்பாளர்களை தேடிச் சென்று படங்களை வெளியிடுவோம். ஆனால் ரெமோ தயாரிப்பாளர் ராஜாவோ என்னை தேடி வந்து படத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.

ராஜா 
நான் படங்களை வாங்கி வெளியிடும் வேலையை நிறுத்திவிட்டேன் என்று கூறியும் ராஜா கேட்கவில்லை. அனுபவம் உள்ள நீங்கள் தான் ரெமோவை வாங்க வேண்டும் என்று கூறி விற்றுவிட்டார்.
லாபம் 
ரெமோ படத்தை தமிழகம் முழுவதும் ரூ.30 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளனர். அதில் வினியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி லாபம் கிடைப்பது உறுதி.

சிவகார்த்திகேயன் 
ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுதது குறித்து அறிந்து அவருக்கு போன் செய்து பேசினேன். 'வேந்தர் பிலிம்ஸ்' மதனும், 'எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்' மதனும் சிவா புதுப்படத்தில் நடிக்க முன்பணம் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

மன உளைச்சல் 
எந்த மதனிடம் இருந்தும் முன்பணம் வாங்கவில்லை என்கிறார் சிவா. இரு தரப்பையும் நேரில் அழைத்து பேசினால் தான் உண்மை நிலவரம் தெரியும். இந்த மன உளைச்சலில் இருந்ததால் தான் சிவா மேடையில் அழுதுள்ளார்.